உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/99 பக். 7
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1999
நம் ராஜ்ய ஊழியம்—1999
km 4/99 பக். 7

அறிவிப்புகள்

◼ ஏப்ரல் மற்றும் மே: காவற்கோபுரம், விழித்தெழு!-வுக்கு சந்தாக்கள். ஆர்வம் காட்டும் நபர்களிடம் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளித்து வீட்டு பைபிள் படிப்புகளை துவங்க முயற்சி எடுங்கள். ஜூன்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. ஜூலை மற்றும் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேடுகளில் ஏதேனும் ஒன்றை உபயோகிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், நாம் மரிக்கையில் என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்), வாழ்க்கையின் நோக்கமென்ன?​—⁠அதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில் பின்வரும் சிற்றேடுகளையும் அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், நம்முடைய பிரச்சனைகள்​—⁠அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, மரித்தோரின் ஆவிகள்​—⁠அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது உங்களைப் பாதிக்குமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? (ஆங்கிலம்), யுத்தமே இல்லாத உலகம் சாத்தியமா? (ஆங்கிலம்)

◼ எந்தச் சபைக்கும் நியமிக்கப்படாத பிராந்தியத்தில் பிரஸ்தாபிகள் வேலை செய்கையில் அறிவு புத்தகம் அல்லது தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அளிக்கலாம். வீட்டுக்காரரிடம் இந்த இரண்டு பிரசுரங்களும் ஏற்கெனவே இருந்தால் வேறு ஏதாவது பிரசுரத்தை அளிக்கலாம். வீட்டில் இல்லாதவர்களுக்கு அல்லது பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு கொடுப்பதற்காக வித்தியாசப்பட்ட துண்டுப்பிரதிகளை அனைவரும் வைத்திருக்க வேண்டும். அக்கறை காண்பிப்போரை மறுபடியும் சந்திக்க முயற்சியெடுக்க வேண்டும். முக்கியமாக, நியமிக்கப்படாத பிராந்தியத்தில் விசேஷ பயனியர்கள் வேலை செய்தால் அல்லது வேறு ஏதாவது சபை அருகிலிருந்தால் அவ்வாறு செய்யவேண்டும்.

◼ சங்கமானது அனைத்து நடத்தும் கண்காணிகள், செயலர்கள் ஆகியோரின் சரியான வீட்டு விலாசங்களையும் தொலைபேசி எண்களையும் வைத்திருக்க வேண்டியது அவசியம். இவற்றில் ஏதாவது மாற்றம் இருந்தால் சபையின் செயலர், நடத்தும் கண்காணி/செயலர் விலாச மாற்ற படிவத்தை (S-29) உடனே பூர்த்திசெய்து சங்கத்திற்கு அனுப்ப வேண்டும். தயவுசெய்து நபர்களின் பெயர்களை எழுதுகையில் இன்ஷியலைக் குறிப்பிடாமல் முழுபெயரையும் எழுதுங்கள்.

◼ பின்வரும் பயனியர் விண்ணப்ப படிவங்களை சபை செயலர்கள் போதுமான அளவில் வைத்திருக்க வேண்டும்: ஒழுங்கான பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவம் (S-205), துணைப் பயனியர் சேவைக்கான விண்ணப்ப படிவம் (S-205b), ஒழுங்கான பயனியர் சேவையை நிறுத்திவிடுவதற்கான விண்ணப்ப படிவம் (S-206). லிட்ரேச்சர் ரிக்குவெஸ்ட் ஃபார்மில் (S-14) இவற்றை ஆர்டர் செய்யலாம். ஒரு வருடத்திற்கு தேவையான எண்ணிக்கையாவது கையிருப்பில் வைத்திருங்கள். ஒழுங்கான பயனியர் விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்பு முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறதா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். விண்ணப்பம் செய்பவர்களுக்கு தங்களுடைய சரியான முழுக்காட்டுதல் தேதி ஞாபகமில்லை என்றால் தேதியைக் குத்துமதிப்பாக கணித்து, அதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.

◼ ஸ்பெஷல் ரிக்குவெஸ்ட் ஃபார்ம் ஃபார் ஆனுவல் ஐட்டம்ஸ் பிப்ரவரி மாத ஸ்டேட்மன்டோடு ஒவ்வொரு சபைக்கும் அனுப்பப்பட்டிருக்கிறது. 1999 மாநாட்டு பேட்ஜ் கார்டுகள், வருடம் 2000-⁠ற்கான வருடாந்திர ஐட்டம்கள் ஆகியவற்றை இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் உடனே ஆர்டர் செய்யவேண்டும். ஆனாலும், பிளாஸ்டிக் பேட்ஜ் கார்டு ஹோல்டர்கள் உங்களுக்கு தேவையென்றால், நிறைய ஐட்டங்கள் உள்ள லிட்ரேச்சர் ரிக்குவெஸ்ட் ஃபார்மோடு (S-AB-14) சேர்த்து அவற்றை ஆர்டர் செய்யுங்கள். ஏனென்றால் சிறிய பாக்கெட்டுகள் தபால் போக்குவரத்தில் அடிக்கடி தொலைந்துவிடுகின்றன.

◼ சமீபத்தில், லோனாவலாவில் நடந்த ஊழியப் பயிற்சி பள்ளியில் இந்தியாவிலிருந்து 23 மாணாக்கரும் நேபாளத்திலிருந்து 3 பேரும் கலந்துகொண்டனர். டிசம்பர் 20, 1998-⁠ல் அவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அவர்கள் 25 சபைகளிலிருந்து வந்திருந்தனர். அதில் 18 பேர் தங்கள் சொந்த சபைகளில் சேவிப்பதற்காக திரும்பி சென்றனர்; 8 பேர் புதிய விசேஷ பயனியர்களாக முழுநேர சேவையை ஏற்றுக்கொண்டனர். இந்தச் சகோதரர்கள் சேவிக்கும்படி நியமிக்கப்பட்ட சபைகள் அபரிமிதமான ஆசீர்வாதங்களைப் பெறும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்.

◼ ஜனவரி 1, 1999-லிருந்து நம் ராஜ்ய ஊழியம் அஸ்ஸாமி, மிசோரம் மொழிகளிலும் கிடைக்கிறது.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15)​—⁠நேவாரி

◼ கிடைக்கக்கூடிய புதிய ஆடியோ கேசட்டுகள்:

குடும்பங்களே​—⁠அன்றாட பைபிள் வாசிப்பை உங்கள் வாழ்க்கைமுறை ஆக்குங்கள்!​—⁠ஆங்கிலம், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி

பின்வருபவை நிரந்தரமாக ஸ்டாக் இல்லாமல் போனதால் ஜனவரி 1, 1999 தேதியிட்ட உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் லிஸ்ட் திருத்தப்பட வேண்டும்:

புத்தகங்கள்: உன் இளமை—அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல், உண்மையான சமாதானமும் பாதுகாப்பும்—இதை நீங்கள் எவ்வாறு கண்டடையலாம்?—மலையாளம்

சிறு புத்தகங்கள்: அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா? மற்றும் “ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி”—தமிழ்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்