‘எல்லா மனிதருக்கும்’ சாட்சிகொடுத்தல்
1 வித்தியாசமான கலாச்சாரத்திலிருந்து அல்லது மதங்களிலிருந்து வந்தவர்களை சந்திக்கும்போது, “எல்லா மனிதரும் ரட்சிப்படையவும் சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவை அடையவும் வேண்டும்” என்பதே யெகோவாவின் சித்தம் என்பதை நினைவுகூருகிறோம். (1 தீ. 2:4, NW) துண்டுப்பிரதிகளோடும், சிற்றேடுகளோடும்கூட, தேவனையும் இயேசுவையும் பற்றிய உண்மையை அறியாத, வித்தியாசமான மதப் பின்னணிகளிலிருந்து வந்தவர்களுக்கு எந்த சமயத்திலும் உதவி செய்வதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட இரண்டு மிகச்சிறந்த புத்தகங்கள் நம்மிடம் இருக்கின்றன.
2 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகம், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையை விளக்கமாக எடுத்துக் காட்டுகிறது. இது, முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர்களைப் போலவே ஒருவர் தேவ குமாரனிடத்தில் நன்றாக பழக்கப்படவும் கவர்ந்திழுக்கப்படவும் உதவுகிறது. (யோவா. 12:32) நித்திய காலம் வாழமுடியும் என்பதும்கூட ஜனங்களைக் கவர்ந்திழுக்கிறது. நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகம் இப்படிப்பட்ட மகத்தான ஏற்பாட்டை பற்றி அனைவரும் தெரிந்துகொள்வதற்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மிகப் பெரிய மனிதர் புத்தகமும் என்றும் வாழலாம் புத்தகமும் தற்போது குறைந்த விலையில் அளிக்கப்படலாம். பொருத்தமான சந்தர்ப்பங்களில் இந்தப் புத்தகங்களை அறிமுகப்படுத்த கீழே கொடுக்கப்பட்டிருக்கும் அணுகுமுறைகளை முயற்சி செய்யலாம்.
3 “மிகப் பெரிய மனிதர்” புத்தகத்தை அளிப்பது பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தால் நீங்கள் இவ்விதம் கேட்கலாம்:
◼ “இயேசு கிறிஸ்துவ பத்தி நெனக்கும்போது உங்க மனசுல என்ன தோணுது? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இதுவரை வாழ்ந்தவர்களிலேயே இயேசு கிறிஸ்துதான் மிகப் பெரிய மனிதர்ன்னு அநேக சரித்திர ஆசிரியர்கள் கூட ஒத்துக்கறாங்க. [மிகப் பெரிய மனிதர் புத்தகத்தின் முன்னுரையிலிருந்து ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டவும்.] இயேசுவின் வாழ்க்கை, நாமெல்லாம் பின்பற்றுவதற்கு தகுந்த ஒரு முன்மாதிரின்னு பைபிள் சொல்லுது.” 1 பேதுரு 2:21-யும் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தின் முன்னுரையின் கடைசி பக்கத்தில் இருக்கும் முதல் பாராவையும் படித்துக்காட்டுங்கள். வீட்டுக்காரர் இயேசுவைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினாரென்றால் அந்தப் புத்தகத்தை அளிக்கவும். அந்த வீட்டை விட்டுச்செல்வதற்கு முன் யோவான் 17:3-ஐ வாசித்து இவ்விதம் கேட்கவும்: “நித்திய ஜீவனுக்கு வழி நடத்தும் அறிவை நாம் எப்படி தெரிஞ்சுக்கலாம்?” இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதற்கு மறுபடியும் வரும் நேரத்தை திட்டவட்டமாக தெரிவியுங்கள்.
4 ஜீவனை அளிக்கும் அறிவை எவ்விதம் பெற்றுக்கொள்ளலாம் என்பதை விளக்குவதற்காக அவரை மறுபடியும் சென்று சந்திக்கும்போது இவ்விதம் சொல்லலாம்:
◼ “நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவை எப்படி தெரிஞ்சுக்கலாங்கறத சொல்லறத்துக்காக வந்திருக்கேன்.” அறிவு புத்தகத்தை அளித்து முதல் அதிகாரத்தில் பைபிள் படிப்பு நடத்துவதை செய்துகாட்டலாம்.
