உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/02 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—2002
நம் ராஜ்ய ஊழியம்—2002
km 3/02 பக். 7

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள் மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல், மே: காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகள். விருப்பமிருந்தால் உலகளாவிய வேலைக்கு நன்கொடை அளிக்கலாம் என வெளி ஊழியத்தில் சந்திப்பவர்களிடம் பிரஸ்தாபிகள் சொல்ல வேண்டும். அக்கறை காட்டினார்களென்றால், தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டுக்காரர்களிடம் இந்தப் பிரசுரங்கள் இருந்தால், சபையின் கையிருப்பிலிருக்கும் ஏதாவதொரு பொருத்தமான சிற்றேட்டை அளியுங்கள்.

◼ ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் ஊழியம் செய்ய விரும்பும் பிரஸ்தாபிகள் இப்போதே திட்டமிட்டு சீக்கிரமாக அதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இது, தேவையான வெளி ஊழிய ஏற்பாடுகளை செய்யவும் போதுமான பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் கைவசம் வைத்துக்கொள்ளவும் மூப்பர்களுக்கு உதவியாக இருக்கும். துணைப் பயனியர் ஊழியம் செய்ய அங்கீகரிக்கப்பட்டவர்களின் பெயர்கள் ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிக்கப்பட வேண்டும்.

◼ மார்ச் 28, 2002, வியாழக்கிழமை அன்று நினைவு ஆசரிப்பு நடைபெறும். உங்கள் சபையில் வழக்கமாக வியாழக்கிழமை அன்று கூட்டங்கள் நடந்தால், அந்த வாரத்திலேயே வேறொரு நாளில் ராஜ்ய மன்றத்தை பயன்படுத்த முடிந்தால் அந்நாளுக்கு அந்தக் கூட்டங்களை மாற்றி வைத்துக் கொள்ளவும். இவ்வாறு நடத்த முடியாமல், உங்கள் ஊழியக் கூட்டம் பாதிக்கப்பட்டால், உங்கள் சபைக்குப் பொருந்தும் பகுதியை மற்றொரு ஊழியக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கலாம்.

◼ தனிப்பட்ட பிரஸ்தாபிகள் கிளை அலுவலகத்திற்கு கேட்டெழுதும் பிரசுரங்கள் அனுப்பி வைக்கப்பட மாட்டா. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சபை கிளை அலுவலகத்திற்கு அனுப்புவதற்கு முன்பு ஒவ்வொரு மாதமும் அதை அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். இது, தங்களுக்கென பிரசுரங்களைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள் பிரசுர ஊழியரிடம் முன்னதாகவே ஆர்டர் செய்ய உதவும். விசேஷ ஆர்டரின் பேரில் அனுப்பப்படும் ஐட்டங்கள் எவை என்பதை தயவுசெய்து அறிந்திருங்கள்.

◼ யெகோவாவின் சாட்சிகளும் கல்வியும் என்ற சிற்றேட்டை சபைகள் வெவ்வேறு மொழிகளில் தேவையான அளவு கையிருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும். மே மாத கடைசியிலிருந்து ஜூன் மாத ஆரம்பம் வரையான காலப்பகுதியில் புதிதாக தொடங்கும் கல்வியாண்டில் காலடியெடுத்து வைக்கப் போகும் பிள்ளைகளுக்கும் அவர்களது பெற்றோருக்கும் இது பொருத்தமான சிற்றேடாகும்.

◼ பத்திரிகைகளையும் பிரசுரங்களையும் அச்சிட்டு தபாலில் அனுப்புவதில் உட்பட்டுள்ள செலவுகளை மனதில் வைத்து, நியமிக்கப்பட்ட சகோதரர்களும் பிரஸ்தாபிகள் ஒவ்வொருவரும் பின்வரும் விஷயங்களுக்கு கவனம் செலுத்துவது பொருளாதார ரீதியில் சொஸைட்டிக்கு உதவியாய் இருக்கும்:

சபைகளிலிருந்து பெற்றுக்கொண்ட செப்டம்பர் 1, 2001 தேதியிட்ட வருடாந்தர லிட்ரேச்சர் இன்வென்ட்ரியின்படி, அநேக சபைகளின் கையிருப்பில் இருக்கும் புத்தகங்களும் சிற்றேடுகளும் பல வருடங்களுக்கு விநியோகிக்கப்படும் அளவுக்கு அதிகமாக உள்ளன. ஆனால் அதே சமயத்தில் அந்தச் சபைகளிடமிருந்து இன்னும் அதிக பிரசுரங்கள் கேட்டு ஆர்டர்கள் வருகின்றன. புதிதாக ஆர்டர் செய்வதற்கு முன்பு தற்சமயம் கையிருப்பில் உள்ள பிரசுரங்களை விநியோகிக்க அனைத்து சபைகளுக்கும் உற்சாகம் அளிக்கப்படுகிறது. சுமார் மூன்று மாதங்களுக்கு உரிய பிரசுரங்களை மட்டுமே சபையில் வைத்துக்கொள்ளும்படி எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட்டை சொஸைட்டிக்கு அனுப்புவதற்கு முன்பு சபையில் அதிகப்படியான பிரசுரங்கள் இராதவாறு ஊழிய கண்காணி உறுதி செய்துகொள்ள வேண்டும்.

தங்கள் சபையில் பத்திரிகைகள் தேங்கிவிடாதபடி செயலரும் ஊழிய கண்காணியும் உறுதி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு சேர்ந்துவிட்டால், விசேஷ ஊழியத்திற்காக ஏற்பாடு செய்து அவற்றை முடிந்தளவு சீக்கிரமாக விநியோகித்துவிட வேண்டும்; பின்பு சபையின் பத்திரிகை அளவை குறைக்கும்படி கேட்டு கிளை அலுவலகத்திற்கு புதுப்பிக்கப்பட்ட ஆர்டரை அனுப்ப வேண்டும். பத்திரிகைகளும் பிரசுரங்களும் பிரஸ்தாபிகளின் வீடுகளிலும் தேங்கிவிடக் கூடாது. எல்லா பிரஸ்தாபிகளும் சொந்த பிரதிகளுக்கும் ஊழியத்தில் விநியோகிப்பதற்கும் தேவையான பிரசுரங்களை மட்டுமே ஆர்டர் செய்ய வேண்டும்.

◼ இந்திய கிளை அலுவலகம் பெங்களூரிலுள்ள புதிய வளாகத்திற்கு இடம் மாறுவதை முன்னிட்டு 2002-⁠ம் ஆண்டு மார்ச் மாத மத்திபத்திலிருந்து ஏப்ரல் மாத மத்திபம் வரையாக பிரசுரங்கள், பத்திரிகைகள் ஆகியவற்றுக்கான ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்பதை தயவுசெய்து நினைவில் வையுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்