அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜனவரி: சபையில் இருக்கும் ஏதாவதொரு பழைய 192 பக்க புத்தகத்தை அளிக்கலாம். குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் புத்தகம் கையிருப்பிலுள்ள சபைகள் அதையும் அளிக்கலாம். பிப்ரவரி: உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா?, வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!, எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், அல்லது சபையில் இருக்கும் ஏதாவதொரு பழைய 192 பக்க புத்தகம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுக்க வேண்டும். ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். ஆர்வம் காட்டுகிறவர்களிடம் மறுசந்திப்பு செய்து பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்துங்கள். பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்த முடியாதபோதுதான் சந்தாவை அளிக்கலாம். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்கும் நோக்கத்தோடு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளியுங்கள்.
◼ ஜனவரி 14-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்திற்கு வரும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய பிள்ளைகளுக்கென அடையாள அட்டையையும் பெற்றுக்கொள்ளலாம்.
◼ பிப்ரவரியிலிருந்து மார்ச் 3-க்குள் தொடங்கும் வட்டாரக் கண்காணிகள் சந்திப்பின்போது கொடுக்கப்படும் புதிய பொதுப் பேச்சின் தலைப்பு “ஆபத்தான உலகில் பாதுகாப்பை கண்டடைதல்.”
◼ இந்த வருடம் மார்ச் 28, வியாழக்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் பொருத்தமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். பேச்சை முன்னதாகவே ஆரம்பித்தாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களை சுற்றி அனுப்புவதை சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதை தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். ஒவ்வொரு சபையும் தனிப்பட்ட விதமாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கது என்றாலும் அது எப்போதுமே சாத்தியமல்ல. பொதுவாக ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் உபயோகிக்கையில் அன்றைய மாலை நிகழ்ச்சிக்காக வேறொரு இடத்தை உபயோகிக்க ஓரிரு சபைகள் ஏற்பாடு செய்யலாம். வருபவர்களை வரவேற்கவும், ஆர்வம் காட்டும் புதியவர்களை உற்சாகப்படுத்தவும், அந்த நிகழ்ச்சியிலிருந்து முழு பயனடையவும், அடுத்த சபை தன் ஆசரிப்பை ஆரம்பிப்பதற்கு முன் சாத்தியமானால் சுமார் 40 நிமிடங்கள் இடைவெளி விடுவது நல்லது. உள்ளூர் நிலைமைகளுக்கு என்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தது என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
◼ ஒவ்வொரு மாதமும் ஷிப்பிங் அக்னாலெஜ்மெண்டை பெற்றவுடன் சொஸைட்டியின் ராஜ்ய மன்ற நிதி மற்றும் உலகளாவிய வேலைக்கான நன்கொடைகளை சொஸைட்டி பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் கடிதங்கள், அடுத்த முறை கணக்கு அறிக்கையோடு சேர்த்து சபைக்கு வாசிக்கப்படும்படி நடத்தும் கண்காணி பார்த்துக்கொள்ள வேண்டும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு II —ஆங்கிலம், கன்னடம், தமிழ், மலையாளம்
உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (சிறியது) —தமிழ்
திருப்தியான வாழ்க்கைக்கு வழி —ஆங்கிலம், தமிழ், மராத்தி, மலையாளம், ஹிந்தி
நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) —நிக்கோபாரீஸ்
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14) —நிக்கோபாரீஸ்
சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —நிக்கோபாரீஸ்
அழியாத ஆவி ஒன்றுண்டா? (துண்டுப்பிரதி எண் 25) —ஆங்கிலம், தமிழ், மிஸோ
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
உயிர்—எப்படி தோன்றியது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (சிறியது) —மலையாளம்
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள் (29 பாடல்கள்) —ஹிந்தி
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! —தமிழ், தெலுங்கு, நேப்பாளி
நீங்கள் ஏன் பைபிளை நம்பலாம் (துண்டுப்பிரதி எண் 13) —வங்காளி
யெகோவாவின் சாட்சிகள் நம்புவதென்ன? (துண்டுப்பிரதி எண் 14) —வங்காளி
சமாதானமான புதிய உலகில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15) —அசாமீஸ், ஆங்கிலம், ஒரியா, கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
குடும்ப வாழ்க்கையை மகிழ்ந்து அனுபவியுங்கள் (துண்டுப்பிரதி எண் 21) —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
நிஜமாக உலகத்தை ஆளுவது யார்? (துண்டுப்பிரதி எண் 22) —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, நேப்பாளி, பஞ்சாபி, மராத்தி, மலையாளம், வங்காளி, ஹிந்தி
◼ மேலே குறிப்பிடப்பட்ட ஐட்டங்களுக்கான லிட்ரேச்சர் ரிக்குவெஸ்டுகளை (S-14) அனுப்புவதற்கு முன்பு உங்களுடைய பென்டிங் ரிக்குவெஸ்ட்-ல் உள்ளவை சீக்கிரத்தில் சபைக்கு அனுப்பப்படும் என்பதை நினைவில் வையுங்கள்.