2005 “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு
1 மகத்தான போதகராக யெகோவா தேவன், அவருடைய வழிகளை நமக்குப் போதிப்பதற்கு நாம் கூடிவரும்படி ஏற்பாடு செய்கிறார். (ஏசா. 30:20, 21, NW; 54:13) இதை அவர் உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் மூலமாக ஏற்பாடு செய்கிறார்; அவர்கள், வருடாந்தர மாவட்ட மாநாடுகள் போன்ற கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள். (மத். 24:45-47, NW) “மாபெரும் சபையில் ஆண்டவரைப் [யெகோவாவைப்] புகழ்ந்திடுவேன்” எனப் பாடிய சங்கீதக்காரனைப் போலவே நாமும் உணருகிறோம். (சங். [திருப்பாடல்கள்] 26:12, பொது மொழிபெயர்ப்பு) யெகோவாவால் போதிக்கப்படுவது எத்தனை மதிப்புமிக்கது என்பதை தாவீது தெள்ளத் தெளிவாக அறிந்திருந்தார், கடவுளுடைய ஜனங்கள் கூடிவரும் போதெல்லாம் தானும் அங்கு இருப்பதற்கு அவர் தீர்மானமாய் இருந்தார்.
2 இந்த வருடம் நடைபெறவிருக்கிற “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் ‘மாபெரும் சபையினரில்’ ஒருவராக நீங்களும் இருப்பீர்களா? அப்படியென்றால் அதற்காகத் தயாராவதற்கு பின்வரும் தகவல்கள் உங்களுக்கு உதவும்.
3 ஒவ்வொரு நாளும் கலந்துகொள்ள இப்போதே திட்டமிடுங்கள்: “ஊக்கந் தளராதவனின் திட்டங்கள் நிச்சயமாகவே அனுகூலத்திற்கு உகந்தவை.” (நீதி. 21:5, NW) இந்த வார்த்தைகள், மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தாமதிக்காமல் திட்டமிடுவதன் மதிப்பை வலியுறுத்துகின்றன அல்லவா? ஆவிக்குரிய ரீதியில் புத்துணர்ச்சி அளிக்கும் இந்த நிகழ்ச்சியின் எந்தப் பகுதியையும் தவறவிடாதபடி மூன்று நாட்களும் கலந்துகொள்வதற்குத் தேவைப்படும் எல்லா ஏற்பாடுகளையும் ஞானமாய் இப்போது செய்ய ஆரம்பியுங்கள். விடுமுறை நாட்களும் பள்ளித் தேர்வுகள் நடக்கும் நாட்களும் இடத்திற்கு இடம் மாறுபடுவதால், அனைவருக்கும் வசதியான தேதிகளைத் தேர்ந்தெடுப்பது முடியாத காரியமாக இருந்திருக்கிறது. இதன் காரணமாக, இவ்வருடம் முதல் மாநாடுகளை முன்னதாகவே கார்காலத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அச்சமயத்தில் போக்குவரத்து, தங்கும் வசதி, மன்றங்கள் என அனைத்தும் இன்னும் சுலபமாக கிடைக்கும்.
இதற்காக நிச்சயம் நாம் இன்னுமதிகமாக திட்டமிட வேண்டியிருக்கும். வேலையில் விடுப்பு எடுப்பதற்கு உங்கள் முதலாளியிடம் கேட்க வேண்டியிருந்தால் உடனடியாகக் கேளுங்கள். விசுவாசத்தில் இல்லாத துணையுடன் உங்கள் திட்டங்களைக் குறித்து கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால் கடைசி நிமிஷம் வரை அதைத் தள்ளிப் போடாதீர்கள். எவ்விதமான சவால்களைச் சந்தித்தாலும் அவற்றை ஜெபத்தில் யெகோவாவிடம் விட்டுவிடுங்கள், ‘உங்கள் யோசனைகள் [அதாவது, திட்டங்கள்] உறுதிப்படுவதற்கு’ அவர் உதவுவார் என்ற நம்பிக்கையோடு இருங்கள். (நீதி. 16:3) அதோடு, எல்லா நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள உங்கள் பைபிள் மாணாக்கர்கள் எடுக்கும் முயற்சிகளில் அவர்களுக்கு உதவியாயிருப்பது ஞானமான செயலாகும்.
