தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 27, 2004-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 1 முதல் டிசம்பர் 27, 2004 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. பேசும் பொருளின் மீது கேட்போரின் ஆர்வத்தைத் தூண்டுவதற்கு உதவும் மிகச் சிறந்த வழிகளில் ஒன்று எது? [be-TL பக். 218 பாரா 3]
2. திறம்பட்ட முடிவுரைக்கான ஐந்து சிறப்பியல்புகளைக் கூறுங்கள். [be-TL பக். 221 பாரா. 1-5]
3. நாம் திருத்தமான தகவலை அளிக்கிறோம் என்பதை எப்படி உறுதி செய்துகொள்ளலாம்? [be-TL பக். 224 பெட்டி]
4. கூட்டங்களில் நாம் கொடுக்கும் பேச்சுக்கள், “சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற” சபைக்கு மிகுந்த மதிப்புக் கொடுப்பதை எப்படி உறுதி செய்துகொள்ளலாம்? (1 தீ. 3:15) [be-TL பக். 224 பாரா. 1-4]
5. நடப்பு செய்திகளையும் மேற்கோள்களையும் அனுபவங்களையும் பேச்சில் பயன்படுத்துகையில் நீதிமொழிகள் 14:15-ஐ எப்படிப் பின்பற்றலாம்? [be-TL பக். 225 பாரா 1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. ஜலப்பிரளயத்திலிருந்து ஆதாமின் படைப்பு வரையான காலப்பகுதியை எப்படிக் கணக்கிடலாம்? [si-TL பக். 286 பாரா 12]
7. இயேசு ஊழியத்தை ஆரம்பித்த தேதி எப்படி கணக்கிடப்படுகிறது, அவர் மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஊழியம் செய்தார் என எப்படிச் சொல்ல முடியும்? [si-TL பக். 287 பாரா 16]
8. (அ) “எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை” பிறப்பிக்கப்பட்டது எப்போது? (ஆ) அது முதல், மேசியாவாக இயேசு வருவதற்கு எத்தனை வருடங்கள் கடந்து செல்ல வேண்டியிருந்தது? (தானி. 9:24-27) [si-TL பக். 291 பாரா. 18-19]
9. ‘உங்கள் சகோதரனோடே ஒப்புரவாகும்படி’ உள்ளப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதில் என்ன உட்பட்டுள்ளது? (மத். 5:23, 24) [w-TL02 11/1 பக். 6 பாரா. 1, 5]
10. கடவுள் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் வேலையை செய்து முடிப்பது பற்றி 2 இராஜாக்கள் 13:18, 19 என்ன கற்பிக்கிறது? [w-TL02 12/1 பக். 31 பாரா. 1-2]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. இரத்தம் நீக்கப்படாத இறந்த விலங்குகளை இஸ்ரவேலர் ஏன் தங்கள் மத்தியில் குடியிருக்கிற பரதேசிக்குப் புசிக்கக் கொடுக்கலாம் அல்லது அந்நியனுக்கு விற்றுப்போடலாம்? (உபா. 14:21)
12. உபாகமம் 20:5-7-ல் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்ன?
13. ‘திரிகையின் அடிக்கல்லையோ மேற்கல்லையோ அடகு வாங்குவது’ ஏன் “ஜீவனை” அடகு வாங்குவது போல் இருந்தது? (உபா. 24:6)
14. இஸ்ரவேலர் எந்தக் கொழுப்பையும் சாப்பிடக் கூடாதென தடைசெய்யப்பட்டிருக்கையில், ‘ஆட்டுக்குட்டிகளின் கொழுப்பை’ அவர்கள் சாப்பிடுவது எதை அர்த்தப்படுத்தியது? (உபா. 32:13, 14)
15. ஆகானின் பாவச் செயலுக்கு இணையானதாக இன்று எது உள்ளது? (யோசு. 7:1-26) [w-TL87 1/1 பக். 20 பாரா 20]