சாந்தகுணமுள்ளோருக்கு நற்செய்தி
1 நியாயத்தீர்ப்பு நடைபெறவிருக்கும் காலத்தில் நாம் வாழ்கிறோம். (எசே. 9:5, 6) எவ்விடத்திலும் இருக்கும் சாந்தகுணமுள்ள மக்கள், வரப்போகும் காரியங்களுக்குத் தயாராக இருப்பதற்காக அவற்றைக் குறித்து அறிவிக்கப்பட்டிருப்பது அவசரமானதாக இருக்கிறது. யெகோவா, தம்முடைய அன்பார்ந்த தயையால், ‘சாந்தகுணமுள்ளோருக்கு நற்செய்தியை அறிவிக்க’ தம்முடைய மக்களிடம் கட்டளையிட்டிருக்கிறார். (ஏசா. 61:1, 2, NW) இந்த நற்செய்தியை எவ்விடத்திலும் அறிவிப்பதற்கு நம் பத்திரிகைகள் உதவுகின்றன.
2 நம்மை பலப்படுத்துவதும் தூண்டுவிப்பதுமான பலமான ஆவிக்குரிய உணவை காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! அளிக்கின்றன. கடவுளுடைய ராஜ்யம், சீக்கிரத்தில் இந்தப் பூமியை ஒரு பரதீஸாக மாற்றும் என்ற நற்செய்தியால் காவற்கோபுரம் சாந்தகுணமுள்ளோருக்கு ஆறுதலளிக்கிறது. விழித்தெழு! சமாதானமும் பாதுகாப்புமுள்ள புதிய உலகைப்பற்றிய சிருஷ்டிகரின் வாக்குறுதியில் நம்பிக்கையை வளர்க்கிறது. சாந்தகுணமுள்ளோருக்கு நற்செய்தியைக் கொண்டுசெல்வதற்கான மிக வேகமான வழிகளில் ஒன்று, இந்தப் பத்திரிகைகளைப் பரந்த அளவில் விநியோகிப்பதாகும். சமீபத்திய வெளியீடுகளில் என்ன பேச்சுக் குறிப்புகளை நாம் சிறப்பித்துக் காட்டலாம்?
3 பொருத்தமான சந்தர்ப்பங்களில், “தினந்தோறும் பைபிளை வாசிப்பதிலிருந்து பயனடைதல்” என்ற கட்டுரையைக் குறிப்பிட்டுக் காட்டி, இவ்வாறு கேட்பதன்மூலம் மே 1 “காவற்கோபுர” பிரதியை அளிக்கலாம்:
◼ “பைபிளை வாசிப்பதால் என்ன நன்மையை நாம் பெறலாம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? [பதிலுக்காக அனுமதியுங்கள்.] பைபிள்தானே, ரோமர் 15:4-ல் அந்தக் கேள்விக்கான பதிலைக் காண உதவுகிறது. [ரோமர் 15:4-ஐ வாசியுங்கள்.] அநேக மக்கள், குறிப்பாக சர்ச் பின்னணியை உடையவர்கள், பைபிளை வைத்திருக்கிறார்கள்; ஆனால் வெகு சிலருக்கே அதை ஒழுங்காக வாசிப்பதற்கான நேரம் கிடைக்கிறது. எதிர்காலத்திற்கான ஒரே நிச்சயமான நம்பிக்கை பைபிளிலேயே காணப்படுகிறது என்று நாம் நம்புகிறோம்; அதை வாசித்தால் நாம் பயனடைவோம்.” மேலுமான பொருத்தமான குறிப்புகளைச் சொல்லிவிட்டு, பத்திரிகைகளைக் கொடுங்கள்.
4 “நம் மூதாதையருக்கு புதியதோர் வாழ்க்கை” என்ற தலைப்பை உடைய ஆவலைத் தூண்டும் கட்டுரையை மே 15 “காவற்கோபுரம்” சிறப்பித்துக் காட்டுகிறது. இந்த அறிமுகத்தின் மூலமாக நீங்கள் அக்கறையைத் தூண்டலாம்:
◼ “அநேகர் தங்களுடைய மூதாதையர் எப்படி இருந்திருப்பார்கள் என்று அடிக்கடி யோசித்திருக்கின்றனர். அவர்கள் இறந்துபோய்விட்டிருப்பதால், நாம் ஒருபோதும் அறிந்துகொள்ள மாட்டோம் என்று அநேகர் முடிவு செய்கின்றனர். எப்போதாவது நம் மூதாதையரைப்பற்றி அறிந்துகொள்ள ஏதாவது சாத்தியம் இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” பதிலுக்காக அனுமதியுங்கள். யோவான் 5:28, 29-ஐ வாசித்து, பரதீஸான ஒரு பூமியில் அவர்களுக்குப் புதியதோர் வாழ்க்கையைக் கொடுப்பதாக கடவுள் எப்படி வாக்களித்திருக்கிறார் என்று விளக்குங்கள்.
5 இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு மே 8 “விழித்தெழு!” பிரதியை அளிக்கலாம்:
◼ “வாழ்வதை உண்மையிலேயே பயனுள்ளதாக்குவது எது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?” பதிலுக்காக அனுமதியுங்கள். பக்கம் 26-ல், “வாழ்க்கையின் அர்த்தமென்ன?” என்ற கட்டுரைக்குக் கவனத்தைத் திருப்பி, பிரசங்கி 2:11-ல் சாலொமோன் சொல்வதை வாசியுங்கள். பின்னர், 12-ம் அதிகாரம், 13-ம் வசனத்தில் அவர் கொடுக்கும் புத்திமதியைக் குறிப்பிடுங்கள். பத்திரிகையை எடுக்கும்படி வீட்டுக்காரருக்கு அழைப்புவிடுங்கள்.
6 மே 14-க்கு முன்னர் பத்திரிகைகளை வைத்து ஊழியம் செய்கிறீர்களென்றால், ராஜ்ய செய்தி எண் 34-ஐ எடுத்துச்செல்ல நிச்சயமாயிருங்கள்; இதுவரை அதைப் பெற்றிராத எவருக்கும் அளியுங்கள். உங்களுடன் பத்திரிகைகளை எடுத்துச் செல்லுங்கள்; எப்போதும், சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதுகூட அவற்றை அளிக்க தயாராக இருங்கள். எப்போதும் நம் பிரசுரங்களைப் பகிர்ந்தளிக்க தயாராக இருக்கவேண்டும்; குடும்பத்திலுள்ள மற்றவர்களாலும் அவர்களைச் சந்திக்க வரும் நண்பர்களாலும் அவை வாசிக்கப்படக்கூடும் என்பதை உணர்ந்தவர்களாக அவ்வாறு செய்ய வேண்டும். (1 தீ. 6:18) சாந்தகுணமுள்ளோருக்கு நாம் கொண்டுச்செல்லக்கூடிய நற்செய்தி அவர்களுடைய உயிர்களைக் காக்கக்கூடும்.—1 தீ. 4:16.