4 தங்குமிடங்கள்: உங்கள் வசதியைக் கருதி ஒவ்வொரு மாநாட்டு நகரத்திலும் அறை வசதி ஏற்பாடுகள் ஏற்கெனவே செய்யப்பட்டிருக்கின்றன. சிபாரிசு செய்யப்படும் தங்குமிடங்களுக்கான பட்டியல் கிடைத்தவுடன் அறிவிப்பு பலகையில் போடப்படும். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் தங்குவதற்காக ரூம்களை பெரும்பாலும் நம் சகோதரர்கள் குறைந்த விலைபேசி வைத்திருக்கிறார்கள்; ஆகவே ஹோட்டலை அல்லது லாட்ஜை தொடர்புகொள்கையில் நீங்கள் மாநாட்டிற்காக வந்திருப்பதைக் குறிப்பிடுங்கள். சகோதரர்கள் பேசி வைத்திருக்கும் விலையைச் செலுத்த மட்டுமே ஒத்துக்கொள்ளுங்கள். ஹோட்டல் முதலாளி அந்த விலைக்கு ரூமைக் கொடுக்க மறுத்தால், உங்கள் சபை செயலரின் மூலம் அறைவசதி இலாகாவிடம் இதை தெரியப்படுத்துங்கள். நீங்கள் தரும் ஒத்துழைப்பு, உயர்தர ஹோட்டல்களை குறைந்த விலையில் தொடர்ந்து ஏற்பாடு செய்ய கிளை அலுவலகத்திற்கு உதவும். உயர்தர ஹோட்டல்கள் பெரும்பாலும் மாநாட்டு வளாகத்துக்கு அருகிலிருக்காது என்பதை நினைவில் வையுங்கள். அறைகளைப் புக் செய்வதற்காக ஃபோன் செய்யும் முன் “அறை வசதி ஏற்பாடுகளோடு நீங்கள் எப்படி ஒத்துழைக்கலாம்” என்ற பெட்டியிலுள்ள குறிப்புகளை வாசியுங்கள். ஃபோன் செய்கையில் “ஹோட்டல் ரூமை புக் செய்ய சிறந்த வழி எது?” என்ற பெட்டியிலுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்.
5 விசேஷக் கவனிப்பு தேவைப்படுபவர்கள்: சகோதரர்களில் சிலர் தனக்குப் “பக்க பலமாக” இருந்ததாக அப்போஸ்தலன் பவுல் விவரித்தார். (கொலோ. 4:7-11, NW) அவர்கள் பல வழிகளில் உதவினார்கள்; அவருடைய தனிப்பட்ட தேவைகளைக் கவனித்துக்கொண்டது அதில் ஒரு வழியாகும். மாநாட்டைப் பொறுத்ததில் நாம் எப்படி மற்றவர்களுக்குப் “பக்க பலமாக” இருக்க முடியும்? வயதான பிரஸ்தாபிகள், சுகவீனர்கள், முழுநேர ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இன்னும் சிலருக்கும் போக்குவரத்து சம்பந்தமாகவோ தங்குமிடம் சம்பந்தமாகவோ நடைமுறை உதவி தேவைப்படலாம். இத்தகையவர்களைக் கவனித்துக்கொள்ளும் பிரதான பொறுப்பு உறவினர்களுக்கு இருக்கிறது. (1 தீ. 5:4) ஆனால், அவர்களால் முடியாவிட்டால், உள்ளூர் சபைகளிலுள்ள சக விசுவாசிகள் ஒருவேளை உதவலாம். (யாக். 1:27) விசேஷக் கவனிப்பு தேவைப்படுவோர் மாநாட்டில் கலந்துகொள்ள வெகு காலம் முன்னதாகவே திட்டங்களைப் போட்டுவிட்டார்களா என்பதை அவர்களுடைய புத்தகப் படிப்பு கண்காணிகள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.
6 பிரஸ்தாபிகளின் தங்குமிடத்திற்கான தேவைகளைக் குடும்பத்தாராலோ அவர்களுடைய சபையினராலோ உண்மையிலேயே கவனித்துக்கொள்ள முடியாதிருந்தால் அத்தகையவர்களுக்காக மட்டுமே ஸ்பெஷல் நீட்ஸ் ரூம் ரிக்வெஸ்ட் படிவங்கள் உள்ளன. அந்தப் படிவத்திலும் அனைத்து மூப்பர் குழுக்களுக்கு அனுப்பப்பட்ட 2004, டிசம்பர் 14 தேதியிட்ட கடிதத்திலும் உள்ள வழிகாட்டி குறிப்புகளின் அடிப்படையில் அந்தப் பிரஸ்தாபிகள் அதற்குத் தகுதியானவர்களா என்பதைச் சபையின் ஊழியக் குழு ஆராய வேண்டும். நல்ல நிலைநிற்கையிலுள்ள பிரஸ்தாபிகளுக்கும், ஒழுங்காக நடந்துகொள்கிற அவர்களுடைய பிள்ளைகளுக்கும் மட்டுமே இந்த ஏற்பாடு உள்ளது.
