உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 10/97 பக். 7
  • நீங்கள் முழுநேர சாட்சியா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் முழுநேர சாட்சியா?
  • நம் ராஜ்ய ஊழியம்—1997
  • இதே தகவல்
  • முழுநேர ஊழியர்களை மறந்துவிடாதீர்கள்
    கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
  • உங்கள் வாழ்க்கைப் பணியாக நீங்கள் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1987
  • நீங்கள் வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2000
  • முழுநேர ஊழியம் தரும் சந்தோஷங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2002
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1997
km 10/97 பக். 7

நீங்கள் முழுநேர சாட்சியா?

1 இந்தக் கேள்விக்கு ஆம் என்று நீங்கள் பதிலளிப்பீர்களா? யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியக்காரர்கள் அனைவராலும் முழுநேர ஊழியம் செய்ய முடியாதென்றாலும், நாம் அனைவரும் அவரது முழுநேர சாட்சிகளாக நம்மை கருதவேண்டுமென்பது நியாயமல்லவா? நிச்சயமாகவே நாம் அவ்வாறு கருதவேண்டும்.

2 பகுதிநேர கிறிஸ்தவர் என்று எதுவுமேயில்லை. ‘பிதாவுக்குப் பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறேன்’ என்று இயேசு சொன்னார். (யோவா. 8:29) அதேவிதமாய் உணர்ந்த பவுல், “எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என நம்மைத் துரிதப்படுத்தினார். (1 கொ. 10:31) ஆகவே நாம் அனைவரும் நம்மை யெகோவாவின் முழுநேர சாட்சிகளாகவே கட்டாயம் கருதவேண்டும். இவ்விதத்தில் சிந்திப்பது, நாம் நாடும் அனைத்து நடவடிக்கைகளிலும் நமக்கு நன்மையளிக்கும்.

3 அத்தாட்சியைக் கவனியுங்கள்: நமது தோற்றமும் பேச்சும் நடத்தையும் நாம் உண்மையிலேயே யெகோவாவின் சாட்சிகள் என்பதை மற்றவர்களுக்குக் காட்டும். நாம் வெளி ஊழியத்தில் பங்குகொள்ளும்போதோ கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்லும்போதோ கண்ணியமான தோற்றமும் கட்டியெழுப்பும் பேச்சும் சரியான நடத்தையும் தேவை என்பதை உணர்ந்திருக்கிறோம். எனினும், பள்ளிக்குச் செல்கையிலும்சரி உலகப்பிரகாரமான வேலை செய்கையிலும்சரி பொழுதுபோக்கில் ஈடுபடுகையிலும்சரி, யெகோவாவின் நீதியான தராதரங்களுக்கு ஏற்றவாறு வாழ்கிறோம் என்பதற்கு நாம் செய்யும் அனைத்து காரியங்களும் அத்தாட்சியளிக்கவேண்டும்.

4 இயேசு சொன்னார்: “மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது. . . . மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத். 5:14-16) எல்லா சமயங்களிலும் நாம் செய்யும் அனைத்து காரியங்களிலும் இது அவ்வாறே இருக்கவேண்டும். எங்கிருக்கிறோம் அல்லது என்ன செய்கிறோம் என்ற காரணத்தினால், நாம் எப்போதாவது சாட்சிகொடுக்க தயங்கினால், நம்மைநாமே இவ்வாறு கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் யெகோவாவை பகுதிநேரம் சேவிக்கிறேனா அல்லது முழுநேரம் சேவிக்கிறேனா?’ கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை நாம் எப்போதும் நழுவவிடாதிருப்போமாக.

5 “நீங்கள் முழுநேர சாட்சியா?” என்ற கேள்விக்கு “ஆம்!” என்று நாம் அழுத்தம்திருத்தமாக பதிலளிக்கும்போது யெகோவாவை மகிமைப்படுத்தி அவரைப் பிரியப்படுத்துகிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்