அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் நவம்பர்: கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? அல்லது நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. டிசம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. இதனுடன் ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள். ஜனவரி: சபையின் கையிருப்பிலுள்ள ஏதேனும் 192 பக்க பழைய புத்தகங்கள். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்.
◼ அடுத்த மாதத்திற்கான நம் ராஜ்ய ஊழியம் பிரதிகள், இம்மாதம் 20-ம் தேதிக்குள் சபைக்கு வந்து சேராவிட்டால், சபை நடத்தும் கண்காணி ஃபேக்ஸ் அல்லது டெலிபோன் மூலமாக சங்கத்திற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும்.
◼ வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள்—ஆங்கில சிற்றேட்டின் விலையில் மாற்றம் இருப்பதை தயவுசெய்து கவனிக்கவும். இந்த சிற்றேட்டின் விலை பயனியர்களுக்கு ரூபாய் 20-க்கும், பிரஸ்தாபிகளுக்கும் மற்றவர்களுக்கும் ரூபாய் 25-க்கும் கொடுக்கப்படும்.
◼ ஜனவரி 2000 முதல், விழித்தெழு! பத்திரிகை தெலுங்கில் மாதாந்திர பிரதியாக அல்ல. மாறாக மூன்று மாதத்திற்கொரு முறை சிற்றேடாக கிடைக்கும். எனவே, சபைகள் தெலுங்கு விழித்தெழு! பத்திரிகைக்கு சந்தா பெற வேண்டாமென கேட்டுக்கொள்கிறோம்.
◼மறுபடியும் கிடைக்கும் பிரசுரங்கள்:
கடவுள் உண்மையிலேயே நம்மைப்பற்றி அக்கறை உடையவராக இருக்கிறாரா?—குஜராத்தி, ஹிந்தி, மராத்தி, தமிழ்
“இதோ!” நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”—நேப்பாளி நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் —மலையாளம்
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
—குஜராத்தி, கன்னடம், காசி, மலையாளம், பஞ்சாபி
வாழ்க்கையின் நோக்கமென்ன? அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?—தமிழ்