‘உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கக்கடவது’
1 நம்மை சுற்றியிருக்கும் உலகம் ஒழுக்கத்திலும் ஆன்மீகத்திலும் இருளடைந்திருக்கிறது. இருளுக்குரிய ‘கனியற்ற கிரியைகளை’ சத்தியமென்ற ஒளி வெட்டவெளிச்சமாக்கி, ஆபத்தான இந்த இடறல் கற்களை தவிர்க்க உதவுகிறது. இதனாலேயே, “வெளிச்சத்தின் பிள்ளைகளாய் [“தொடர்ந்து,” NW] நடந்துகொள்ளுங்கள்” என அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களை ஊக்குவித்தார்.—எபே. 5:8, 11.
2 இவ்வுலகின் இருளுக்குரிய கிரியைகளுக்கு நேர் மாறானதே “வெளிச்சத்தின் கனி.” (எபே. 5:9, தி.மொ.) இந்தக் கனியைப் பிறப்பிக்க நாம் சிறந்த கிறிஸ்தவர்களாக, இயேசுவின் மனதிற்கு உகந்தவர்களாக மின்ன வேண்டும். சத்தியத்திற்கான பேரார்வம், மனப்பூர்வமான முழு ஈடுபாடு போன்ற குணங்களையும் காட்ட வேண்டும். இப்படிப்பட்ட கனியை அன்றாட வாழ்விலும் ஊழியத்திலும் வெளிக்காட்ட வேண்டும்.
3 ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரகாசியுங்கள்: ‘உங்கள் வெளிச்சம் மனுஷர் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது’ என இயேசு தம் சீஷர்களிடம் சொன்னார். (மத். 5:16) இயேசுவைப் போலவே, கடவுளுடைய ராஜ்யத்தையும் அவரது நோக்கங்களையும் பற்றி பிரசங்கிப்பதன் மூலம் நாம் யெகோவாவின் வெளிச்சத்தைப் பிரகாசிக்கிறோம். வீடுவீடாகச் சென்று மக்களை சந்திக்கும்போதும் வேலை செய்யுமிடத்தில், பள்ளியில், அக்கம்பக்கத்தில் என சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் சத்தியத்தைப் பற்றி பேசும்போதும் நாம் சுடர்களாக பிரகாசிக்கிறோம்.—பிலி. 2:14.
4 சிலர் ஒளியைப் பகைப்பார்கள் என இயேசு சொன்னார். (யோவா. 3:20) ஆகவே, “கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி” தங்கள்மீது பிரகாசிக்க பெரும்பான்மையோர் அனுமதிக்காதபோது நாம் சோர்ந்து போவதில்லை. (2 கொ. 4:4) மக்களின் இருதயங்களை யெகோவா நன்கு அறிவார்; அநியாயம் செய்பவர்களை தம் மக்களாக அவர் ஏற்றுக்கொள்வதில்லை.
5 நாம் யெகோவாவின் வழிகளைப் பின்பற்றி ஆவிக்குரிய ஒளியைப் பெறுகையில், அதை மற்றவர்களிடமும் பிரகாசிக்கச் செய்ய முடியும். நம் நடத்தையைப் பார்த்து நம்மிடம் ‘ஜீவஒளி இருப்பதை’ அவர்கள் புரிந்துகொள்ளும்போது, அவர்களும் தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்து ஒளியைப் பெறுவதற்குத் தூண்டப்படுவர்.—யோவா. 8:12.
6 நம் ஒளியைப் பிரகாசிக்கச் செய்வதன் மூலம் படைப்பாளருக்கு துதிசேர்க்கிறோம். (1 பே. 2:12) அவரை அறிந்துகொண்டு நித்திய ஜீவ நம்பிக்கையைப் பெற நேர்மை மனமுள்ளவர்களுக்கும் உதவுகிறோம். நாம் பெற்றிருக்கும் வெளிச்சத்தைக் கொண்டு, ஆவிக்குரிய இருளில் இருப்போருக்கு சரியான வழியைக் காட்டி அவர்கள் வெளிச்சத்தின் கிரியைகளை நடப்பிக்க உதவுவோமாக.