தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
செப்டம்பர் 2 முதல் டிசம்பர் 23, 1996 வரையுள்ள வாரங்களின்போது தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சிந்திக்கப்பட்ட பகுதிகளின்பேரில் புத்தகங்களைப் பார்க்காமல் நடத்தப்படும் மறுபார்வை. கொடுக்கப்பட்ட நேரத்தில் உங்களால் கூடிய அத்தனை கேள்விகளுக்கும் விடைகளை எழுத ஒரு தனி தாளைப் பயன்படுத்தவும்.
[கவனிக்கவும்: எழுத்துமுறை மறுபார்வையின்போது எந்தக் கேள்விக்கும் விடையளிக்க பைபிளை மட்டுமே உபயோகிக்கலாம். கேள்விகளைப் பின்தொடர்ந்து குறிக்கப்பட்டுள்ள பிரசுரங்கள் உங்களுடைய தனிப்பட்ட ஆராய்ச்சிக்காக. காவற்கோபுர மேற்கோள்கள் எல்லாவற்றிற்கும் பக்கம் மற்றும் பாரா எண்கள் கொடுக்கப்படா.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றும் சரியா தவறா என்று விடையளியுங்கள்:
1. வெளிப்படுத்துதல் 13:1-ல் (NW) விவரிக்கப்பட்டிருக்கும் ஏழு தலைகளும் பத்துக் கொம்புகளும் உள்ள அந்த “மூர்க்க மிருகம்” சாத்தானைத் தவிர வேறு யாருமில்லை. [uw-TL பக். 63 பாரா 4]
2. ஒரு முழு மனிதனையே விழுங்கக்கூடிய ‘பெரிய மீன்’ உண்மையில் கிடையாது. (யோனா 1:17) [si பக். 153 பாரா 4]
3. பாலுறவைப் பற்றிய பைபிளின் கருத்து பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த மனிதர்களால் தோற்றுவிக்கப்பட்டது. [rs-TL பக். 370 பாரா 1]
4. தானியேல் 9:24, 25-லுள்ள தீர்க்கதரிசனம் இயேசுவின் பிறப்பைச் சுட்டிக்காட்டுகிறது. [kl-TL பக். 36 பாரா 8]
5. ஒரு பரிபூரண மனிதன் தவறுசெய்ய இயலாதவன். [rs-TL பக். 371 பாரா 3]
6. சாத்தானால் ஒளியின் தூதனுடைய வேஷத்தை தரித்துக்கொள்ள முடிவதனால், ஆவியுலகத் தொடர்பின் வழிவகைகளைக்கொண்டு நிறைவேற்றப்படும் சில காரியங்கள் தற்காலிகமாகப் பயனுள்ளவையாய்த் தோன்றுகையில் நாம் நம்மை மோசம்போகவிடக்கூடாது. [rs-TL பக். 386 பாரா 3]
7. ஓசியாவின் தீர்க்கதரிசனம் முக்கியமாய் இரண்டு கோத்திர ராஜ்யமாகிய யூதாவுக்கு உரைக்கப்பட்டது. [si பக். 144 பாரா 8]
8. யெகோவாவின் சிநேகத்தையும் பாதுகாப்பையும் விரும்புகிறவர்கள் ஆவியுலகத்தொடர்பு கூட்டங்களிலிருந்து எல்லாப் பங்கெடுப்பையும் துண்டித்துக்கொள்ளவேண்டும் மற்றும் அப்போஸ்தலர் 19:19-ல் பதிவுசெய்துள்ள முன்மாதிரியைப் பின்பற்றவேண்டும். [rs-TL பக். 389 பாரா 2]
9. செப்பனியா 3:9-ன்படி புதிய உலகில் கடவுளுடைய மக்கள் அனைவரும் ஒரே பொதுவான மொழியாகிய எபிரெய பாஷையைப் பேசுவதனால் ஐக்கியப்படுவார்கள். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 29-ஐக் காண்க.]
10. தானியேல் 12:1-ன் தீர்க்கதரிசன நிறைவேற்றமாக, மிகாவேல் 1914-ல் கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் ராஜாவானது முதற்கொண்டு ‘நின்று கொண்டிருக்கிறார்;’ சீக்கிரத்தில் அவர் யெகோவாவின் பெயரில் ஒரு வெல்லமுடியாத போர்வீர-ராஜாவாக ‘எழும்பி,’ இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு ஆக்கினையைக் கொண்டுவருவார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL93 11/1 பக். 23 பாரா 23-ஐக் காண்க.]
பின்வரும் கேள்விகளுக்கு விடையளியுங்கள்:
11. ஆகாய் 2:7-ல் (NW) குறிப்பிடப்பட்டிருக்கும் “சகல ஜாதியாரின் அருமையானவை” யாவர், அவர்கள் எவ்விதம் ‘உள்ளே வருகிறார்கள்?’ [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 30 பாரா 5-ஐக் காண்க.]