5 “நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்” புத்தகத்தை அளிக்க விரும்பினால் இவ்விதம் கேட்கலாம்:
◼ “நித்தியமா வாழலாம்ங்கறது ஒரு கனவுதான்னு நீங்க நெனக்கறீங்களா?” அவர் பதில் சொன்ன பிறகு என்றும் வாழலாம் புத்தகத்தில் 7-ஆம் பக்கத்திற்கு திருப்பவும். நான்காம் பாராவிலுள்ள முக்கிய குறிப்புகளை வீட்டுக்காரரிடம் எடுத்துக்காட்டி சுத்தமான உலகில் வாழ்வது விரும்பத்தக்கதா என்பதாக அவரிடம் கேட்கலாம். பக்கங்கள் 8, 9-ல் இருக்கும் படங்களுக்கும் 11-13 பக்கங்களிலுள்ள படங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டவும். 13-ஆவது பாராவிலிருந்து ஒரு வசனத்தை எடுத்து படித்துக்காட்டவும். உண்மையான ஆர்வம் இருந்தால் இந்தப் புத்தகத்தை அளிக்கவும். வீட்டைவிட்டு கிளம்புவதற்குமுன் இந்தக் கேள்வியை கேட்கலாம்: “உண்மையிலேயே நித்திய காலமா வாழ விரும்பினா, அதுக்காக நீங்க என்ன செய்யணும்?” இந்தக் கேள்விக்கு பதிலளிக்க மறுபடியும் எப்போது வரலாம் என வீட்டுக்காரரிடம் கேட்டுத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
6 நித்திய ஜீவன் என்பது மெய்யானது என்பதை விளக்க நீங்கள் மறுசந்திப்பு செய்யும்போது இவ்விதம் கேட்கலாம்:
◼ “‘உண்மையிலேயே நித்திய காலமா வாழ விரும்பினா அதுக்காக நீங்க என்ன செய்யணும்னு’ போன முறை உங்க வீட்டுக்கு வந்தப்ப கேட்டேன் இல்லையா?” [பதில் சொல்ல அனுமதிக்கவும்.] என்றும் வாழலாம் புத்தகத்தில் பக்கம் 15-ஐத் திறந்து பாரா 19-ல் குறிப்பிடப்பட்டுள்ள யோவான் 17:3-ஐ வாசிக்கவும். இப்படிப்பட்ட விஷேச அறிவை அவரும் அவருடைய குடும்பத்தாரும் பெற விரும்பினால், அவர்களுக்கு வசதியான ஒரு நேரத்தில் தவறாமல் வந்து விளக்குவதில் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்பதை தெரிவியுங்கள். இவ்விதம் வீட்டுக்காரரை தவறாமல் சந்திக்க ஆரம்பித்தபின் தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அல்லது அறிவு புத்தகத்தை நீங்கள் அளிக்கலாம்.
7 சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கான ஏதுக்கள்: என்றும் வாழலாம் புத்தகத்தில் மற்றவர்களுக்கு போதிக்க உதவும் ஏதுக்கள் அநேகம் இருக்கின்றன; அவற்றை நீங்கள் சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு அல்லது மறுசந்திப்பிற்கு பயன்படுத்தலாம். சம்பாஷணையை ஆரம்பிப்பதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒரு பொருத்தமான கேள்வியை கேட்க வேண்டியதே. உதாரணத்திற்கு கீழ்க்காணும் கேள்விகளையும் அவற்றை விளக்கும் அதிகாரங்களையும் கவனிக்கவும்:
கடவுள்—அவர் யார்? (4)
பைபிள் உண்மையில் கடவுளால் கொடுக்கப்பட்டதா? (5)
மரணத்தில் என்ன நேரிடுகிறது? (8)
கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார்? (11)
யார் பரலோகத்திற்குச் செல்கிறார்கள்? ஏன்? (14)
நாம் பத்துக் கற்பனைகளின்கீழ் இருக்கிறோமா? (24)
8 என்றும் வாழலாம் புத்தகத்தில் குறிப்பிட்ட பக்கத்திற்கு திருப்பி விவரிக்கப்படும் குறிப்பை விளக்கலாம். பின்னர், இதோடு தொடர்புள்ள ஒரு கேள்வியைக் கேட்டு தேவைப்படுத்துகிறார் சிற்றேடு அல்லது அறிவு புத்தகத்திலிருந்து அதற்கு பதிலளிப்பதற்காக ஒரு மறுசந்திப்பை ஏற்பாடு செய்யலாம். வீட்டுக்காரரை பொதுப் பேச்சுக்கு வருமாறு அழைத்து அவரிடம் கைப்பிரதியை அளிக்க மறக்காதீர்கள். அவரிடம், இந்தப் புத்தகங்களுக்காகப் பெறப்படும் நன்கொடையைவிட இவற்றை தயாரிப்பதற்கான செலவு அதிகம் என்பதைக் குறிப்பிட்டு நாம் செய்யும் வேலைகள் எல்லாம் நன்கொடைகள் மூலம் ஆதரிக்கப்படுகின்றன என்பதை விளக்குங்கள்.
9 எல்லா நேர்மை இருதயமுள்ள ஜனங்களும் கடவுளையும் கிறிஸ்துவையும் பற்றிய சத்தியங்களை தேடிக்கொண்டிருக்கின்றனர். பரதீஸாக்கப்பட்ட பூமியில் என்றும் வாழலாம் என்பதைக் கேள்விப்படும்போது அநேகருக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாக இருக்கின்றது. நாம் ஊழியம் செய்வதன் மூலம் இப்படிப்பட்ட எல்லா ஆட்களுக்கும் உதவி செய்யலாம். ஆகவே, நாம் தொடர்ந்து, ‘கடுமையாக உழைத்து பிரயாசப்பட்டு, எல்லா மனிதரையும் ரட்சிக்கும் தேவன் மீது நம் நம்பிக்கையை வைப்போமாக.’ —1 தீ. 4:10, NW.