உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 5/04 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2004
நம் ராஜ்ய ஊழியம்—2004
km 5/04 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரு பத்திரிகைகளையும் சேர்த்து அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களை மறுசந்திப்பு செய்கையில், அமைப்புடன் நிரந்தர தொடர்பு வைத்திராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ மட்டும் வந்து போகும் நபர்களையும் சந்தியுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அவர்களிடம் அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திக்கும் ஆட்களுக்கு, முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் ஆட்களுக்கு பைபிள் படிப்பை ஆரம்பிக்க விசேஷ முயற்சி செய்ய வேண்டும். ஜூன்: பெரிய போதகரிடம் கற்றுக்கொள். தங்களுக்குக் குழந்தைகள் இல்லையென சொல்லுபவர்களுக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள். அந்த சிற்றேட்டை உபயோகிக்கையில் பைபிள் படிப்பை ஆரம்பிப்பதற்கு கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் இறக்கும்போது என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில்.

◼ நடத்தும் கண்காணியோ அவரால் நியமிக்கப்பட்ட ஒருவரோ சபை கணக்குகளை ஜூன் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் தணிக்கை செய்ய வேண்டும். இது முடிந்த பிறகு அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கையில் இதை சபைக்குத் தெரிவிக்கவும்.

◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) ​—⁠சிந்தி

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) ​—⁠ஒரியா, கொங்கனி, சிந்தி

◼ உவாட்ச்டவர் லைப்ரரி​—⁠2003 பதிப்பு (cdly03) சீக்கிரத்தில் சிடி-ராமில் கிடைக்கும். சபையாரில் கம்ப்யூட்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும், இதை சபை மூலமாகவே ஆர்டர் செய்ய வேண்டும். cdly03 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் cdly01 பதிப்புக்கான எல்லா ஆர்டர்களையும் நாங்கள் ரத்து செய்திருக்கிறோம். எனவே cdly01 பதிப்புக்காக ஆர்டர் செய்திருந்தவர்கள் தயவுசெய்து மீண்டும் cdly03 பதிப்புக்கு ஆர்டர் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:

கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் ​—⁠ஹிந்தி

மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) ​—⁠தமிழ்

குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) ​—⁠உருது

நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) ​—⁠ஆங்கிலம், குஜராத்தி, தெலுங்கு, மராத்தி

பைபிளைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விருப்பமா? (துண்டுப்பிரதி எண் 26) ​—⁠உருது

◼ நினைப்பூட்டுதல்: சபைகளுக்கு வருடாந்தர ஐட்டங்களுக்கான விசேஷ ஆர்டர் படிவம் (Special Request Form for Annual Items) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2004-ம் வருடத்திற்கான மாவட்ட மாநாடு பேட்ஜ் கார்டுகளுக்கும் வேதவாக்கியங்களை ஆராய்தல், இயர்புக், காலண்டர் போன்ற 2005-ம் வருடத்திற்கான வருடாந்தர ஐட்டங்களுக்கும் இது வரை ஆர்டர் செய்திராத சபைகள் இந்தப் படிவம் கிடைத்ததும் உடனடியாக ஆர்டர்களை அனுப்பி வைக்கவும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்