மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறை காண்பிப்பதன் மூலம் யெகோவாவைப் பின்பற்றுங்கள்
1 மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறையைக் காண்பிப்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரியாவார். சர்வலோக பேரரசராக, அவர் தமது மனித சிருஷ்டிப்பின் தேவைகளைக் குறித்து உணர்வுள்ளவராக இருக்கிறார். (1 பே. 5:7) இயேசு, தீயோர்மீதும் நல்லோர்மீதும் சூரியனை உதிக்கப்பண்ணி மழையைப் பெய்யப்பண்ணும் தம் பிதாவின் இயற்போக்குகளை வெளிக்காட்டும்படி தம்மைப் பின்பற்றினவர்களை உற்சாகப்படுத்தினார். (மத். 5:45) மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறையைக் காண்பிப்பதன் மூலம்—சந்திக்கும் ஒவ்வொருவருடனும் ராஜ்ய செய்தியை பகிர்ந்துகொள்வதற்குத் தயாராயிருப்பதன் மூலம்—நீங்கள் யெகோவாவைப் பின்பற்றலாம். ஜூலையில் பயன்படுத்தவிருக்கும் சிற்றேடுகளை முழுவதுமாக தெரிந்துவைத்திருப்பதன் மூலம், மற்றவர்களுக்கு ஆவிக்குரிய உதவியை அளிப்பதற்கான ஒரு நல்ல நிலையில் நீங்கள் இருப்பீர்கள். கீழ்க்காணும் ஆலோசனைகள், எவ்வாறு முதல் சந்திப்பிற்குத் தயாரித்து, அதன்பின் அக்கறை காண்பித்தவர்களை சரியான நேரத்தில் மீண்டும் சந்திப்பது என்பதன்பேரில் சில கருத்துக்களை அளிக்கின்றன.
2 “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” என்ற சிற்றேட்டை அளிக்கும்போது, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “கடவுள் உண்மையிலேயே மனிதர்கள்பேரில் அக்கறை உள்ளவராக இருக்கிறாரென்றால் ஏன் அவர்கள் துன்பப்படும்படி அனுமதிக்கிறார் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்தச் சிற்றேடு இந்தக் கேள்விக்குத் திருப்தியான பதிலளிப்பது மாத்திரமல்லாமல் மனிதன் தனக்குத்தானேயும் தன் பூமிக்குரிய வீட்டின்மீதும் கொண்டுவந்திருக்கும் எல்லா விதமான சேதங்களையும் நீக்கப்போவதாக கடவுள் வாக்களித்திருக்கிறார் என்பதையும் காண்பிக்கிறது.” பக்கம் 27-லுள்ள 23-வது பாராவை வாசியுங்கள். அதற்குக் கீழே உள்ள படத்தைக் காண்பித்து, பாரா 22-ல் உள்ள சங்கீதம் 145:16-ஐ வாசியுங்கள். சிற்றேட்டை அளியுங்கள். அது ஏற்றுக்கொள்ளப்பட்டால், அடுத்த சந்திப்பில் பதிலளிக்கப்படுவதற்கான ஒரு கேள்வியைக் கேளுங்கள். உதாரணத்திற்கு, “மனிதவர்க்கத்திற்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதும் பூமியை பரதீஸாக மாற்றுவதுமான கடவுளுடைய நோக்கத்தை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?” என்பதைப் போன்ற கேள்வியைக் கேட்கலாம்.
3 “கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறை உள்ளவராக இருக்கிறாரா?” என்ற சிற்றேட்டை நீங்கள் விட்டுவந்திருந்தால், மறுசந்திப்பின்போது இந்த விதத்தில் நீங்கள் இன்னொரு கலந்தாலோசிப்பை ஆரம்பிக்கலாம்:
◼ “சென்ற முறை நான் உங்களை சந்தித்தபோது, கடவுள் உண்மையிலேயே நம்மீது அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதைக் குறித்தும், மனிதன் தனக்குத்தானேயும் தன் பூமிக்குரிய வீட்டின்மீதும் கொண்டுவந்திருக்கும் எல்லா விதமான சேதங்களையும் நீக்கப்போவது கடவுளின் நோக்கம் என்பதைக் குறித்தும் நாம் சிந்தித்தோம்.” சிற்றேட்டை பக்கங்கள் 2, 3-ல் உள்ள படத்திற்குத் திருப்பி, இவ்வாறு சொல்லுங்கள்: “மனிதவர்க்கத்திற்கு ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதும் பூமியை பரதீஸாக மாற்றுவதுமான கடவுளுடைய நோக்கத்தை அவர் எவ்வாறு நிறைவேற்றுவார் என்ற கேள்வியுடன் நாம் சம்பாஷணையை நிறுத்தினோம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பக்கம் 17-க்குத் திருப்பி, பாரா 2-ஐயும் தானியேல் 2:44-ஐயும் வாசியுங்கள். அதன்பின், பக்கம் 18-ல் உள்ள 12-வது பாராவை வாசியுங்கள். சிற்றேட்டில் உள்ள 9-வது பகுதியை உங்களோடு சிந்திக்க வீட்டுக்காரர் விரும்புகிறாரா என்று அவரைக் கேளுங்கள். அவர் விரும்பினால், அவருடன் சேர்ந்து அதைப் படியுங்கள்.
