கேள்விப் பெட்டி
◼ வெளி ஊழியத்திற்கான கூட்டங்களில் என்ன தகவலை அளிக்க வேண்டும்?
வெளி ஊழிய கூட்டத்திற்கான முக்கிய நோக்கமே அதற்குப் பின் செல்லவிருக்கும் ஊழியத்தில் நம் கவனத்தை ஒருமுகப்படுத்துவதாகும். ஆகவே அக்கூட்டத்தை நடத்துபவர் நன்கு தயாரித்து, ஊக்கமளிக்கிற, திட்டவட்டமான, நடைமுறை பயனுள்ள குறிப்புகளை அளிப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அன்றைய தினவசனம் பிரசங்க வேலையுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தால் அதை வாசித்து சுருக்கமாக கலந்தாலோசிக்கலாம். இருந்தாலும், அந்தக் கூட்டம் ஊழியத்திற்கு முக்கிய கவனம் செலுத்துவதாக இருக்க வேண்டும்; அன்று ஊழியத்திற்கு செல்ல இருப்பவர்கள் அதை சரியான விதத்தில் செய்து முடிக்க உதவி செய்வதாக இருக்க வேண்டும்.—2 தீ. 4:5.
அந்த மாதத்திற்குரிய அளிப்பு என்ன, அதை எவ்வாறு கொடுப்பது என்பதை அனைவருக்கும் உணர்த்துவதற்கு உதவியாக நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான குறிப்புகளை கலந்தாலோசிக்கலாம். பத்திரிகை தினத்தன்று “பத்திரிகைகளைக் குறித்து என்ன சொல்லலாம்” என்ற பகுதியிலிருந்து ஒரு பிரசங்கத்தை நடித்துக் காட்டலாம். மற்ற பிரசுரங்களை அளிக்கையில், நியாயங்காட்டி பேசுதல் புத்தகத்திலுள்ள பிராந்தியத்திற்கு பொருத்தமான ஓரிரு அறிமுகங்களை சிறப்பித்துக் காட்டலாம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் எப்படி பைபிளை பயன்படுத்துவது, உரையாடலை நிறுத்தும்படி செய்யும் பதில்களை எப்படி சமாளிப்பது, பைபிள் படிப்பை எப்படி ஆரம்பிப்பது அல்லது ஆர்வமுள்ளோரை மறுபடியும் எப்படி போய் சந்திப்பது போன்ற ஊழியத்தின் அம்சங்களை கலந்தாலோசிக்கலாம் அல்லது நடித்துக் காட்டலாம்.
வெளி ஊழியத்திற்கான கூட்டங்களுக்கு 10-லிருந்து 15 நிமிடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. தொகுதிகளை ஒழுங்கமைப்பது, பிராந்தியத்தை நியமிப்பது, ஜெபம் செய்வது உட்பட அனைத்தும் இந்த நேரத்திற்குள் முடிந்துவிட வேண்டும். அங்கிருந்து பிரிந்து செல்கையில் வந்திருந்த அனைவரும் ஊழியத்திற்கு யாருடன் செல்கிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். ஊழியத்திற்கு இரண்டிரண்டு பேராக செல்லும் பிரஸ்தாபிகள் எந்த இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதை சரிவர அறிந்துகொள்வதற்கு பிராந்திய வரைபட அட்டையை (S-12) அவர்களுக்கு காண்பிக்க வேண்டும்; இது சரியாக அந்த இடத்திற்கே செல்ல அவர்களுக்கு உதவும். இதனால், பெரும் கூட்டமாக பிராந்தியத்திற்குச் செல்வதையும் அங்கே பொதுமக்கள் பார்வையில் ஒவ்வொருவரையும் பிரித்தனுப்புவதையும் தவிர்க்கலாம். வெளி ஊழியக் கூட்டம் குறுகிய நேரத்திற்கு நடைபெறுவதால், அனைவரும் சரியான நேரத்திற்கு வருவது முக்கியம். காவற்கோபுர படிப்பு போன்ற சபை கூட்டத்திற்குப்பின் வெளி ஊழிய கூட்டம் நடத்தப்படுமானால், அக்கூட்ட நேரத்தை இன்னும் குறைத்துக்கொள்ள வேண்டும். ஏற்கெனவே சிறந்த வேதப்பூர்வ கலந்தாலோசிப்பை முடித்திருப்பதால், ஊழியக் கூட்டத்தில் மீண்டும் தினவசனத்தை சிந்திக்க வேண்டியதில்லை.
ஒவ்வொரு வெளி ஊழிய கூட்டத்தையும் நடத்துவதற்கு முழுக்காட்டுதல் பெற்ற தகுதி வாய்ந்த சகோதரர்களை முன்கூட்டியே நியமிக்க வேண்டும். என்றாவது இக்கூட்டத்தை முன்னின்று நடத்துவதற்கு சகோதரர்கள் யாருமே வர முடியாவிட்டால், தேவை ஏற்படுகையில் முழுக்காட்டப்பட்ட எந்தெந்த சகோதரிகள் அக்கூட்டத்தை நடத்தலாம் என்பதை மூப்பர்கள் தீர்மானிக்க வேண்டும். அந்த சகோதரி அமர்ந்தவாறே அன்றைய தினவசனத்தை அல்லது ஊழியத்திற்குப் பொருத்தமான குறிப்புகளை தொகுதியாக கலந்தாலோசிக்கலாம். அந்தச் சகோதரியின் குறிப்புகள் சுருக்கமாக இருக்க வேண்டும். அப்போது அவர் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டும்.
நாம் உற்சாகத்தோடும் நல்ல தயாரிப்போடும் ஊழியத்தில் கலந்துகொள்ள இப்படிப்பட்ட வெளி ஊழியக் கூட்டங்கள் மிகச் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. கூட்டத்தை நடத்துபவர் எந்தளவுக்கு சிறப்பாக தயாரித்து அளிக்கிறாரோ அந்தளவுக்கு அனைவரும் பயனடைவர்.