யெகோவா எதிர்பார்ப்பவற்றை நம்மால் செய்ய முடியும்
1 யெகோவாவின் சட்டங்களுக்கும் நியமங்களுக்கும் கீழ்ப்படிவதே இன்று மிகச் சிறந்த வாழ்க்கை முறையாகும்; இது நித்திய எதிர்காலத்திற்கு அருமையான அஸ்திவாரத்தைப் போடவும் நமக்கு உதவுகிறது. (சங். 19:7-11; 1 தீ. 6:19) எனினும் சாத்தானின் உலகம் நமக்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கிறது. நம்முடைய அபூரண தன்மையும் அதோடுகூட சேர்ந்துகொண்டு சூழ்நிலையை இன்னும் மோசமாக்குகிறது. நம் வேதப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற பாடுபடுகையில் சில சமயங்களில் திக்குமுக்காடிப் போகலாம். (சங். 40:12; 55:1-8) யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியுமாவென ஒருவேளை யோசிக்கவும் செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில் நம் ஆவிக்குரிய சமநிலையைக் காத்துக்கொள்ள எது நமக்கு உதவும்?
2 யெகோவாவின் கட்டளைகள் பாரமானவை அல்ல: யெகோவா நியாயமற்ற எதையும் நம்மிடமிருந்து எதிர்பார்ப்பதே இல்லை. அவருடைய கட்டளைகள் பாரமானவை அல்ல, மாறாக நம்முடைய நன்மைக்கானவையே. (உபா. 10:12, 13; 1 யோ. 5:3) ‘நாம் மண்ணென்று நினைவுகூருவதால்’ நம் குறைபாடுகளை அவர் அறிந்திருக்கிறார். (சங். 103:13, 14) கடவுளை சேவிப்பதற்கு நாம் சிறந்த முயற்சிகள் எடுத்தும் நம் சூழ்நிலை அவற்றை மட்டுப்படுத்தினால் அதை அவர் இரக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறார். (லேவி. 5:7, 11; மாற். 14:8) நம் பாரங்களை அவர்மீது போட்டுவிடும்படி அழைக்கிறார், விசுவாசத்துடன் நிலைத்திருக்க நமக்கு உதவுவதாகவும் உறுதியளிக்கிறார்.—சங். 55:22; 1 கொ. 10:13.
3 சகித்திருப்பது அவசியம்: உத்தமத்தைக் காத்துக்கொண்ட எலியா, எரேமியா, பவுல் போன்றவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள் நாம் சகித்திருக்க வேண்டுமென காட்டுகின்றன. (எபி. 10:36, NW) கஷ்ட காலத்திலும், சோர்வுற்ற சமயங்களிலும் யெகோவா அவர்களைக் காத்தார். (1 இரா. 19:14-18; எரே. 20:7-11; 2 கொ. 1:8-11) மேலும், இன்றைய காலத்தில் நம் சகோதரர்கள் காட்டும் உத்தமத்தன்மையால் நாம் உந்துவிக்கப்பட்டிருக்கிறோம். (1 பே. 5:9) அப்படிப்பட்டவர்களின் உதாரணங்களைக் குறித்து தியானிப்பது சோர்ந்துவிடாதிருக்க நமக்கு உதவலாம்.
4 கடவுளுடைய வாக்குறுதிகளில் வைக்கும் நம்பிக்கை “ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபி. 6:19) இது, யெகோவா சொன்னபடி தங்கள் வீட்டை விட்டு வெளியேறி, ‘வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப் போலச் சஞ்சரிப்பதற்கு’ ஆபிரகாமையும் சாராளையும் உந்துவித்தது. இது, மெய் வணக்கத்திற்காக அஞ்சா நிலைநிற்கையை எடுக்கும்படி மோசேயைப் பலப்படுத்தியது. இது, கழுமரத்தை சகிக்கும்படி இயேசுவை தயார்படுத்தியது. (எபி. 11:8-10, 13, 24-26; 12:2, 3) அதே போல, நீதியுள்ள புதிய உலகைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதி நம் இருதயத்தில் எப்போதும் ஒளிரும்படி செய்வது, தொடர்ந்து நிலைத்திருக்க நமக்கு உதவும்.—2 பே. 3:11-13.
5 கடந்த காலத்தில் நாம் உண்மைத்தன்மை உள்ளவர்களாக, சுயதியாகம் செய்கிறவர்களாக, தைரியமானவர்களாக இருந்ததை எண்ணிப் பார்ப்பதும்கூட ஊழியத்தில் நமக்கு ஊக்கமளிக்கும். (எபி. 10:32-34) யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் முழுமையான பக்தியை நாம் அவருக்கு செலுத்துகையில் கிடைக்கும் சந்தோஷத்தை அது நமக்கு நினைப்பூட்டுகிறது.—மத். 22:37.
[கேள்விகள்]
1. சில சமயங்களில் எப்படிப்பட்ட உணர்ச்சிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கலாம், ஏன்?
2. யெகோவா நம்மிடம் எதிர்பார்ப்பவற்றில் எப்படி நியாயமானவராக இருக்கிறார்?
3. சகித்திருக்கும்படி யெகோவா நம்மை எப்படி பலப்படுத்துகிறார்?
4. கடவுளுடைய வாக்குறுதிகளை எப்போதும் கண்முன் வைப்பது ஏன் முக்கியம்?
5. கடந்த காலத்தில் நாம் உத்தமத்தன்மையுடன் செயல்பட்டதை எண்ணிப் பார்ப்பது ஏன் ஊக்கமளிக்கும்?