உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/01 பக். 8
  • அதிகம் செய்ய விருப்பமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அதிகம் செய்ய விருப்பமா?
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • இதே தகவல்
  • உங்களுடைய ராஜ்ய சேவை பொக்கிஷத்தை அதிகரியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
  • இதோ, உங்கள் ஊழியத்தை விரிவாக்க வழிகள்!
    நம் ராஜ்ய ஊழியம்—1999
  • தேவை—4,000 துணைப் பயனியர்கள் உங்களால் துணைப் பயனியர் சேவை செய்யமுடியுமா—மார்ச்சில்? ஏப்ரலில்? மேயில்?
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • புதிய ஊழிய ஆண்டுக்கான மெச்சத்தக்க இலக்கு
    நம் ராஜ்ய ஊழியம்—2007
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 8/01 பக். 8

அதிகம் செய்ய விருப்பமா?

1 ராஜ்யத்தை மதிப்பு மிக்க பொக்கிஷங்களுக்கு இயேசு ஒப்பிட்டார். (மத். 13:44-46) ராஜ்ய செய்தியை பரப்பும் வேலையும் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமே. இதை முழுமையாய் செய்வதற்கென நம்முடைய விருப்பங்களை ஓரளவுக்கு ஓரங்கட்டி வைக்க வேண்டியிருந்தாலும், இந்த ஊழியத்திற்கே நம் வாழ்க்கையில் முதலிடம் கொடுக்க வேண்டும். (மத். 6:19-21) ராஜ்ய சேவையில் அதிகம் செய்ய உங்களுக்கு விருப்பமா?

2 அத்தியாவசியமான இவற்றை கவனியுங்கள்: ஊழியத்தில் நம் தனிப்பட்ட பங்கை அதிகரிப்பதற்கு அநேக விஷயங்கள் முக்கியமானவை: (1) வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளை முதலாவது வைக்க தீர்மானமாய் இருப்பது (மத். 6:33); (2) யெகோவாவில் விசுவாசம் வைத்து அவரை சார்ந்திருப்பது (2 கொ. 4:1, 7); (3) உள்ளப்பூர்வமாகவும் விடாமுயற்சியுடனும் ஜெபத்தில் யெகோவாவின் உதவியை நாடுவது (லூக். 11:8-10); (4) நம் ஜெபங்களுக்கு இசைவாக இறுதிவரை செயல்படுவது.​—⁠யாக். 2:14, 17.

3 நம் ஊழியத்தை விரிவாக்க வழிகள்: நாம் அனைவருமே தவறாமல் ஒவ்வொரு மாதமும் சிறிது நேரத்தை ஊழியத்தில் செலவிட வேண்டும் என்ற அடிப்படை இலக்கை வைக்கலாம். அதே சமயத்தில் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்வதைப் பற்றி, ஊழியத்தில் அதிக பலன் தரும் வகையில் பேசுவதற்கு கடினமாக முயற்சி செய்வதைப் பற்றி, திறம்பட்ட வகையில் மறுசந்திப்புகளை நடத்துவதில் முன்னேற்றம் செய்வதைப் பற்றி, முன்னேறி வரும் பைபிள் படிப்புகளை நடத்த முயலுவதைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பார்த்திருக்கிறீர்களா? உங்களால் துணைப் பயனியராகவோ ஒழுங்கான பயனியராகவோ அல்லது தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்யவோ முடியுமா? நீங்கள் முழுக்காட்டுதல் எடுத்த சகோதரராக இருந்தால், ஓர் உதவி ஊழியராகவோ மூப்பராகவோ சேவை செய்ய தகுதிபெற முடியுமா? (1 தீ. 3:1, 10) ஊழியப் பயிற்சி பள்ளிக்கு விண்ணப்பிப்பதன் மூலம் உங்கள் ஊழியத்தை விரிவாக்க முடியுமா?​—⁠லூக். 10:⁠2.

4 முழுநேர வேலை பார்த்துவந்த ஒரு சகோதரர் விளையாட்டுகளில் அதிக நேரத்தை செலவிட்டு வந்தார்; ஒழுங்கான பயனியர் ஆவதற்கு அவர் ஊக்குவிக்கப்பட்டார். துணைப் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார்; பிறகு முழு நேர ஊழியத்தில் ஈடுபடுவதற்காக தன் சூழ்நிலைகளில் மாற்றங்களைச் செய்தார். பின்னர் ஊழியப் பயிற்சி பள்ளிக்குச் சென்றார்; இதனால் வட்டார கண்காணியாக சேவை செய்யும் தற்போதைய பொறுப்பை ஏற்க தன்னை தயார்ப்படுத்த அப்பள்ளி அவருக்கு உதவியது. தனக்குக் கிடைத்த ஊக்குவிப்பிற்கு ஏற்ப செயல்பட்டதை எண்ணி இப்போது சந்தோஷப்படுகிறார்; ராஜ்ய சேவையில் அதிகம் செய்ய தீர்மானித்ததால் இப்போது முன்பைவிட சந்தோஷமாக இருப்பதாக உறுதியுடன் கூறுகிறார்.

5 தங்களைத் தாங்களே முன்வந்து அளிப்பவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (ஏசா. 6:8) உங்கள் ஊழியத்தை விரிவாக்குவதிலிருந்தும், அதன் பயனாக அதிக திருப்தியையும் புத்துணர்ச்சியையும் பெறுவதிலிருந்தும் உங்களை எதுவும் தடுக்க இடமளிக்காதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்