அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம், அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் புத்தகம். மாற்றீடாக, பாதிவிலைக்கு அல்லது விசேஷ அளிப்புக்கென பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192 பக்க பழைய புத்தகம்.
குறிப்பு: மிகப் பெரிய மனிதர் புத்தகம் அல்லது என்றும் வாழலாம் (பெரியது) புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். (பயனியர்களுக்கு 15.00 ரூபாய்). என்றும் வாழலாம் (சிறிய) புத்தகத்தை 15.00 ரூபாய் (பயனியர்களுக்கு 10.00 ரூபாய்) நன்கொடைக்கு அளிக்கலாம்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில். பொருத்தமான சமயங்களில், மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? மற்றும் போர் இல்லாத உலகம் என்றாவது வருமா? என்ற ஆங்கில சிற்றேடுகள் அளிக்கப்படலாம். செப்டம்பர்: நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு. மாற்றீடாக ஆங்கில படைப்பு புத்தகம் அல்லது என்றும் வாழலாம் புத்தகம் அளிக்கப்படலாம்.
◼ சபையின் நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் சபையின் கணக்கு விவரங்களை ஜூன் 1 அல்லது வெகு சீக்கிரம் ஆடிட் செய்யவேண்டும். இது செய்து முடிக்கப்பட்டவுடன் சபைக்கு அறிவிப்பு செய்யவும்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?—பஞ்சாபி
◼ மறுபடியுமாக கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
குருசேத்திரத்திலிருந்து அர்மகெதோனுக்கும்—நீங்கள் தப்பிப்பிழைத்திருப்பதற்கும்—தமிழ்
சமாதான புதிய உலகில் வாழ்க்கை (துண்டுப்பிரதி எண் 15)—உருது
யெகோவாவின் சாட்சிகள் நம்புவது என்ன? (துண்டுப்பிரதி எண் 14)—உருது
“ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி” —தெலுங்கு, பெங்காலி, மராத்தி, ஹிந்தி