அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு செப்டம்பர்: உயிர்—அது எப்படி வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்). அக்டோபர்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். மறுசந்திப்பு செய்யும்போது ஆர்வம் காட்டினால், பத்திரிகைகளுக்கான சந்தா பற்றி சொல்லவும். நவம்பர்: இந்த மாதம் முதற்கொண்டு ராஜ்ய செய்தி எண் 36 அளிக்கப்படும். சபையார் தங்கள் பிராந்தியங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் ராஜ்ய செய்தி எண் 36-ஐ அளித்த பிறகு, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை அளிக்கலாம். ஏற்கனவே வீட்டுக்காரரிடம் இவை அளிக்கப்பட்டிருந்தால் பரதீஸில் என்றும் வாழலாம் அல்லது படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்தை அளிக்கலாம். டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. இதனுடன் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு.
◼ சபைநீக்கம் செய்யப்பட்ட அல்லது அமைப்பிலிருந்து விலகிவிட்டவர்கள் யாராவது மறுபடியும் பழைய நிலைமைக்கு வர விரும்பினால், பிப்ரவரி 1, 1992, தமிழ் காவற்கோபுரம் பக்கங்கள் 20-1-ல் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை மூப்பர்கள் கருத்தில்கொண்டு, அவர்களை போய் சந்திக்கவும்.
◼ சபையோடு தொடர்புடைய அனைவரும் தங்களுடைய தனிப்பட்ட சந்தாக்கள் உட்பட காவற்கோபுரம், விழித்தெழு!-வுக்கான புதிய மற்றும் புதுப்பிக்கும் சந்தாக்களை சபை மூலமாகவே அனுப்ப வேண்டும்.
◼ பிரஸ்தாபிகள் சங்கத்திடம் நேரடியாக கேட்கும் பிரசுரங்கள் அனுப்பப்பட மாட்டாது. சபையின் மாதாந்தர பிரசுர ஆர்டரை சங்கத்திற்கு அனுப்புவதற்கு முன், இதைப் பற்றி ஒவ்வொரு மாதமும் சபையில் அறிவிக்க நடத்தும் கண்காணி ஏற்பாடு செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த இலாகாவை கவனிக்கிற சகோதரரிடம் அனைவரும் தங்களுக்கு வேண்டிய பிரசுரங்களை தெரிவிக்க முடியும். ஸ்பெஷல் ரிக்குவெஸ்ட் ஐட்டம்கள் எவை என்பதை அறிந்திருங்கள்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர், செப்டம்பர் 1 அல்லது சீக்கிரத்திலேயே சபையின் கணக்கை தணிக்கை செய்ய வேண்டும். இதைச் செய்த பிறகு, அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்பட்ட பின் இதையும் சபைக்கு அறிவியுங்கள்.
◼ இந்த ஆண்டு லோனாவாலாவில் ஆங்கிலத்தில் நடக்கவிருந்த “கடவுளுடைய வார்த்தையின்படி நடப்போர்” மாவட்ட மாநாடு, மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளது. அங்கு நவம்பர் 3-5, 2000-த்தில் நடக்கும்.
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
WT பப்ளிக்கேஷன்ஸ் இன்டெக்ஸ் 1999 —ஆங்கிலம்
◼ கிடைக்கும் புதிய காம்பாக்ட் டிஸ்குகள்:
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்—காம்பாக்ட் டிஸ்க் (எட்டு டிஸ்க்குகளைக் கொண்ட செட்) —ஆங்கிலம்
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! —பஞ்சாபி
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —சிந்தி
பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! —மலையாளம், தமிழ்