12. அந்த மூன்று எபிரெயர்கள் சொன்ன என்ன வேதாகம கூற்று, கடவுளுக்கான அவர்களது கீழ்ப்படிதல் தெய்வீக பாதுகாப்பையும் விடுவிப்பையும் சார்ந்ததாக இருக்கவில்லை என்று வெளிக்காட்டியது? (தானி. 3:16-18) [si பக். 141 பாரா 19]
13. எந்த வேதவசனம் மேசியாவின் பிறப்பிடத்தை முன்னறிவிக்கிறது? [si பக். 156 பாரா. 6]
14. இயேசுவின் நாமத்தில் செய்யப்படும் அற்புதங்கள் ஏன் கடவுளுடைய தயவுக்கோ ஆதரவுக்கோ நிச்சயமான அத்தாட்சிகளாக இருக்காது? [kl-TL பக். 46 பாரா 6-7]
15. ஆத்துமாவைப் பற்றி எபிரெய வேத எழுத்துக்கள் சொல்லும் காரியத்தை எவ்விதத்தில் 1 கொரிந்தியர் 15:45 ஆதரிக்கிறது? [rs-TL பக். 376 பாரா 1]
16. “உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்” என்று இயேசு தம்முடைய பிதாவினிடத்தில் உரத்த சத்தமிட்டு கூறியபோது, அவர் எதைக் குறிப்பிட்டார்? (லூக்கா 23:46) [rs-TL பக். 383 பாரா 3]
17. மரணத்தின்போது ஒரு நபரினுள் உயிர்ச் சக்தி செயல்படுவது நின்றுவிடுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்கு எந்தச் சொற்றொடரை சங்கீதம் 146:4 உபயோகிக்கிறது? [rs-TL பக். 385 பாரா 2]
18. மனிதர் உண்மையில் மரிக்கிறதில்லை என்ற எண்ணத்தை உருவாக்கியது யார், இந்தப் பொய் போதனையுடன் தொடர்புடைய அந்த ஆதி பொய் பைபிளில் எங்கே இருக்கிறது? [rs-TL பக். 385 பாரா 5]
19. ஆகாய் 2:9-ல், எந்த ஆலயம் ‘பிந்தின ஆலயம்,’ எது ‘முந்தின ஆலயம்’ மற்றும் ‘முந்தின ஆலயத்தைக்’ காட்டிலும் “பிந்தின ஆலயத்தின்” மகிமை ஏன் பெரியதாயிருக்கும்? [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL89 6/1 பக். 30-ஐக் காண்க.]
20. ஓசியா 14:3 (தி.மொ.) இஸ்ரவேலர்களை என்ன செய்யும்படி தூண்டியது, இன்று யெகோவாவின் சாட்சிகள் எவ்வாறு அந்தத் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிறார்கள்? (எபி. 13:15) [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL94 9/15 பக். 10 பாரா 1-2-ஐக் காண்க.]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றையும் பூர்த்திசெய்ய தேவைப்படும் சொல் (சொற்கள்) அல்லது சொற்றொடரை அளியுங்கள்:
21. கடவுளால் கொடுக்கப்பட்ட வேலையை அங்கே _________________________ முடித்தப்பின் சுமார் 200 வருடங் களுக்குப்பின் அந்த _________________________ நகரம் இரத்தப்பழிகளின் நகரம் என்பதாக _________________________ தீர்க்கதரிசியால் அழைக்கப்பட்டது. [si பக். 154 பாரா 10, பக். 160 பாரா 10]
22. நாம் கடவுளை _________________________ , விசுவாசமும் அன்பும் நிறைந்த இருதயங்களால் தூண்டப்பட்டு வணங்குவது அவசியமாகும்; அவருடைய வார்த்தையைப் படிப்பதன் மூலம் அவரை _________________________ வணங்க வேண்டும். [kl-TL பக். 45 பாரா 4]
23. ஆவிக்குரியபிரகாரம் பாதுகாக்கப்படுவதற்காக, நாம் தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிவதில் எந்தப் பாகத்தையும் கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது, அதில் _________________________ , _________________________ மார்க்க
வசம்,’ “சமாதானத்தின் _________________________ ஆயத்தம்,”
_________________________ [“பெரிய,” NW] கேடகம்,’
_________________________ தலைச்சீரா,” _________________________ பட்டயம்,’ அடங்கியுள்ளன. [uw-TL பக். 68 பாரா 14]
24. இயேசுவே மேசியா என்பதை நிரூபிக்கும் அத்தாட்சியின் மூன்று மூலங்கள் (1) _________________________, (2) _________________________ , (3) _________________________ . [kl-TL பக். 34-8 பாரா 6-10]