7 வேறொரு மாநாட்டில் கலந்துகொள்வது: இந்த வருடம் ஆங்கிலத்தில் அநேக மாநாடுகள் நடக்கும். ஒரே இடங்களில் நடக்கும் உள்ளூர் மொழி மாநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்காக, ஆங்கிலம் நன்கு தெரிந்தவர்கள் ஆங்கில மாநாட்டிற்கே செல்லும்படி உற்சாகப்படுத்துகிறோம்; உங்கள் சபை வேறு மொழி மாநாட்டிற்குச் செல்லும்படி நியமிக்கப்பட்டிருந்தாலும் இது பொருந்தும். அப்போதுதான் இருக்கைகள், பிரசுரங்கள், தங்கும் அறைகள் போன்றவை போதுமானளவு இருப்பதை உறுதி செய்ய முடியும். உங்களால் ஆங்கில மாநாட்டிற்கு செல்ல முடியுமென்றால், இந்தியாவில் மாவட்ட மாநாடுகள் நடைபெறும் இடங்களின் விலாசங்கள், ஏப்ரல் 2005, நம் ராஜ்ய ஊழியத்தில் இருப்பதைத் தயவுசெய்து பாருங்கள். சிபாரிசு செய்யப்படும் தங்குமிடங்களுக்கான பட்டியலை அல்லது வேறு தகவலைப் பெற விரும்பினால் சுயவிலாசம் எழுதிய, ஸ்டாம்ப் ஒட்டப்பட்ட கவரை அனுப்பி வைக்கத் தவறாதீர்கள். அந்த நகரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநாடுகள் நடைபெறவிருந்தால் நீங்கள் கலந்துகொள்ளவிருக்கும் மாநாட்டின் தேதிகளைக் குறிப்பிடுங்கள்.
8 வாலண்டியர்கள் தேவை: பிறருடைய தேவைகளைத் தாழ்மையுடன் கவனித்துக்கொண்டதில் இயேசு பரிபூரண முன்மாதிரி வைத்தார். (லூக். 9:12-17; யோவா. 13:5, 14-16) வாலண்டியர்களாக மாநாடுகளில் சேவை செய்பவர்கள் இதே போன்ற மனப்பான்மையைக் காட்டுகிறார்கள். மாநாட்டு இலாகாக்களில் தங்களுக்கு வந்து உதவுமாறு உள்ளூர் மாநாட்டு குழு அங்கத்தினர்கள் சீக்கிரத்தில் அழைப்பு விடுப்பார்கள். பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவும் வாலண்டியர்களாகச் சேவை செய்யவும் முக்கியமாய் மூப்பர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்கள் மனமுவந்து செய்யும் சேவை சபையிலுள்ள எல்லாருக்குமே சிறந்த முன்மாதிரியாய் அமைகிறது.—1 பே. 5:2, 3.
9 மற்றவர்கள் கவனிக்கும் விஷயங்கள்: ஒரு ஹோட்டலின் சேல்ஸ் மேனேஜர் இவ்வாறு சொன்னார்: “உங்கள் ஜனங்களை எங்களுக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற குரூப்புகளைப் போல் இல்லாமல் நீங்கள் ரொம்பவே கண்ணியமாக நடந்துகொள்கிறீர்கள். ஹோட்டல் பணியாளர்களை நீங்கள் கனிவாக நடத்துவதாகவும், அவர்களுக்கு டிப்ஸ் கொடுப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள். நீங்கள் தங்குகிற சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்கள் எல்லாருமே வேலை செய்ய விருப்பப்படுகிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்!” இன்னொரு ஹோட்டல் பிரதிநிதி இவ்வாறு சொன்னார்: “வேறு யாரையும்விட யெகோவாவின் சாட்சிகளோடுதான் காரியங்களை சுமுகமாகக் கையாள முடிகிறது.” உங்களுடைய நல்நடத்தையும் இந்தப் பாராட்டுகளுக்குக் காரணமாக இருக்கலாம். யெகோவாவுக்குத் துதி சேர்க்கும் விதத்தில் நாம் நடந்துகொள்வதைப் பார்த்து அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் என்பதைச் சற்றுக் கற்பனை செய்து பாருங்கள்.—1 பே. 2:12.
