விடுமுறைநாள் சாட்சிகொடுத்தல்
உலகப்பிரகாரமான பண்டிகை சமயத்தில் அநேகர் வேலையிலிருந்தும் பள்ளியிலிருந்தும் விடுப்பில் இருப்பதால், விடுமுறைநாள் சாட்சிகொடுத்தலுக்காக மூப்பர்கள் விசேஷ ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். சம்பிரதாயமான விடுமுறைநாள் வாழ்த்துக்களை நாம் பரிமாறிக்கொள்ளாததால், இப்படிப்பட்ட வாழ்த்துக்களுக்கு எவ்வாறு பிரதிபலிப்பது என்பதன்பேரில் சாமர்த்தியம் தேவைப்படுகிறது. வாழ்த்து தெரிவிப்பதைக் குறித்து சர்ச்சை பண்ணிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. பெரும்பாலானோருடைய விஷயத்தில் நாம் வெறுமனே வீட்டுக்காரருடைய—அல்லது அயலகத்தார் அல்லது உறவினருடைய—நல்வாழ்த்துக்களுக்காக அவருக்கு நன்றி தெரிவித்து, பின்பு நம்முடைய பிரசங்கத்தைத் தொடரலாம். பதிலுக்கு நாம் வீட்டுக்காரருக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்காததைக் குறித்து அவர் எதுவும் சொல்வாராகில், கடவுளைக் கனப்படுத்துகிற மக்களிடம் தேவைப்படுத்துகிறபடி, நாங்கள் கிறிஸ்து இயேசுவை கனப்படுத்துகிறோம், ஆனால் மனிதனால் உண்டுபண்ணப்பட்ட பழக்கவழக்கங்கள் கிறிஸ்துவையோ கடவுளையோ கனப்படுத்துவதில்லை, ஆகவே நாங்கள் அவற்றில் பங்கெடுப்பதில்லை என்று சொல்லலாம்.