நோக்கத்தோடுகூடிய மறுசந்திப்புகள்
1 மறுசந்திப்பு செய்கையில், நீங்கள் கடந்த முறை சம்பாஷித்திருக்கும் பொருளைப் பற்றி அந்த நபர் அறிந்திருப்பவற்றுடன் மேலும் அதிகத்தைச் சேர்க்க நீங்கள் ஒரு வசனத்தை உபயோகிக்க பெருமுயற்சி செய்யவேண்டும்.
2 ஒரு சந்தாவைப் பெறவில்லை என்றால் பத்திரிகை அளிப்புகள் செய்த இடங்களில் பத்திரிகை மார்க்கத்தை ஏற்படுத்திக்கொள்வதே மறுசந்திப்புகள் செய்கையில் கொண்டிருக்கும் இலக்குகளில் ஒன்றாக இருக்கிறது. இதைப் போன்ற ஒரு எளிய பிரசங்கம் பலனளிப்பதாயிருக்கலாம்:
◼ “நான் உங்களிடம் விட்டுச்சென்ற, நாம் கடவுளுக்கு ஏன் பயந்திருக்க வேண்டும் என்பதை விவரிக்கும் காவற்கோபுர கட்டுரையை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள் என நம்புகிறேன். ‘ஏன் இவ்வளவு குறுகிய வாழ்நாள்?’ எனக் கேட்கும் விழித்தெழு! கட்டுரை ஒன்றை இன்று கொண்டுவந்திருக்கிறேன். அது ஒரு நல்ல கேள்வி அல்லவா?” இவ்வாறு சொல்வதன்மூலம் நீங்கள் தொடரலாம்: “யோவான் 3:16-ல் உள்ள இயேசுவின் வார்த்தைகள் நித்திய ஜீவனுக்கான வாக்கை அளிக்கின்றன. தயவுசெய்து இந்தப் பத்திரிகையை ஏற்றுக்கொண்டு பைபிளில் கொடுக்கப்பட்டுள்ள உறுதியான நம்பிக்கையால் உற்சாகமடையுங்கள்.” அடுத்த பிரதிகளுடன் மீண்டும் வருவதாக விளக்கிய பின், முடிந்தால் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்குக் கடவுள் எதை வாக்களித்திருக்கிறார் என்பதை மேலும் கலந்தாலோசியுங்கள். ஒவ்வொருமுறை பத்திரிகைகளை அளிக்கச் செல்கையிலும் நீங்கள் மறுசந்திப்பு ஒன்றை அறிக்கை செய்யலாம் என்பதை நினைவில் வையுங்கள்.
3 நீங்கள் “போரில்லா ஓர் உலகம்—எப்போது?” என்ற கட்டுரையை அளித்திருந்தால், இவ்வாறு சொல்லலாம்:
◼ “போர்களே ஒருபோதும் இல்லாது இருந்திருக்குமானால் இந்த பூமியில் வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருந்திருக்கும்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] கடவுள் என்ன செய்வதாக வாக்களித்திருக்கிறார் என்பதை நான் உங்களுக்குக் காட்டுகிறேன்.” சங்கீதம் 37:10, 11-ஐ வாசித்து, கடவுளுடைய சித்தம் இந்த பூமியில் செய்யப்படுகையில் காரியங்கள் எப்படியிருக்கும் என்பதை விவரியுங்கள். மத்தேயு 6:9, 10-ல் பதிவுசெய்யப்பட்டிருக்கிறபடி இயேசு தம்முடைய சீஷர்களுக்கு எதற்காக ஜெபிக்கும்படி கற்பித்தார் என்பதை அந்த நபருக்கு சொல்லுங்கள். இயேசுவின் வார்த்தைகளினுடைய அர்த்தத்தைப் புரிந்துகொள்ள அவருக்கு உதவுங்கள். வீட்டுக்காரர் முன்பு காவற்கோபுரத்திற்கோ விழித்தெழு!-விற்கோ சந்தா செய்திருக்கவில்லை என்றால், இப்போது அதை அளித்து, மேலுமான கலந்தாலோசிப்புக்கு மீண்டும் செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
4 நீங்கள் “ஏன் இவ்வளவு குறுகிய வாழ்நாள்?” என்ற முதற்பக்க தொடரை மேலுமாக கலந்தாலோசிக்க சென்றிருந்தால், நீங்கள் இவ்விதமாக ஆரம்பிக்கலாம்:
◼ “கடந்த முறை நான் வந்தபோது மனிதனின் நீண்ட வாழ்நாள் குறித்து நாம் பேசினோம். விழித்தெழு! கட்டுரைகளில் நீங்கள் கண்டவிதமாகவே, சந்தேகத்திற்கிடமின்றி, 70 அல்லது 80 வருடங்களுக்கும் மேலாக வாழ்வதற்கு விஞ்ஞானிகள் கொஞ்சம் நம்பிக்கையளித்து உதவுகின்றனர். ஆனால், பைபிளின் வாக்குறுதியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] மனிதனுக்காக கடவுள் ஏதோ மேலான ஒன்றை மனதில் கொண்டிருக்கிறார் என்று பைபிள் காட்டுகிறது.” பிறகு யோவான் 17:3-ஐ வாசித்து, அறிவை எடுத்துக்கொள்ளுதல் எவ்வாறு நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும் என்பதை விளக்குங்கள். இந்தச் சமயத்தில் நீங்கள் ஒரு வீட்டு பைபிள் படிப்பை அளிக்கலாம் அல்லது மற்றொரு கலந்தாலோசிப்புக்கு ஏற்பாடு செய்யலாம்.
5 நம்முடைய ஊழியத்தில் பைபிள் படிப்பு ஒன்றை ஆரம்பிப்பதே முக்கிய இலக்காக இருக்கிறது. பத்திரிகைகளை ஏற்றுக்கொண்ட ஒருவருக்கு அநேக மறுசந்திப்புகளை ஒருவேளை நீங்கள் செய்திருக்கலாம். மறுமுறை செல்கையில் ஏன் இந்த அணுகுமுறையை முயற்சிசெய்யக்கூடாது?:
◼ “மதத்தைப் பற்றியும் தற்கால வாழ்க்கையில் அதன் மதிப்பீட்டைப் பற்றியும் வெகு பல வித்தியாசமான கருத்துக்களை ஆட்கள் கொண்டிருக்கின்றனர். கடவுள் ஏன் அக்கிரமத்தை அனுமதித்திருக்கிறார் அல்லது நாம் ஏன் வயோதிபராகி இறக்கிறோம் என்பதைக் குறித்து முரண்பாடான கருத்துக்கள் இருக்கின்றன. கடவுள் செவிசாய்க்கும் விதமாக ஜெபிப்பது எப்படி என்பதை அறிந்துகொள்ள சில ஆட்கள் விரும்புகின்றனர்.” நம்முடைய பைபிள் படிப்பு வெளியீடுகளில் ஒன்றை, வீட்டுக்காரருடைய அக்கறையைத் தூண்டும் என நீங்கள் நினைக்கும் தலைப்புக்குத் திருப்பி, படிப்பு எப்படி நடத்தப்படுகிறது என்பதை சுருக்கமாக நடித்துக்காட்டுங்கள்.
6 யெகோவா நோக்கமுள்ள தேவனாக இருக்கிறார். அக்டோபரில் நோக்கத்தோடுகூடிய மறுசந்திப்புகளை செய்வதன்மூலம் நாம் அவரைப் பின்பற்றுவோமாக.