அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் மே: காவற்கோபுரம் அல்லது விழித்தெழு! பத்திரிகைகளுக்கு சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தா 90.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தாக்களும் 45.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால், பத்திரிகைகளின் தனிப்பட்ட பிரதிகளை 4.00 ரூபாய்க்கு கொடுக்க வேண்டும்.
சந்தாக்கள் எடுக்கும்போது, உருது, பஞ்சாபி (மாதாந்தர இதழ்கள்) ஆகியவற்றைத் தவிர காவற்கோபுரம், இந்திய மொழிகள் அனைத்திலும் நேப்பாளியிலும் மாதம் இருமுறை வருகிறது என்பதைத் தயவுசெய்து நினைவில் வையுங்கள்.
தமிழிலும் மலையாளத்திலும் விழித்தெழு! மாதம் இருமுறையும், கன்னடம், குஜராத்தி, தெலுங்கு, நேப்பாளி, மராத்தி, ஹிந்தி ஆகியவற்றில் மாதாந்தர இதழாகவும் வெளிவருகிறது. உருது, பஞ்சாபி, பெங்காலி ஆகியவற்றுக்கான விழித்தெழு! காலாண்டு விநியோகஸ்தர் பிரதிகள் சபைகளுக்குக் கிடைக்கும்; இந்த மூன்று மொழிகளிலும் தனிப்பட்ட சந்தாவுக்கான ஏற்பாடு இல்லை. ஜூன்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகம், 20.00 ரூபாய் நன்கொடைக்கு. (பயனியர்களுக்கு 15.00 ரூபாய்.) மாற்றீடாக, பாதிவிலைக்கு அல்லது விசேஷ அளிப்புக்கென பட்டியலிடப்பட்ட ஏதேனும் 192 பக்க பழைய புத்தகம்.
ஜூலை மற்றும் ஆகஸ்ட்: பின்வரும் 32 பக்க சிற்றேட்டில் ஏதேனும் ஒன்றை 6.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம்: “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?, கடவுளுடைய பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும், நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம், பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, வாழ்க்கையின் நோக்கமென்ன—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பொருத்தமான சமயங்களில், மரித்தோரின் ஆவிகள்—அவை உங்களுக்கு உதவ முடியுமா அல்லது தீங்கிழைக்க முடியுமா? அவை உண்மையில் இருக்கின்றனவா? மற்றும் போர் இல்லாத உலகம் என்றாவது வருமா? என்ற ஆங்கில சிற்றேடுகள் அளிக்கப்படலாம்.
குறிப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள அளிப்பு திட்டத்திற்கான பிரசுரங்களை இன்னும் ஆர்டர் செய்திராத சபைகள், தங்களுடைய அடுத்த பிரசுர ஆர்டர் நமூனாவில் (S-AB-14) ஆர்டர் செய்யலாம்.
◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:
அடிப்படை பைபிள் போதனைகள் (முழுக்காட்டுதல் பெற விரும்புகிறவர்களுக்காக நம் ஊழியம் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகள்)—உருது
நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?—கொங்கனி (கன்னட எழுத்தில்), ஒரியா
பைபிள் கலந்தாலோசிப்புகளை ஆரம்பித்து தொடருவது எப்படி (நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் பக்கங்கள் 9-24 வரை)—உருது
◼ கையிருப்பில் இல்லாத பிரசுரங்கள்:
பெரிய போதகருக்கு செவிகொடுத்தல்—தமிழ், மராத்தி, மலையாளம்
சபை புத்தகப் படிப்பு: மே 4, 1998-ல் இருந்து நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அட்டவணையின்படி, எல்லா சபைகளும் அறிவு புத்தகத்திலிருந்து படிப்பர். ஏப்ரல், நம் ராஜ்ய ஊழியத்தில் கொடுக்கப்பட்டிருந்ததைப்போல, புரோஷர்களைப் படிக்க மாட்டோம்.