அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு மே: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். ஜூன்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? வீட்டு பைபிள் படிப்பைத் துவங்குவதில் கவனம் செலுத்துங்கள். ஜூலை, ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்! நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? மரித்தோரின் ஆவிகள்—உங்களுக்கு நன்மை செய்யுமா தீங்கிழைக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), போரில்லா உலகம் உருவாகுமா? (ஆங்கிலம்) போன்ற சிற்றேடுகளை அளிக்கலாம்.
◼ தனிப்பட்ட விதத்தில் நீங்கள் கடிதம் எழுதுகையில் அனுப்புனர் முகவரியில் சொஸைட்டியின் விலாசத்தை ஒருபோதும் எழுதக்கூடாது என எல்லா பிரஸ்தாபிகளுக்கும் நாங்கள் நினைப்பூட்ட விரும்புகிறோம். ஆர்வம் காட்டுபவர்களுக்கு, வீட்டில் இல்லாதவர்களுக்கு, அல்லது போய் பார்க்க முடியாத தூரத்திலிருப்பவர்களுக்குத் தபால் மூலம் சாட்சி கொடுப்பதற்காக அனுப்பப்படும் கடிதங்களாகவும் பிரசுரங்களாகவும் அவை ஒருவேளை இருக்கலாம். தபால் வழி சாட்சி கொடுக்கையில் அனுப்புனர் பகுதியில் உங்கள் சொந்த விலாசத்தையோ உங்கள் ராஜ்ய மன்றத்தின் விலாசத்தையோ குறிப்பிடுங்கள். தயவுசெய்து சொஸைட்டியின் விலாசத்தைக் குறிப்பிடாதீர்கள்.
◼ நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் ஜூன் 1 அல்லது அதற்குப் பின் சீக்கிரத்தில் சபையின் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். இது முடிந்தவுடன், அடுத்த முறை கணக்கு அறிக்கை வாசிக்கப்படுகையில் இதையும் சபையில் அறிவிக்கவும்.
◼ அநேக சபைகளில் பழைய பிரசுரங்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன. இப்படி பிரசுரங்கள் அதிகளவு கையிருப்பில் இருப்பது, செய்யப்படும் ஆர்டர்களுக்கு ஊழியக் குழுக்களும் முக்கியமாக ஊழியக் கண்காணிகளும் பொறுப்போடு கவனம் செலுத்த வேண்டியதன் தேவையை வலியுறுத்திக் காட்டுகிறது. அதிலும் முக்கியமாய் தற்போது நம்முடைய பிரசுரங்கள் ஊழியத்தில் விலையின்றி கொடுக்கப்படுவதைக் கவனத்தில் வைப்பது அவசியம். நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு தேவைப்படும் பிரசுரங்களுக்கும் அதிகமாக தயவுசெய்து ஆர்டர் செய்யாதீர்கள். இப்போதைக்கு இது போதுமானதாக இருக்கும். அதன்பிறகு நீங்கள் மாதா மாதம் ஆர்டர் செய்துகொள்ளலாம்.
பழைய பிரசுரங்களின் தற்போதைய கையிருப்பு தீர்ந்துபோகும் வரை சொஸைட்டி அப்பிரசுரங்களை மறுபதிப்பு செய்யாது. இதனால் நீங்கள் தருவிக்க விரும்பும் ஒரு பிரசுரம் கையிருப்பில் இல்லையென்றால் பேக்கிங் லிஸ்டில் அதற்கு இணையான என்ன பிரசுரம் இருக்கிறது என்பது குறிப்பிடப்படும்; தேவைப்பட்டால் அடுத்த முறை பிரசுர ஆர்டர் செய்கையில் அதில் சேர்த்துக்கொள்ள இது உதவியாய் இருக்கும். வரவிருக்கும் மாதங்களில் பழைய பிரசுரங்களை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு சபைகள் உறுதியாய் ஒத்துழைக்கும்படி நாங்கள் உற்சாகப்படுத்துகிறோம்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரம்:
தானியேல் தீர்க்கதரிசனத்திற்கு செவிசாயுங்கள்! —ஹிந்தி