பெருக விதைத்தால் பெருக அறுப்போம்
1 கடவுளுடைய வார்த்தையிலுள்ள மகத்தான வாக்குறுதிகள் நிறைவேற நாம் அனைவரும் காத்திருக்கிறோம். இப்போதே, நம் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சி அளிக்கும் அநேக ஆசீர்வாதங்களை யெகோவா கிடைக்கச் செய்கிறார். ஆனாலும், நாம் தனிப்பட்டவர்களாக அவற்றிலிருந்து எந்த அளவுக்கு பயன் அடைவோம் என்பது நம் முயற்சியையே பெரிதும் சார்ந்திருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் சொன்னபடி, “பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்.” (2 கொ. 9:6) இந்த நியமம் பொருந்துகிற இரு அம்சங்களை கவனிப்போம்.
2 நம் தனிப்பட்ட ஊழியம்: நம்மால் சாட்சி கொடுக்க முடிகிறபோது மக்களுடன் நற்செய்தியை பகிர்ந்து கொள்கையில் அநேக பலன்கள் கிடைக்கும். (நீதி. 3:27, 28) துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ சேவிப்பது உட்பட, ஊழியத்தில் தங்கள் பங்கை அதிகரிப்பதன் மூலம் அநேகர் பெருக விதைப்பது பாராட்டத்தக்க விஷயம். அக்கறை காட்டிய அனைவரின் ஆர்வத்தையும் வளர்ப்பதற்காக பொறுப்புணர்வோடு மறுசந்திப்பு செய்வதன் மூலமும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பைபிள் படிப்பு நடத்த முன்வருவதன் மூலமும் நாம் அனைவருமே பெருக விதைக்கலாம். (ரோ. 12:11) இவ்வாறு முயற்சி செய்தால், ஊழியத்தில் உற்சாகமூட்டும் அனுபவங்களையும் கூடுதலான சந்தோஷத்தையும் பெறுவோம்.
3 ராஜ்ய அக்கறைகளை ஆதரித்தல்: பொருளுதவி அளிப்பதன் சம்பந்தமாகவே பவுல் ‘பெருக விதைப்பது’ பற்றிய குறிப்பை சொன்னார். (2 கொ. 9:6, 7, 11, 13) இன்றும் ராஜ்ய அக்கறைகளை ஆதரிப்பதற்கு, உடல் உழைப்பாலும் பொருளுதவியாலும் நாம் அதிகம் செய்யலாம். ராஜ்ய மன்றங்கள் கட்டுவதில் உதவலாம். உண்மை வழிபாட்டிற்குரிய இந்த மையங்களை சுத்தம் செய்வதிலும் பராமரிப்பதிலும் உதவ வாலண்டியர்களாக முன்வரலாம். இதோடு, உள்ளூர் சபை செலவுகளுக்கும் உலகளாவிய ராஜ்ய பிரசங்க வேலைக்கும் சீஷராக்கும் வேலைக்கும் நிதிவுதவி வழங்கலாம். நாம் அனைவரும் நம் பங்கை செய்கையில், யெகோவாவால் நியமிக்கப்பட்ட இந்த வேலைமீது அவர் பொழியும் பெருத்த ஆசீர்வாதங்களைக் காண்பதில் எவ்வளவாக களிகூருகிறோம்!—மல். 3:10; லூக். 6:38.
4 “நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களாகவும், உதாரகுணமுள்ளவர்களாகவும்” இருக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை ஊக்குவிக்கிறது. அந்த புத்திமதிக்கு செவிசாய்ப்பதால் இப்போதே அபரிமிதமான ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறோம். அதே சமயத்தில், ‘உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு [நமக்கு] நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாகவும்’ வைக்கிறோம்.—1 தீ. 6:18, 19, தி.மொ.