அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: 1988-க்கு முன் பிரசுரிக்கப்பட்ட, சபையின் கையிருப்பில் உள்ள ஏதாவதொரு புத்தகம். இந்தப் பழைய பிரசுரங்கள் எதுவும் கையிருப்பில் இல்லாவிட்டால் நீங்கள் உபயோகிப்பதற்கு பக்கத்து சபைகளில் இவை அதிகம் உள்ளனவா என்பதை தயவுசெய்து கேட்டுப் பாருங்கள். பழைய புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத சபைகள் குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகத்தையோ இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் புத்தகத்தையோ அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால் அதற்கு பதிலாக உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? அல்லது வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! புத்தகத்தை அளிக்கலாம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். இந்தப் புத்தகம் ஏற்கெனவே ஜனங்களிடம் இருந்தால் தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! புத்தகத்தை அளிக்கலாம். ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! ஆகிய இரண்டு பத்திரிகைகளின் தனிப்பிரதிகளையும் அளியுங்கள். ஆர்வமுள்ளவர்களை மறுசந்திப்பு செய்கையில், அமைப்புடன் நிரந்தர தொடர்பு வைத்திராமல், நினைவு ஆசரிப்புக்கோ வேறு ஏதாவது விசேஷ நிகழ்ச்சிகளுக்கோ மட்டும் வந்து போகும் நபர்களையும் சந்தியுங்கள். கடவுளை வணங்குங்கள் புத்தகத்தை அளிப்பதில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் சந்திப்போரிடம், முக்கியமாக அறிவு புத்தகத்தையும் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டையும் ஏற்கெனவே படித்திருக்கும் சிலரிடம் எப்படியாவது ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்ய வேண்டும்.
◼ மார்ச் 15, 2004-ல் துவங்கும் வாரத்திலிருந்து, யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தை சபை புத்தகப் படிப்பில் கலந்தாராய்வோம். இந்தப் புத்தகம் தற்போது ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், வங்காளி, ஹிந்தி ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. சபை புத்தகப் படிப்பில் உபயோகிக்க இந்தப் புத்தகம் தேவைப்பட்டால் தயவுசெய்து உடனடியாக ஆர்டர் செய்யுங்கள்.
◼ இந்த வருடம் ஏப்ரல் 4, ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களை சுற்றி அனுப்புவதை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதை தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். அன்று வெளி ஊழியக் கூட்டத்தை தவிர வேறு கூட்டங்கள் நடைபெறாது என்பதால் காவற்கோபுர படிப்பை வேறொரு சமயத்தில் நடத்துவதற்கு பொருத்தமான மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும். அந்த வாரத்தில் வட்டாரக் கண்காணிகள் சூழ்நிலைகளுக்குத் தக்கவாறு தங்கள் அட்டவணைகளில் மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அந்தந்தச் சபை தனித்தனியாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதே; என்றாலும் எப்பொழுதும் அவ்வாறு நடத்த முடியாதிருக்கலாம். ஒரே ராஜ்ய மன்றத்தை இரண்டு மூன்று சபைகள் பயன்படுத்துகையில், வேறொரு இடம் பார்த்து அதில் ஒன்றுக்கு மேற்பட்ட சபைகள் நினைவு ஆசரிப்பை அனுசரிக்கலாம். அந்த நிகழ்ச்சியிலிருந்து எல்லாரும் முழு பயனடைய, அடுத்த சபை தன் ஆசரிப்பை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் 40 நிமிட இடைவெளி விடுவது நல்லது. காரிலிருந்து இறங்கி வரும்போதும் கூட்டம் முடிந்து கிளம்பும்போதும் வாகனங்களை நிறுத்துமிடத்தில் நெரிசலை தவிர்ப்பதற்கும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்னென்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தவை என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் —ஆங்கிலம், தமிழ்
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் —கன்னடம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
‘அந்த நல்ல தேசத்தைப் பாருங்கள்’ —ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (சிறிய பாட்டுப் புத்தகம்) —கன்னடம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) —நேப்பாளி
இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19) —அஸ்ஸாமீஸ்
மனச்சோர்வடைந்தோருக்கு ஆறுதல் (துண்டுப்பிரதி எண் 20) —அஸ்ஸாமீஸ்
குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) —அஸ்ஸாமீஸ்
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) —அஸ்ஸாமீஸ்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு —குஜராத்தி
கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள் —நேப்பாளி
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாட்டுகள்) —தெலுங்கு
சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15)—கன்னடம், குஜராத்தி, தமிழ், நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மிசோ, வங்காளி, ஷோங்கா, ஹிந்தி
மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? (துண்டுப்பிரதி எண் 16) —கன்னடம், கொங்கணி (கன்னடம் மற்றும் ரோமன் எழுத்துக்களில்), மிசோ
இந்த உலகம் தப்பிப்பிழைக்குமா? (துண்டுப்பிரதி எண் 19)—குஜராத்தி, தமிழ், மராத்தி, வங்காளி, ஹிந்தி
அழியாத ஆத்துமா ஒன்று உங்களுக்கு இருக்கிறதா? (துண்டுப்பிரதி எண் 25) —மிசோ