தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
மே 6 முதல் ஆகஸ்ட் 19, 2002 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. தங்கள் விருப்பத்திற்கு மாறான காரியங்களை செய்யும்படி மக்களை யெகோவா தூண்டுவிப்பதாக எரேமியா 18:1-6 காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL99 4/1 பக். 22 பாரா. 3-4-ஐக் காண்க.]
2. கடவுளிடமிருந்து வரும் உண்மையான எச்சரிக்கைக்குப் பதிலாக பொய்களுக்கு செவிசாய்க்கும்படி மக்களை உற்சாகப்படுத்துவதன் மூலம், கடவுளுடைய வார்த்தைக்கு மக்கள் செவிசாய்த்திருந்தால் கிடைத்திருக்கும் பலன்களை கள்ளத்தீர்க்கதரிசிகள் திருடியிருக்கிறார்கள். (எரே. 23:30) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL92 5/1 பக். 4 பாரா 3-ஐக் காண்க.]
3. எரேமியா 25:15, 16-ல் சொல்லப்பட்டுள்ள, ‘ஜாதிகளை . . . புத்திகெட்டுப் போகும்படி’ செய்யும் ‘இந்த உக்கிரமாகிய மதுபானத்தின் பாத்திரம்,’ ஒருவரை முட்டாளாக்கும் பொய் மதத்தின் பாதிப்பைக் குறிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 3/1 பக். 20 பாரா 13-ஐக் காண்க.]
4. எரேமியாவின் தீர்க்கதரிசனத்தை மத்தேயு பொருத்திக் காட்டியபடி ‘சத்துருவின் தேசம்’ மரண தேசத்தைக் குறிக்கிறது; உயிர்த்தெழுதலின் போது, மகா ஏரோதுவால் கொல்லப்பட்ட பிள்ளைகள் இதிலிருந்தே திரும்பி வருவார்கள். (எரே. 31:15, 16; மத். 2:17, 18) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w79 6/15 பக். 19 பாரா 13-ஐக் காண்க.]
5. கடினமான பொருளாதார சூழ்நிலைமைகளின் போது தம்முடைய உண்மை ஊழியர்களை யெகோவா காப்பார் என எரேமியா 37:21 உறுதியளிக்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 9/15 பக். 3 பாரா 4—பக். 4 பாரா 2-ஐக் காண்க.]
6. பாபிலோனிய அரசன் நேபுகாத்நேச்சாரால் பொ.ச.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டதைக் குறித்து ஆழ்ந்த துயரத்தை புலம்பல் புத்தகம் வெளிப்படுத்துகிறது. [si-TL பக். 130 பாரா 1]
7. பெற்றோரின் பாவங்களுக்காக யெகோவா பிள்ளைகளை தண்டிக்கிறார் என புலம்பல் 5:7 தெளிவாக காட்டுகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 10/1 பக். 31-லுள்ள பெட்டியைக் காண்க.]
8. எசேக்கியேல் 9:4-ல் குறிப்பிடப்பட்ட நெற்றியில் குறி போடப்படுதல், அறிவு மட்டுமே ஒருவரைப் பாதுகாக்க முடியும் என்பதை அர்த்தப்படுத்துகிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 14 பாரா 18-ஐக் காண்க.]
9. எபேசியர் 4:8-ல் (NW) குறிப்பிடப்பட்ட ‘மனித வடிவில் வரங்கள்’ கிறிஸ்தவ மூப்பர்கள் ஆவர். இவர்கள் பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டவர்கள்; உடன் விசுவாசிகளுடைய ஆவிக்குரிய நலனை கவனிப்பதற்கு அதிகாரம் பெற்றவர்கள். (அப். 20:28) [w-TL00 8/1 பக். 6 பாரா 3]
10. எசேக்கியேல் 23-ம் அதிகாரத்தின் நவீன கால பொருத்தத்தில் புராட்டஸ்டன்ட் மதத்தை அகோலிபாளுக்கும் ரோமன் கத்தோலிக்க மதத்தை அவளுடைய மூத்த சகோதரியாகிய அகோலாளுக்கும் ஒப்பிடலாம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 21 பாரா 22-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு பதிலளியுங்கள்:
11. எருசலேமின் அழிவுடன் முடிந்த, பொ.ச.மு. 617 முதல் 607 வரையான இந்த நெருக்கடியான ஆண்டுகளின்போது எந்த மூன்று முக்கிய தீர்க்கதரிசிகள் வாழ்ந்தனர்? [si-TL பக். 133 பாரா 2]
12. கிறிஸ்துவின் மீட்கும் பலிக்கு காட்டும் மனமார்ந்த போற்றுதல், லூக்கா 9:23-லுள்ள அழைப்புக்கு பதிலளிப்பதில் எப்படி வெளிக்காட்டப்படுகிறது? [w-TL00 3/15 பக். 8 பாரா 1]
13. யெகோவா எந்த விதத்தில் எரேமியாவை ‘ஏமாற்றினார்’? (எரே. 20:7, NW) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w89 5/1 பக். 31 பாரா 6-ஐக் காண்க.]
