உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/98 பக். 1
  • ஆகஸ்டில் சாதனை படைப்போமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்டில் சாதனை படைப்போமா?
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • இருபதாயிரம்!
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • நீங்கள் தவறாமல் ஊழியத்திற்குச் செல்பவரா?
    நம் ராஜ்ய ஊழியம்—2000
  • ஆகஸ்ட் மாதம்—ஊழியத்தில் சரித்திரம் படைக்கப் போகும் மாதம்!
    நம் ராஜ்ய ஊழியம்—2014
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 8/98 பக். 1

ஆகஸ்டில் சாதனை படைப்போமா?

1 அது, வருடம் 1963. யெகோவாவின் சாட்சிகளுக்கோ அது சாதனை படைத்த வருடம். ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த வருடத்தில்தான் உலகமுழுவதும் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை பத்து லட்சம் என்ற இலக்கை எட்டியது. நீங்கள் அப்போது சத்தியத்தில் இருந்திருந்தால், அத்தனை பேர் ராஜ்ய செய்தியை பிரசங்கித்ததை எண்ணி மகிழ்ச்சிக்கடலில் திளைத்தது உங்களுக்கு நினைவிருக்கும்! இப்பொழுதோ, ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே அத்தனை பிரஸ்தாபிகள் உள்ளனர். என்றாலும், அங்குள்ள பிரஸ்தாபிகளில் மாதத்துக்கு சராசரியாக 90,000 பேர் தாங்கள் ஊழியத்தில் கலந்துகொண்டதை அறிக்கை செய்வதில்லை. அந்தச் சூழ்நிலையே இந்தியாவிலும் நிலவுகிறது.

2 சவாலைச் சமாளியுங்கள்: ஐக்கிய மாகாணங்களில் இதுவரை பிரஸ்தாபிகளின் உச்ச எண்ணிக்கை பத்து லட்சத்தை எட்டவில்லை. ஆகஸ்ட் மாதத்தின்போது அதை எட்டுவதற்காக சங்கம் உழைக்கிறது. இந்தியாவில் 20,000 பிரஸ்தாபிகள் என்ற எண்ணிக்கையை எட்ட வேண்டும் என்பதே நமது இலக்கு. நாம் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடைந்தால் இந்தியாவிலும் ஆகஸ்ட் மாதத்தில் நாம் சாதனை படைத்துவிடுவோம்! நாம் ஒவ்வொருவரும் அவரவர் பங்கை செய்தால் நிச்சயமாக எட்ட முடியும்.

3 விடுமுறையில் செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் அவ்வாறு செல்வதற்கு முன்னதாகவே வெளி ஊழியத்தில் கொஞ்ச மணிநேரம் எடுக்க தீர்மானித்துக் கொள்ளுங்கள். துண்டுப்பிரதிகளையும், புரோஷர்களையும், பத்திரிகைகளையும் எடுத்துச் செல்லுங்கள். அவ்வாறு எடுத்துச் செல்வது, விடுமுறை காலத்தில் நீங்கள் யாரையெல்லாம் சந்திக்கிறீர்களோ அவர்களிடம் சாட்சி கொடுக்க உதவும். நீங்கள் செல்லுமிடத்திலும்கூட, உள்ளூர் பிரஸ்தாபிகளுடன் சேர்ந்து ஊழியம் செய்வதில் மகிழலாம்.

4 ஒருவேளை உங்கள் உடல் பலவீனமாய் இருக்கலாம். அப்படி இருந்தாலும்கூட ஊழியத்தில் பங்கேற்கலாம். டாக்டர்களிடமோ, நர்ஸுகளிடமோ, விசிட்டர்களிடமோ சந்தர்ப்ப சாட்சி கொடுக்கலாம். ஒருவேளை கடிதம் எழுதுவதன் மூலமாகவோ டெலிபோன் மூலமாகவோகூட சாட்சி பகரலாம்.

5 ஆகஸ்டில் வெளி ஊழியத்தில் பங்கேற்க தங்களுக்குக் கிடைக்கும் உதவிக்காக சிலர் போற்றுதல் தெரிவிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு உதவி அளிப்பதற்கு மூப்பர்களும் உதவி ஊழியர்களும் புத்தக படிப்பு நடத்துபவர்களும் ஏற்பாடு செய்ய வேண்டும். நீங்கள் எப்படி சாட்சி பகர்ந்தாலும்சரி, உங்கள் ஊழிய அறிக்கையை இந்த மாத முடிவில் மறக்காமல் கொடுத்துவிடுங்கள். அப்போதுதான் ஆகஸ்ட் மாதத்தில் நீங்களும் ஒரு பிரஸ்தாபியாய் இருந்தீர்கள் என்று கணக்கிடப்படும்.

6 இந்த நல்வாய்ப்பை மதியுங்கள்: ஊழியம் ஒரு “நற்பொருள்.” (2 தீ. 1:14) ராஜ்ய நற்செய்தியை பிரசங்கிக்குமாறு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த நல்வாய்ப்பை நாம் மதிக்கிறோம். (1 தெ. 2:4) யெகோவா நமக்கு செய்திருப்பவற்றையெல்லாம் நாம் நினைத்துப் பார்த்தால், வருடம் முழுவதும் இந்த நிகரற்ற வேலையில் தொடர்ந்து பங்கேற்கும்படி நாம் உந்தப்படுவோம். இடைவிடாமல் பிரசங்கித்து வருவதிலிருந்து நம்மை எதுவும் தடைசெய்ய அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு யெகோவாவின் சேவையில், ஆகஸ்ட் மாதத்தில் சாதனை படைப்போம்; அதற்குப் பிறகும் மாதாமாதம் அவரைப் பற்றி சாட்சி பகர உறுதியான தீர்மானத்துடன் இருப்போம்!—சங். 34:1.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்