தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 28, 2003-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளி கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 3 முதல் ஏப்ரல் 28, 2003 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. சரளம் குறைவுபடுவதற்கு காரணம் என்ன? [be-TL பக். 93]
2. சரியா தவறா: நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும், இது சபையாரின் மனம் அலைபாயவும், எண்ணங்கள் தடைபடவும் இடமளிக்கிறது. விளக்குக.
3. ஒரு பேச்சாளர் அல்லது பொது வாசிப்பாளர் தகுந்த இடங்களில் அழுத்துவதால் என்ன பயன்? (நெ. 8:8) [be-TL பக். 101]
4. தகுந்த இடங்களில் அழுத்துவதில் ஒருவர் முன்னேறுவது எப்படி? [be-TL பக். 102-3]
5. பைபிள் படிப்பு நடத்தும்போது அல்லது சபைக் கூட்டத்தின் போது ஒரு பிரசுரத்திலிருந்து சத்தமாக வாசிக்கையில் வலியுறுத்த வேண்டிய முக்கிய கருத்துக்கள் யாவை? [be-TL பக். 105]
பேச்சு நியமிப்பு எண் 1
6. கிறிஸ்தவ கூட்டங்களிலிருந்து ‘கேட்டு கற்றுக்கொள்ள’ பிள்ளைகளை பெற்றோர்கள் எப்படி பயிற்றுவிக்கலாம்? (உபா. 31:12) [be-TL பக். 16]
7. ஆவிக்குரிய பரதீஸ் என்றால் என்ன? [w-TL01 3/1 பக். 8-10]
8. எவ்வாறு நீதிமொழிகள் 8:1-3 தேவ ஞானம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடியது என்று காட்டுகிறது, மற்றும் கொலோசெயர் 2:3-ன்படி அதை எங்கே கண்டடையலாம்? [w-TL01 3/15 பக். 25, 28]
9. கடவுளுடைய பெயரை நாம் எப்படி அறிவிக்கலாம்? (யோவா. 17:6) [be-TL பக். 273-5]
10. “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம்” பற்றிய முக்கியமான என்ன விவரங்களை ஜனங்கள் அறிந்துகொள்ள வேண்டும்? (மத். 24:14) [be-TL பக். 279-80]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. (அ) மாற்கு 13:14-ல் சொல்லியிருக்கும் ‘பாழாக்குகிற அருவருப்பு’ முதல் நூற்றாண்டில் எதை குறித்தது? (ஆ) “அது நிற்கத்தகாத இடத்திலே” என்பது எதைக் குறித்தது?
12. இயேசு, தாவீதின் வம்சாவளியில் வந்த வாரிசு என்று லூக்காவின் சுவிசேஷம் எப்படி சான்றளிக்கிறது? (லூக். 3:23-38) [w-TL93 4/1 பக். 10 பாரா 3]
13. லூக்கா 12:2-ல் பதிவு செய்யப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன?
14. காணாமற் போன வெள்ளிக் காசைப் பற்றிய இயேசுவின் உவமையில் தேவதூதர்களின் என்ன மனநிலை மிகவும் குறிப்பிடத்தக்கது? (லூக். 15:10) அவர்களுடைய நல்ல மாதிரி நம்மை எவ்வாறு பாதிக்க வேண்டும்?
15. லூக்கா 22:29 (NW) என்ன இரண்டு உடன்படிக்கைகளைப் பற்றி பேசுகிறது?