தேவராஜ்ய செய்தி
காமரூன்: ஜூலையில் ஒரு புதிய கிளைக்காரியாலயம் தொடங்கி வைக்கப்பட்டது. இதே சமயத்தில் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை 21,323-ஆக உயர்ந்து ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது.
இந்தியா: 1995, ஜனவரி 1-ல் இருந்து கேரளத்தில் எட்டாவது வட்டாரம் செயல்பட ஆரம்பித்திருக்கிறது. இதோடு நாட்டில் உள்ள வட்டாரங்களின் எண்ணிக்கை 23-ஆக உயர்ந்தது. அவற்றில் நான்கு வட்டாரங்கள் ‘a’ மற்றும் ‘b’ என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.
பிலிப்பீன்ஸ்: 1,17,519 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஒரு புதிய உச்சநிலையை அடைந்திருப்பதாக பிப்ரவரி அறிக்கை காட்டுகிறது. பைபிள் படிப்புகளின் எண்ணிக்கை 1,00,146-ஆக அறிக்கை செய்யப்பட்டு முதல் தடவையாக 1,00,000-ஐக் கடந்தது. நான்கு வண்ண அச்சடிப்புக்கு மாற்றியதன் காரணமாக, நவம்பர் 1993-ன்போது அளித்த பத்திரிகைகளின் எண்ணிக்கை 1,00,000-க்கும் அதிகமாக இருந்தது.