10 இந்த வருடம் தம்முடைய ஜனங்கள் ஆவிக்குரிய அறிவுரைகளைப் பெறுவதற்காகக் கூடிவரும்படி ‘உண்மையுள்ள விசாரணைக்காரர்’ மூலம் யெகோவா தேவன் ஏற்பாடு செய்திருக்கிறார். (லூக். 12:42) மூன்று நாட்களும் கலந்துகொள்ள முயற்சி தேவைப்படும் என்றாலும், அப்படிச் செய்வது மிகுந்த நன்மையளிக்கும். இந்த வருடம் “கடவுளுக்குக் கீழ்ப்படிதல்” மாவட்ட மாநாடு, இன்றும் என்றும் யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கான நம் தீர்மானத்தைப் பலப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகையால், “சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” என்ற சங்கீதக்காரனின் அறிவுரையைப் பின்பற்ற நாம் தீர்மானமாய் இருப்போமாக.—சங். 68:26.
[பக்கம் 3-ன் பெட்டி]
நிகழ்ச்சிநிரல் நேரம்
வெள்ளி, சனி
காலை 9:30 - மாலை 5:05
ஞாயிறு
காலை 9:30 - மாலை 4:10
[பக்கம் 4-ன் பெட்டி]
அறை வசதி ஏற்பாடுகளோடு நீங்கள் எப்படி ஒத்துழைக்கலாம்
◼ பட்டியலிலுள்ள ஹோட்டல்களை போன் மூலம் அல்லது முடிந்தால் நேரில் சென்று தொடர்புகொள்ள சொந்தமாகவே ஏற்பாடுகள் செய்யுங்கள்.
◼ உங்கள் தேவைகளை ஹோட்டல் நிர்வாகத்திடம் தெளிவாகச் சொல்லுங்கள்; அதே அறையில் கூடுதலான நபர்களைத் தங்க வைக்க விரும்புகிறீர்களா, அந்நபர்கள் பிள்ளைகளா அல்லது வயதுவந்தவர்களா போன்ற விவரங்களைக் குறிப்பிடுங்கள்.
◼ பட்டியலிலுள்ள ஹோட்டல்களுக்கு ஃபோன் செய்தும் அறைகள் கிடைக்காவிட்டால் அல்லது ஒரு ஹோட்டலில் உங்களுக்குப் பிரச்சினை ஏற்பட்டால், உங்கள் சபை செயலருக்கு அதைத் தெரியப்படுத்துங்கள். அவர் பட்டியலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மாநாட்டு அறை வசதி இலாகாவுடன் தொடர்புகொள்ள வேண்டும். அப்போது, கூடுதலான ஹோட்டல்களின் பெயர்கள் கொடுக்கப்படும்.
◼ உங்களுக்கு உண்மையிலேயே தேவைப்படும் அறைகளை மட்டுமே புக் செய்யுங்கள்.
◼ உங்கள் புக்கிங்கை உறுதி செய்வதற்கு புக் செய்த ஒவ்வொரு அறைக்கும் நீங்கள் முன்பணம் கட்ட வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் அறை வேறு யாருக்காவது கொடுக்கப்பட்டுவிடலாம்.
◼ ஒரு முறை புக் செய்த பிறகு அதை மாற்றாதீர்கள். வேறொரு நல்ல ஹோட்டல் கிடைத்துவிட்ட காரணத்திற்காக அதை மாற்றாதீர்கள்.
[பக்கம் 4-ன் பெட்டி]
ஹோட்டல் ரூமை புக் செய்ய சிறந்த வழி எது?
1. சிபாரிசு செய்யப்படும் தங்குமிடங்களுக்கான பட்டியலிலுள்ள ஃபோன் நம்பரை உபயோகித்து வேலை நேரத்தில் ஹோட்டலுக்கு ஃபோன் செய்யுங்கள்.
2. யெகோவாவின் சாட்சிகளுடைய மாநாட்டில் கலந்துகொள்கிறீர்கள் என்பதை அதன் நிர்வாகத்தாரிடம் தெரிவியுங்கள்.
3. ஹோட்டலில் எந்தத் தேதியிலிருந்து எந்தத் தேதி வரை தங்குகிறீர்கள் என்பதைக் குறிப்பிடுங்கள்.
4. அறைகள் கிடைக்காவிட்டால் பட்டியலிலுள்ள வேறொரு ஹோட்டலுக்குப் ஃபோன் செய்யுங்கள்.
5. பட்டியலில் குறிப்பிடப்பட்டதற்கும் அதிகமான வாடகைக்கு ஒத்துக்கொள்ளாதீர்கள்.
6. புக் செய்யுங்கள், பத்து நாட்களுக்குள் முன்பணத்தை டிமாண்டு டிராஃப்டாகவோ, மணி ஆர்டராகவோ அனுப்புங்கள். ஒருபோதும் ரொக்கமாக அனுப்பாதீர்கள்.
7. ரசீதையும், உங்கள் புக்கிங்கை உறுதிசெய்யும் குறிப்பையும் கேட்டுப் பெற்றுக்கொள்ளுங்கள்.