உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 4/98 பக். 2
  • நம் புரோஷர்களைப் படித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நம் புரோஷர்களைப் படித்தல்
  • நம் ராஜ்ய ஊழியம்—1998
  • இதே தகவல்
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1995
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1989
  • தேவராஜ்ய செய்திகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1992
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1998
km 4/98 பக். 2

நம் புரோஷர்களைப் படித்தல்

பிப்ரவரி 1998 நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிக்கப்பட்டபடி, நம்முடைய சபை புத்தகப் படிப்புகளில், மே 4-ல் துவங்கும் வாரம் முதல் செப்டம்பர் 14, 1998-ல் முடியும் வாரம் வரை, நாம் மூன்று புரோஷர்களை ஒன்றன்பின் ஒன்றாக படிப்போம். ஒவ்வொரு மாதமும் நம் ராஜ்ய ஊழியத்தில் வரும் அட்டவணையின்படி, எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம், கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா? ஆகிய புரோஷர்கள் கணிசமான விறுவிறுப்புடன் படித்து முடிக்கப்பட வேண்டுமென்பதை நீங்கள் காண்பீர்கள். இது, நடத்துபவர், ஆஜராவோர் ஆகியோரின் பாகத்தில் நல்ல தயாரிப்பையும், அதோடு வேகமான பதில்களையும் அவசியப்படுத்துகிறது. எல்லா மக்களுக்கும் ஏற்ற ஒரு புத்தகம் புரோஷரில், அச்சடிக்கப்பட்ட கேள்விகள் இல்லாததால், நடத்துபவர் ஒவ்வொருவரும் பாராவிலுள்ள முக்கிய குறிப்புகளை வெளிக்கொண்டுவருகிற கேள்விகளை சொந்தமாய் தயாரிக்க வேண்டியிருக்கும். அட்டவணையிடப்பட்ட எல்லா பாராக்களையுமே வாசிப்பதென்பது சிலசமயங்களில் சாத்தியப்படாமல் இருக்கலாம்; ஆனால் முக்கியமான பாராக்கள் வாசிக்கப்படுவதை நடத்துபவர் நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும். முழு புரோஷரையும் வேகமாக படித்து முடிப்பது, அவற்றில் ஒட்டுமொத்தமாக உள்ளடங்கியிருப்பதை தெரிந்துகொள்ள உதவும்; அதன்மூலம் எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பொருளின்பேரில் ஆராய்ச்சி செய்கையில் எங்கே தேடவேண்டும் என்பதை நாம் அறிவோம்.

மறுபட்சத்தில், கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? புரோஷரிலிருந்து வெறும் மூன்று பாடங்கள் மட்டுமே ஒவ்வொரு படிப்புக்கும் அட்டவணையிடப்பட்டிருக்கிறது. இது எல்லா பாராக்களையும் வாசிப்பதற்கு போதுமான நேரத்தை கொடுப்பதையும், இடக்குறிப்பு செய்யப்பட்டிருக்கும் எல்லா வசனங்களையோ அல்லது அவற்றில் பெரும்பாலானவற்றையோ வாசித்து கலந்தாலோசிப்பதையும், நன்கு தயாரிக்கப்பட்ட குறிப்புகளை சொல்வதையும் நிச்சயப்படுத்துகிறது. இதுவும்கூட எல்லாருடைய பாகத்திலும் நல்ல தயாரிப்பைத் தேவைப்படுத்தும். இதுவே, பைபிள் மாணாக்கரோடு நாம் பெரும்பாலும் படிக்கும் புரோஷராக இருப்பதால், பைபிள் அறிவு சிறிதளவே உள்ளவர்களிடமோ, சிறிதளவுகூட இல்லாதவர்களிடமோ இதை எப்படி படிக்கலாம் என்பதையும் தேவையற்ற தகவல்களை அடுக்காமல் வேதப்பூர்வ பொருள்களை எவ்வாறு தெளிவாக நியாயப்படுத்தலாம் என்பதையும் யெகோவாவின் தராதரங்களுக்கான இருதயப்பூர்வமான போற்றுதலை வளர்த்துக்கொள்ள புதிய நபர்களுக்கு எவ்வாறு உதவலாம் என்பதையும் இதைப் பயன்படுத்தி நடத்துபவர் காட்ட வேண்டும். பாடம் 16-ஐ படித்து முடித்தபின்பு, முழு புரோஷரையும் மறுபார்வை செய்கையில், பைபிள் படிப்புகளில் பயன்படுத்தப்பட முடிந்த போதிக்கும் குறிப்புகளை நடத்துபவர் விசேஷமாக மறுபார்வை செய்யவேண்டும். இத்தகைய கலந்தாராய்வு கடவுளுடைய வார்த்தையின் போதகர்களாக நம்முடைய திறமைகளை அதிகரிக்கவும் கடவுள் நம்மிடம் தேவைப்படுத்தும் அனைத்தையும் செய்வதற்கான நம்முடைய தீர்மானத்தை பலப்படுத்தவும்கூட செய்யும்.—சங். 143:10; ஏசா. 50:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்