அறிவிப்புகள்
▪ பிரசுர அளிப்புகள் ஜனவரி: சபையின் கையிருப்பிலுள்ள ஏதேனும் 192 பக்க பழைய புத்தகங்கள். இப்படிப்பட்ட புத்தகங்கள் கையிருப்பில் இல்லாத சபைகள் உயிர்—அது எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தினாலா படைப்பினாலா? (ஆங்கிலம்) அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம். மார்ச்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க விசேஷ முயற்சி எடுக்கப்படும். ஏப்ரல்: காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகள். ஆர்வம் காட்டுவோருக்கு தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து, வீட்டு பைபிள் படிப்புகளை துவக்க முயற்சி செய்யுங்கள்.
▪ ஜனவரி 10-ல் துவங்கும் வாரத்தில் நடைபெறும் ஊழியக் கூட்டத்தில் ஆஜராகும் முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகள் அனைவரும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். அவர்களுடைய பிள்ளைகளும் அடையாள அட்டையும் பெற்றுக்கொள்ளலாம்.
▪ பிப்ரவரி முதல் மார்ச் 5 வரையாக, வட்டாரக் கண்காணிகள் கொடுக்கும் புதிய பொதுப்பேச்சின் தலைப்பு “உண்மையில் அர்மகெதோன்—ஏன்? எப்போது?”
▪ இந்த வருடம் ஏப்ரல் 19, புதன்கிழமை அன்று சூரிய அஸ்தமனத்திற்குப் பின்பு நினைவு ஆசரிப்பை அனுசரிக்க சபைகள் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். முன்னதாகவே பேச்சு ஆரம்பமானாலும், நினைவு ஆசரிப்பு சின்னங்களை சுற்றி அனுப்புவது சூரிய அஸ்தமனத்திற்கு முன்பு ஆரம்பிக்கப்படக் கூடாது. உங்கள் பகுதியில் சூரிய அஸ்தமனம் எப்போது என்பதை தீர்மானிக்க உள்ளூர் செய்தித்தாளைப் பாருங்கள். ஒவ்வொரு சபையும் தனிப்பட்ட விதமாக நினைவு ஆசரிப்பை அனுசரிப்பது விரும்பத்தக்கதாக இருந்தாலும் அது எப்போதுமே சாத்தியமாவதில்லை. சாதாரணமாக ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் உபயோகிக்கையில் அன்றைய மாலை நிகழ்ச்சிக்காக வேறொரு இடத்தை உபயோகிக்க ஓரிரு சபைகள் ஏற்பாடு செய்யலாம். சாத்தியமானால், வருபவர்களை வரவேற்கவும், ஆர்வம் காட்டும் புதியவர்களை உற்சாகப்படுத்தவும், அந்நிகழ்ச்சியிலிருந்து முழு பயனை அடையவும், அடுத்த சபை தன் ஆசரிப்பை ஆரம்பிப்பதற்கு முன் சுமார் 40 நிமிடங்கள் இடைவெளி விடுவது நல்லது. ஆசரிப்புக்கு வருபவர்களை கூட்டிக் கொண்டு வருவது, திரும்ப கொண்டுபோய் விடுவது உட்பட வாகனங்களை நிறுத்துமிடத்தில் நெரிசலை தவிர்க்கவும் கவனமாக இருக்க வேண்டும். உள்ளூர் நிலைமைகளுக்கு என்ன ஏற்பாடுகள் மிகச் சிறந்தது என்பதை மூப்பர் குழு தீர்மானிக்க வேண்டும்.
▪ 2000-வது ஆண்டு நினைவு ஆசரிப்பு காலத்தின் விசேஷ பொதுப்பேச்சு ஏப்ரல் 16 ஞாயிறு அன்று கொடுக்கப்படும். அதன் தலைப்பு “மனித குலத்திற்கு மீட்கும் பொருள் ஏன் அவசியம்.” ஒரு குறிப்புத்தாள் கொடுக்கப்படும். அந்த வார இறுதியில் வட்டாரக் கண்காணியின் சந்திப்பு, வட்டார மாநாடு அல்லது விசேஷ மாநாட்டு தினம் போன்றவை இருந்தால், அந்த சபைகளில் இந்தப் பேச்சு அதற்கு அடுத்த வாரம் கொடுக்கப்படும். ஏப்ரல் 16, 2000-க்கு முன்பாக எந்தச் சபையிலும் விசேஷ பேச்சை கொடுக்கக்கூடாது.
▪ கையிருப்பில் உள்ள புதிய பிரசுரங்கள்:
உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் 1998
▪ மறுபடியும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:
சிற்றேடுகள்: வாழ்க்கையின் நோக்கமென்ன?
—கன்னடம், மராத்தி, மலையாளம்
▪ ஆடியோ காம்பேக்ட் டிஸ்க்:
இசை—வோகல்: ராஜ்ய பாடல்களை பாடுதல் (ஒரு டிஸ்க்)
இசை-ஆர்கெஸ்ட்ரா: ராஜ்ய இன்னிசை, எண் 1 முதல் 8 (எட்டு டிஸ்குகளையுடையது)
(எந்த டிஸ்க் வேண்டுமோ அந்த டிஸ்குகளை தனியாகவும் கேட்டு பெற்றுக்கொள்ளலாம்)