4 “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற சிற்றேட்டை அளிக்கும்போது பயன்படுத்தத்தக்க ஒரு அணுகுமுறை இது. அதன் அட்டைப்படத்தைக் காண்பித்து இவ்வாறு சொல்லுங்கள்:
◼ “மரணத்தில் தங்கள் அன்பானவர்களை இழந்திருக்கும் லட்சக்கணக்கான ஜனங்களுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் அளித்திருக்கும் இந்தச் சிற்றேட்டை இன்று நாங்கள் அளிக்கிறோம். இறந்தவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறதென்பதைக் குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] உயிர்த்தெழுதல் என்ற கடவுளுடைய வாக்குறுதியைக் குறித்து பைபிள் தெளிவாக சொல்கிறது.” யோவான் 5:28, 29-ஐ வாசியுங்கள். சிற்றேட்டைத் திறந்து, பக்கம் 28-ல் உள்ள கடைசி பாராவிலும் பக்கம் 31-ல் உள்ள முதல் பாராவிலும் உள்ள குறிப்புகளின்பேரில் கருத்துக்களைச் சொல்லுங்கள். அதனுடன் கொடுக்கப்பட்டிருக்கும் படங்களைக் காண்பியுங்கள். சிற்றேட்டை அளியுங்கள். “முடிவில் மரணம் முழுமையாகவே நீக்கப்படும் என்பதைக் குறித்து நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?” என்ற கேள்வியைக் கேட்பதன்மூலம் மறுசந்திப்பிற்கான அடித்தளத்தை நீங்கள் ஏற்படுத்தலாம்.
5 “நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்” என்ற சிற்றேட்டை நீங்கள் அளித்திருந்தால், மறுசந்திப்பு செய்யும்போது இந்த அளிப்பைப் பயன்படுத்த நீங்கள் விரும்பலாம்:
◼ “நாம் முன்பு பேசியபோது, உயிர்த்தெழுதல் என்ற அற்புதமான நம்பிக்கையைப் பற்றி கலந்தாலோசித்தோம். முடிவில் மரணம் முழுமையாகவே நீக்கப்படும் என்பதைக் குறித்து நாம் ஏன் நிச்சயமாயிருக்கலாம் என்பதை நான் உங்களிடம் விட்டுச்சென்ற சிற்றேடு விளக்குகிறது. கடவுளுடைய வாக்குறுதிகள் ஆறுதலளிப்பவையாயும் நம்பிக்கையளிப்பவையாயும் இருப்பதாக நீங்கள் காணவில்லையா?” பதில் சொல்ல அனுமதியுங்கள். பின்பு சிற்றேட்டை பக்கம் 31-க்குத் திருப்பி, இரண்டாவது, மூன்றாவது பாராக்களையும் வெளிப்படுத்துதல் 21:1-4-ஐயும் வாசியுங்கள். என்றென்றுமே மரணமில்லாத வாழ்க்கையை அனுபவிப்பதன்பேரில் நமக்கிருக்கும் எதிர்பார்ப்பை சிறப்பித்துக் காண்பியுங்கள். காண்பிக்கப்படும் அக்கறையைப் பொறுத்தும் அந்தச் சமயத்தில் உள்ள சூழ்நிலைகளைப் பொறுத்தும், அறிவு புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை ஆரம்பிப்பதைக் குறித்து நீங்கள் சொல்லலாம் அல்லது அடுத்த மறுசந்திப்புக்கு வழிநடத்தும் மற்றொரு கேள்வியைக் கேட்கலாம்.
