தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஆகஸ்ட் 30, 2004-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 30, 2004 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. நம் நம்பிக்கைக்கான காரணத்தை “சாந்தத்தோடும் ஆழ்ந்த மரியாதையோடும்” நாம் எப்படி விளக்கலாம்? (1 பே. 3:15, NW) [be-TL பக். 192 பாரா. 2-4]
2. உறுதியான நம்பிக்கையுடன் பேசுவது ஏன் முக்கியம்? (ரோ. 8:38, 39, NW; 1 தெ. 1:5, NW; 1 பே. 5:12, NW) [be-TL பக். 194]
3. உறுதியான நம்பிக்கையை எப்படி வெளிப்படுத்துவது? [be-TL பக். 195 பாரா 3 – பக். 196 பாரா 4]
4. சாதுரியம் என்றால் என்ன, அது ஏன் முக்கியம், சாதுரியமாகவும் அதேசமயத்தில் உறுதியாகவும் எப்படி இருக்கலாம்? (ரோ. 12:18) [be-TL பக். 197]
5. சாதுரியமுள்ளவர் பேசுவதற்கு முன்பு எதை எண்ணிப் பார்ப்பார்? (நீதி. 25:11; யோவா. 16:12) [be-TL பக். 199]
பேச்சு நியமிப்பு எண் 1
6. சத்தியத்தில் எந்தளவு வளர்ச்சி அடைந்திருக்கிறோம் என்பதை நம் உரையாடல்களும் பைபிள் படிப்பு பழக்கங்களும் எப்படி வெளிக்காட்டலாம்? [be-TL பக். 74 பாரா 3 – பக். 75 பாரா 2]
7. “வாய்ப்பான காலத்தை வாங்குங்கள்” என்றால் என்ன, அதை நாம் எப்படி செய்யலாம்? (எபே. 5:16, NW) [w-TL02 11/15 பக். 23]
8. கடவுளுக்கு முன்னால் எல்லாரும் சமம் என்பதை வேதாகமம் எப்படி தெளிவுபடுத்துகிறது, இது நம் ஊழியத்தை எப்படி பாதிக்க வேண்டும்? [w-TL02 1/1 பக். 5, 7]
9. யெகோவா என்ற தனித்தன்மைமிக்க பெயரின் முக்கியத்துவம் என்ன? [w-TL02 1/15 பக். 5]
10. காயீனுடைய பலியைவிட ஆபேலுடைய பலி எந்த விதத்தில் ‘மேன்மையானது,’ “ஸ்தோத்திர பலி” செலுத்துவது சம்பந்தமாக என்ன பாடத்தை இதிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்? (எபி. 11:4; 13:15) [w-TL02 1/15 பக். 21 பாரா. 6-8]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. எது சரி எது தவறு என்பது சம்பந்தமாக தவறான கருத்துக்கள் செல்வாக்கு செலுத்துவதைத் தவிர்க்க லேவியராகமம் 18:3 நமக்கு எப்படி உதவும்? (எபேசியர் 4:17-19) [w-TL02 2/1 பக். 29]
12. வாரப் பண்டிகையின்போது (பெந்தெகொஸ்தேவின் போது) ‘அசைவாட்டும் காணிக்கையாக’ ‘இரண்டு அப்பங்களை’ பிரதான ஆசாரியர் செலுத்தியது தீர்க்கதரிசன ரீதியில் எதற்குப் படமாக இருந்தது? (லேவி. 23:15-17) [w-TL98 3/1 பக். 13 பாரா 21]
13. எண்ணாகமம் 5-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கணவனுக்கு துரோகம் இழைத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் “இடுப்பு” எந்த அர்த்தத்தில் “சூம்பும்”? (எண். 5:27) [w84 4/15 பக். 29]
14. மிரியாமும் ஆரோனும், மோசேயின் எத்தியோப்பிய மனைவியின் நிமித்தம் ஏன் மோசேக்கு விரோதமாக பேசினார்கள்? (எண். 12:1)
15. ‘யெகோவாவின் யுத்த புஸ்தகம்’ என்பது என்ன? (எண். 21:15)