உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/05 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2005
நம் ராஜ்ய ஊழியம்—2005
km 3/05 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு புத்தகத்தை அளியுங்கள்; பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள். ஏப்ரல், மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளை அளியுங்கள். சபைக்குத் தொடர்ந்து வராமல், நினைவு ஆசரிப்புக்கு அல்லது/மற்றும் வேறு ஏதாவது விசேஷ தேவராஜ்ய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து போகிற நபர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் மீண்டும் சந்திக்கையில், கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிக்க கவனம் செலுத்துங்கள். முக்கியமாக, அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் நபர்களுடன் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள் புத்தகத்தை அளியுங்கள். தங்களுக்கு குழந்தைகள் இல்லை என்று வீட்டுக்காரர்கள் சொன்னால் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள்.

◼ புதிய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் சபைகளுக்குக் கிடைத்த உடனேயே அவற்றை பிரஸ்தாபிகளுக்கு வினியோகிக்க வேண்டும். இப்படிச் செய்வது, வெளி ஊழியத்தில் பிரஸ்தாபிகள் அவற்றை அளிப்பதற்கு முன்பாக அவற்றை வாசிக்க உதவியாக இருக்கும். அதைப் போலவே நம் ராஜ்ய ஊழியத்தையும் உடனடியாகப் பிரஸ்தாபிகளுக்கு வினியோகித்துவிட வேண்டும். சபை புத்தகப் படிப்பு மையங்களில் இதை வினியோகிக்கலாம்.

◼ வேறொரு நாட்டின் சபைக் கூட்டங்களிலோ அசெம்பிளியிலோ மாவட்ட மாநாட்டிலோ கலந்துகொள்ள தனிப்பட்ட விதத்தில் திட்டமிட்டிருந்தால் அவற்றின் தேதிகள், நேரங்கள், இடங்கள் பற்றிய தகவல்களை அந்த நாட்டின் கிளை அலுவலகத்திற்குக் கேட்டெழுதித் தெரிந்துகொள்ள வேண்டும். கிளை அலுவலகங்களின் விலாசங்கள் இந்த வருட இயர்புக்-கின் கடைசி பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

◼ ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205-TL), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்பம் (S-205b-TL) ஆகிய படிவங்களைச் சபை செயலர்கள் போதுமானளவு கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். இவற்றை லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்யலாம். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு வேண்டியவற்றை எப்போதும் கையிருப்பில் வைத்திருங்கள்.

◼ நினைவு ஆசரிப்பு தினம், 2005-⁠ல் மார்ச் 24-⁠ம் தேதி, வியாழக்கிழமை நடைபெறும். உங்கள் சபையில் பொதுவாக வியாழக்கிழமை கூட்டங்கள் நடைபெற்றால், ராஜ்ய மன்றம் கிடைப்பதைப் பொறுத்து வேறொரு நாளுக்கு அக்கூட்டங்களை மாற்றி வைக்கலாம். இது சாத்தியமில்லை என்றால், ஊழியக் கூட்டமும் பாதிக்கப்பட்டால், உங்கள் சபைக்கு பொருத்தமான நிகழ்ச்சிகளை மாத்திரம் வேறொரு ஊழியக் கூட்ட நிகழ்ச்சியோடு சேர்த்துக்கொள்ளலாம்.

◼ பிரபலமான பாணியில் பாடி பதிவுசெய்யப்பட்ட ராஜ்ய பாடல்கள் தற்போது யெகோவாவின் சாட்சிகள் மத்தியில் உலவி வருகின்றன. இந்தப் பதிவுகளை அமைப்பு அங்கீகரித்திருக்கிறதா என்பதை அறிய அநேக பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு போன் செய்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட பதிவுகளைப் பற்றி நாங்கள் அறிந்திருக்கிறோம்; ஆனால் அவற்றிற்கு எங்கள் அங்கீகாரம் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். தயவுசெய்து இந்தப் பதிவுகளை இன்டர்நெட் மூலம் பரப்புவதையோ அதிலிருந்து டௌன்லோடு செய்வதையோ தவிருங்கள். இந்த அறிவிப்பு, இவ்விஷயத்தைத் தெளிவுபடுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்