6 “வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?” என்ற சிற்றேட்டை அளிக்கும்போது கீழ்க்காண்பவற்றை நீங்கள் சொல்லலாம்:
◼ “வாழ்க்கையின் நோக்கமென்ன என்பதைக் குறித்து அநேக ஜனங்கள் யோசித்திருக்கின்றனர். ‘நான் ஏன் இங்கே இருக்கிறேன்? என் எதிர்காலம் எப்படி இருக்கும்? எதிர்காலம் எனக்கு எதை வைத்திருக்கிறது?’ என்றெல்லாம் தங்களையே கேட்டுக்கொள்கின்றனர். பதில்களை எங்கே கண்டுபிடிக்கலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] பைபிள் என்ன சொல்கிறது என்பதைக் கவனியுங்கள். [சங்கீதம் 36:9-ஐ வாசியுங்கள்.] நாம் ஏன் இங்கே இருக்கிறோம் என்பதை விளக்குவதற்கு மனித சிருஷ்டிகரே மிகவும் தகுதிபெற்றிருக்கிறார் என்ற முடிவிற்கு வருவது நியாயமானதல்லவா? [பதில் சொல்ல அனுமதியுங்கள்.] இந்தச் சிற்றேடு, கடவுள் நமக்கு வைத்திருக்கும் மகத்தான நோக்கத்தைக் குறித்து சொல்கிறது.” பக்கங்கள் 20, 21-க்குத் திருப்பி, படக்குறிப்பை வாசித்து, படத்தின்பேரில் குறிப்புகளைச் சொல்லுங்கள்; பின்பு சிற்றேட்டை அளியுங்கள். ஏற்றுக்கொள்ளப்பட்டால், இவ்வாறு கேளுங்கள்: “மனிதர்கள் பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ்வது இன்னும் கடவுளுடைய நோக்கமாக இருக்கிறது என்பதைக் குறித்து நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?” மீண்டும் சந்திப்பதற்கான நேரத்தைத் தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
7 “வாழ்க்கையின் நோக்கமென்ன?—அதை நீங்கள் எப்படிக் கண்டுபிடிக்கலாம்?” என்ற சிற்றேடு அளிக்கப்பட்டிருந்தால், நீங்கள் மறுசந்திப்பு செய்யும்போது இப்படிப்பட்ட எதையாவது சொல்லலாம்:
◼ “நான் உங்களை முன்பு சந்தித்தபோது, மனித வாழ்க்கைக்கு உண்மையிலேயே ஒரு நோக்கமிருக்கிறது என்ற பைபிளின் கருத்தை உங்களோடு கலந்தாலோசிப்பதில் நிச்சயமாகவே சந்தோஷப்பட்டேன்.” பக்கம் 31-ல் உள்ள படத்தைக் காண்பித்து, “மனிதர்கள் பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழ்வது இன்னும் கடவுளுடைய நோக்கமாக இருக்கிறது என்பதைக் குறித்து நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?” என்று கேளுங்கள். பக்கம் 20-ல் உள்ள 3-வது பாராவை வாசியுங்கள். பக்கம் 21-ல் கொடுக்கப்பட்டிருக்கும் “இன்னும் கடவுளுடைய நோக்கம்” என்ற உபதலைப்பின் கீழுள்ள குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். சிற்றேட்டின் பின் அட்டைக்குத் திருப்பி, ஓர் இலவச வீட்டுப் பைபிள் படிப்பை அளிப்பதைக் குறித்து அங்கு எழுதியிருப்பதை வாசியுங்கள். அறிவு புத்தகத்தைக் காண்பியுங்கள்; பைபிளைப் படிப்பதற்கு ஒரு கருவியாக அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைக் காண்பிப்பதாக சொல்லுங்கள்.
8 “சத்தியத்தை அறிகிற அறிவை அடைய” நேர்மை இருதயமுள்ள ஜனங்களுக்கு உதவுவதில் நமக்கு உண்மையான ஆர்வமிருப்பதை நம் ஊழியம் வெளிக்காட்ட வேண்டும். (1 தீ. 2:4) ஆகவே, ஊழியத்தில் பங்குபெறும்போது எந்தெந்த மொழிகளையெல்லாம் நீங்கள் ஒருவேளை எதிர்ப்படுவீர்களோ அந்தந்த மொழிகளிலெல்லாம் சிற்றேடுகளை எடுத்துச் செல்லுங்கள். நீங்கள் சிற்றேட்டை அளித்திருக்கும் ஒவ்வொரு நபரையும் மீண்டும் சந்திப்பதற்கு உங்கள் ஊழிய அட்டவணையில் நேரத்தை ஒதுக்குங்கள். அவர்கள்மீது உண்மையான அக்கறையை நீங்கள் வெளிக்காட்டுவதானது, பொய் மதத்தில் செய்யப்படும் சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷர்கள் தப்பிப்பிழைப்பதற்காக அடையாளப்படுத்தப்பட உதவுவதில் விளைவடையலாம். (எசே. 9:4, 6) மற்றவர்கள்பேரில் உண்மையான அக்கறையைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் யெகோவாவை பின்பற்றுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்வதிலிருந்து வரும் சந்தோஷத்தையும் திருப்தியையும்கூட நீங்கள் அனுபவிப்பீர்கள்.—பிலிப்பியர் 2:20-ஐ ஒப்பிடுக.