14. பரிசுத்த ஆவி “எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டு[ம்]” என இயேசு சொன்னபோது எதை அர்த்தப்படுத்தினார்? (யோவா. 14:26) [w-TL00 4/1 பக். 8 பாரா. 7-8]
15. எரேமியா 35:18, 19-ன்படி நவீன நாளைய ரேகாபிய வகுப்பாருக்கு என்ன நம்பிக்கை அளிக்கப்படுகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; su-TL பக். 131 பாரா 7-ஐக் காண்க.]
16. நெபிலிம்கள் எந்த விதத்தில் ‘பலவான்களாக,’ ‘பேர் பெற்றவர்களாக’ இருந்தனர்? (ஆதி. 6:4) [w-TL00 4/15 பக். 27 பாரா 9]
17. பாருக் எவ்வாறு தன் ஆவிக்குரிய சமநிலையை இழந்தார், என்ன பாடத்தை அவருடைய அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம்? (எரே. 45:1-5) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL97 8/15 பக். 21 பாரா. 14-16-ஐக் காண்க.]
18. எரேமியா 50:38-லுள்ள தீர்க்கதரிசனம் எப்போது, எப்படி நிறைவேறியது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; dp-TL பக். 150 பாரா. 2-3-ஐக் காண்க.]
19. புலம்பல் 1:15-ன்படி “யூதா குமாரத்தியாகிய கன்னிகை”யின் அதாவது எருசலேமின் அழிவு கிறிஸ்தவமண்டலத்துக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 10/1 பக். 31-லுள்ள பெட்டியைக் காண்க.]
20. “பாகையைக் கழற்று, கிரீடத்தை எடுத்துப்போடு” என்ற எசேக்கியேல் 21:26-லுள்ள கூற்று எதை அர்த்தப்படுத்துகிறது? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 20 பாரா 16-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. ஓர் அடக்கமான மனிதர், _________________________ எனும் _________________________ இருந்து கொண்டு, அவர் செய்ய வேண்டிய மற்றும் செய்ய முடிந்த எல்லாவற்றிற்கும் _________________________ உள்ளதையும் ஏற்றுக்கொள்கிறார். (மீ. 6:8) [w-TL00 3/15 பக். 21 பாரா. 1-2]
22. பரிசுத்த ஆவி, நமக்கு _________________________ அல்லது _________________________ வராமல் தடுக்காவிட்டாலும் அவற்றை _________________________ உதவும். (1 கொ. 10:13; 2 கொ. 4:7) [w-TL00 4/1 பக். 11 பாரா 6]
23. எருசலேமின் பாழ்க்கடிப்பு _________________________ நீடிக்கும் என்பதை எரேமியாவின் எழுத்துக்களிலிருந்து தானியேல் தீர்க்கதரிசி கண்டறிந்தார்; இது பிரமிக்கத்தக்க முறையில் அவ்வளவு திருத்தமாக நிறைவேற்றமடைந்தது, _________________________ உரைப்பதில் யெகோவாவிற்கு இருக்கும் வல்லமையில் விசுவாசத்தை பலப்படுத்துகிறது. (எரே. 25:12; தானி. 9:2) [si-TL பக். 129 பாரா 37]
24. புலம்பல் புத்தகம் உண்மை வணக்கத்தார் அனைவர் மத்தியிலும் _________________________ , _________________________ தூண்டுவித்து, யெகோவா தேவனை மதிக்காதவர்களுக்கு _________________________ எச்சரிக்கையும் கொடுக்கிறது. [si-TL பக். 132 பாரா 13]
25. மனத்தாங்கல்களை சரிசெய்துகொள்வதில் வளைந்துகொடுக்கும் ஆபிரகாமின் முன்மாதிரி, _________________________ அல்லது _________________________ நம் சகோதரர்களுடனான மதிப்புமிக்க உறவை முறித்துப்போட இடங்கொடுக்காதிருக்க நம்மை உற்சாகப்படுத்துகிறது. (ஆதி. 13:5-12) [w-TL00 8/15 பக். 24 பாரா. 3-4]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. யோபு யெகோவாவின் (அறிவை; இரக்கத்தை; நியாயத்தீர்ப்பை) உயர்வாக கருதினார், அதனால்தான் அவருடைய வேலைக்காரர்களுடனும் (உட்பார்வையுடன்; இரக்கமாக; நியாயமாக) நடந்துகொண்டார். (யோபு 31:13, 14) [w-TL00 3/15 பக். 26 பாரா 1]
27. எரேமியா 16:2-4-ல், தீர்க்கதரிசி மணமுடிக்காமல் இருக்கும்படி கட்டளையிடப்பட்டதற்குக் காரணம் (அவருடைய சுயதியாக மனப்பான்மையை வெளிக்காட்டுவதற்காக; மேசியா ஏற்றுக்கொண்ட மணம் முடிக்காத வாழ்க்கை முறையை முன்குறித்துக் காட்டுவதற்காக; எருசலேமின் அழிவைக் குறித்த யெகோவாவின் வார்த்தை நிச்சயம் நிறைவேறும் என்பதை உறுதிப்படுத்துவதற்காக). [வாராந்தர பைபிள் வாசிப்பு; w78 4/15 பக். 31 பாரா 2-ஐக் காண்க.]
