தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 29, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 3 முதல் டிசம்பர் 29, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. ஊழியத்தில் பைபிளை உபயோகிப்பது ஏன் முக்கியம்? [be-TL பக். 145 பாரா 2, பெட்டி]
2. ஒரு வசனத்தை அறிமுகப்படுத்தும் விதத்தை சூழமைவு எப்படி பாதிக்கிறது? [be-TL பக். 149]
3. பைபிள் வசனத்தை வாசிக்கையில் சரியான வார்த்தைகளை வலியுறுத்துவது ஏன் முக்கியம், அதை எப்படி செய்யலாம்? [be-TL பக். 151 பாரா 2, பெட்டி]
4. மற்றவர்களுக்குப் போதிக்கையில், ‘சத்திய வசனத்தை சரியாக பயன்படுத்தும்படியான’ பவுலின் புத்திமதியை நாம் எப்படி பின்பற்றலாம், இது ஏன் முக்கியம்? (2 தீ. 2:15, NW) [be-TL பக். 153 பாரா 2, பெட்டி]
5. பவுல் எப்படி “வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து” பேசினார்? (அப். 17:2, 3) [be-TL பக். 155 பாரா 5 – பக். 156 பாரா 1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. ஆராய்ச்சிக்கான தலைசிறந்த சாதனமாகிய பைபிளை பயன்படுத்தி நாம் ஒரு பேச்சை தயாரிக்கையில் (1) வசனங்களின் சூழமைவை ஆராய்வதும், (2) குறுக்கு-வசனங்களை எடுத்துப் பார்ப்பதும், (3) பைபிள் கன்கார்டன்ஸ் உதவியுடன் தேடுவதும் ஏன் பயனுள்ளது? [be-TL பக். 34 பாரா 3 – பக். 35 பாரா 2]
7. மெய்யான உண்மைப்பற்றுறுதி எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது, யாரிடம்? [w-TL01 10/1 பக். 22-3]
8. யெகோவா குறித்த காலம் தவறமாட்டார் என எது காட்டுகிறது? (தானி. 11:35-40; லூக். 21:24) [si-TL பக். 284 பாரா 1]
9. பேச்சிற்காக ஆராய்ச்சி செய்த பிறகு உபயோகிக்க விரும்பும் குறிப்புகளை தீர்மானிக்கையில் எந்த அம்சங்களை மனதில் வைக்க வேண்டும்? [be-TL பக். 38]
10. ‘நோவாவின் காலத்தைப்’ பற்றி இயேசு சொன்னது இன்று நம் நிலைமைக்கு ஏன் ஒத்திருக்கிறது? (மத். 24:37) [w-TL01 11/15 பக். 31 பாரா. 3-4]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. மக்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்தவர்களாவதற்கு உதவுவதே கிறிஸ்தவரின் வேலை, சமூக சீர்திருத்தத்தை முன்னேற்றுவிப்பதல்ல என்பதை பிலேமோனுக்கு பவுல் எழுதிய கடிதம் எப்படி காட்டுகிறது? (பிலே. 12)
12. ‘படிப்படியாக விலகி செல்வது,’ ‘விலகுவது,’ ‘மறுதலித்துப் போவது’ ஆகியவற்றிற்கு இடையே உள்ள வித்தியாசம் என்ன? (எபி. 2:1, NW; 3:12; 6:6) [w-TL99 7/15 பக். 19 பாரா 12; w-TL87 7/1 பக் 26 பாரா. 16-17; w80 12/1 பக். 23 பாரா 8]
13. ‘யெகோவாவுக்குச் சித்தமானால்’ என சொல்வதை எப்படி அற்ப விஷயமாக்காதிருக்கலாம்? (யாக். 4:15) [cj பக். 171 பாரா. 1-2]
14. ‘யெகோவாவின் நாளின் வருகையை மனதில் இடைவிடாமல் வைத்து காத்திருப்பது’ எதை அர்த்தப்படுத்துகிறது, அதை நாம் எப்படி செய்யலாம்? (2 பே. 3:12, NW) [w-TL97 9/1 பக். 19-20]
15. வெளிப்படுத்துதல் 2, 3 அதிகாரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு சபைகளுக்கான செய்திகளில் இன்றுள்ள கிறிஸ்தவர்களுக்கு என்ன முக்கியமான புத்திமதி காணப்படுகிறது? (வெளி. 2:4, 5, 10, 14, 20; 3:3, 10, 11, 17, 19)