25. ஒபதியா முன்னறிவித்தபடியே, _________________________ எருசலேம் ரோமரால் அழிக்கப்பட்ட பின்பு, _________________________ ஒரு ஜனமாக சரித்திரத்திலிருந்து மறைந்துபோயினர். [si பக். 152 பாரா 12]
பின்வரும் கூற்றுகள் ஒவ்வொன்றிலும் சரியான விடையைத் தெரிந்தெடுங்கள்:
26. ஆமோஸ் (8:11; 9:2, 3; 9:11, 12)-ன் புரிந்துகொள்ளுதல், இஸ்ரவேலரல்லாதவர்களைக் கிறிஸ்தவ சபைக்குள் கூட்டிச்சேர்ப்பது கடவுளுடைய சித்தம் என்பதை முதல் நூற்றாண்டு ஆளுங்குழு உணர்ந்துகொள்ள உதவியது. (அப். 15:13-19) [si பக். 150 பாரா 16]
27. யெகோவா (ஆமோஸை; யோவேலை; ஆபகூக்கை) அழைத்தபோது, அவர் ஒரு தீர்க்கதரிசியுமல்ல தீர்க்கதரிசியின் குமாரனும் அல்ல, ஆனால் ஆடு மேய்ப்பவனும், ஸிக்கமோர் மரங்களின் (பேரீச்சம்; அத்தி; ஒலிவ) பழங்களைப் பொறுக்குபவருமாகவும் இருந்தார். [si பக். 148 பாரா 1]
28. பரிசுத்த ஆவி இன்னதென்ற திருத்தமான குறிப்பு அந்த ஆவியைக் குறிப்பிடும் (மத கோட்பாடுகளுடன், கிறிஸ்தவமண்டல பாரம்பரியங்களுடன்; வேதவசனங்கள் எல்லாவற்றுடன்) பொருந்தவேண்டும், பரிசுத்த ஆவி (ஓர் ஆள்; திரித்துவத்தின் ஒரு பாகம்; கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி) என்ற தர்க்கரீதியான முடிவுக்கு இது கொண்டுசெல்கிறது. [rs-TL பக். 381 பாரா 1]
29. யோவேல் 2:32 (பேதுரு; யோவான்; பவுல்)-ஆல் (அப்போஸ்தலர் 2:40; ரோமர் 10:13; 1 தீமோத்தேயு 2:4)-ல் மேற்கோள் காட்டப்பட்டது, அதில் யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்துகிறார். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 4/1 பக். 20 பாரா 16-ஐக் காண்க.]
30. பரிசுத்த ஆவியை உடையவர்களாக இருக்கிறோம் என்பதற்கான அத்தாட்சியை (மதவெறியார்வ வெளிப்பாடுகள்; நடுநடுங்குதல் அல்லது உருண்டு புரளுதல்; வைராக்கியமாக சாட்சிக்கொடுத்தல்) மூலமும் ஆவியின் (ஐந்து; ஏழு; ஒன்பது) கனிகளை வெளிக்காட்டுவதன் மூலமும் அளிக்கிறோம். [rs-TL 382 பாரா 1, 2]
பின்வரும் வேதவசனங்களைக் கீழ்க்கண்ட கூற்றுகளோடு பொருத்துங்கள்: உபா. 18:10-12; ஓசி. 10:12; செப். 2:3; யாக். 1:26, 27; 1 யோவா. 3:4, 8
31. நம்முடைய வணக்கம் கடவுளால் ஏற்கத்தக்கதாக இருக்கவேண்டுமென்றால், அது உலக பழக்கவழக்கங்களால் கறைபடாமல் இருப்பதோடு மட்டுமின்றி, கடவுள் இன்றியமையாததாக கருதும் காரியங்களையும் அது உட்படுத்தவேண்டும். [kl-TL பக். 51 பாரா 20]
32. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் சரியானதையே செய்வதன் மூலம் நாம் யெகோவாவின் அன்புள்ள தயவை அறுவடை செய்வோம். [வாராந்தர பைபிள் வாசிப்பு; w-TL96 3/15 பக். 23 பாரா 2-3-ஐக் காண்க.]
33. எல்லா வகையான குறிசொல்லுதலும் அசுத்த ஆவிகளுடன் அல்லது பேய்களுடன் தொடர்புகொள்வதற்கு அல்லது அவற்றால் பீடிக்கப்படுவதற்கு வரவழைப்பதாயிருக்கின்றன மற்றும் இத்தகைய காரியங்களில் ஈடுபடுவது படுமோசமான முறையில் யெகோவாவுக்கு உண்மையற்று நடப்பதாகும். [rs-TL பக். 387 பாரா 5]
34. வேண்டுமென்றே பாவப்போக்கைத் தெரிந்துகொண்டு, அதைப் பழக்கமாக்கிக் கொண்டிருப்பவர்களைக் கடவுள் குற்றவாளிகளாகக் கருதுகிறார். [rs-TL பக். 374 பாரா 3]
35. கடவுளுடைய இரக்கத்தின்பேரில் நாம் தகாத் துணிவுகொள்ளக்கூடாது. [si பக். 165 பாரா 11]