28. நீதிமொழிகள் 4:7-ல் ஞானம் என்பது (உண்மைகளைத் தெரிந்துகொள்வதை; உண்மைகளுக்கு மத்தியிலுள்ள தொடர்பைக் கண்டறிவதை; அறிவையும் புரிந்துகொள்ளுதலையும் உபயோகிப்பதை) குறிக்கிறது. [w-TL00 5/15 பக். 21 பாரா 1]
29. கடவுளுடைய பெயரின் சரியான எபிரெய உச்சரிப்பைக் குறித்து யாரும் முழு நிச்சயமாயிருக்க முடியாது; ஏனெனில் பைபிள் பயன்படுத்தியுள்ள எபிரெயு மொழி வெறும் (உயிரெழுத்துக்களில் மாத்திரமே; மெய்யெழுத்துக்களில் மாத்திரமே) முதன்முதல் எழுதப்பட்டது. [rs-TL பக். 195 பாரா 1]
30. எசேக்கியேல் 1-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள கடவுளுடைய ரதம் (கடவுளுடைய மேசியானிய ராஜ்யத்தை; யெகோவாவின் தேவதூதர்கள் அடங்கிய அமைப்பை; மீதியானவர்களுடன் யெகோவா தொடர்புகொள்வதை) பிரதிநிதித்துவம் செய்கிறது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL88 11/1 பக். 11 பாரா 5-ஐக் காண்க.]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்:
உபா. 7:25, 26; நீதி. 4:18; 5:21; எரே. 46:28; ரோ. 15:4
31. யெகோவாவின் ஜனங்கள், தாங்கள் முன்னர் வணங்கி வந்த எந்தச் சிலைகளையும் எப்படி கருத வேண்டும் என்பதற்கு இந்தக் கட்டளை மாதிரியாய் அமைகிறது. [rs-TL பக். 186 பாரா 3]
32. தம்முடைய வார்த்தைகளை எழுத்துவடிவில் கொண்டுள்ள பைபிள் மூலம் யெகோவா முக்கியமாய் ஆறுதல் அளிக்கிறார். இதில் அற்புதமான எதிர்கால நம்பிக்கை அடங்கியுள்ளது. [w-TL00 4/15 பக். 5 பாரா 4]
33. பெற்றோரின் சிட்சை நியாயமான எல்லைகளைத் தாண்டிச் செல்லவோ, திருத்தி, போதிக்கும் அதன் நோக்கத்துக்கு அப்பால் செல்லவோ கூடாது. [வாராந்தர பைபிள் வாசிப்பு; kl-TL பக். 148 பாரா 20-ஐக் காண்க.]
34. தம் ஊழியர் தம்முடைய நோக்கத்தைப் படிப்படியாய் விளங்கிக் கொள்ள யெகோவா செய்வதால், அறிவின் பெருக்கம் ஒருவரின் சிந்தனையில் மாற்றங்கள் செய்வதைப் பெரும்பாலும் தேவைப்படுத்துகிறது. [rs-TL பக். 205 பாரா 4]
35. எவ்வளவுதான் இரகசியமாக வைத்திருந்தாலும்சரி, எந்த ஓர் ஒழுக்கங்கெட்ட நடத்தையையும் யெகோவாவின் கண்களிலிருந்து மறைக்கவே முடியாது. [w-TL00 7/15 பக். 31 பாரா 3]