அக்கறை காட்டியவரை மறுபடியும் சந்தியுங்கள்
1 சந்தாக்களைப் பெறுவதிலும் பத்திரிகைகளையும் சிற்றேடுகளையும் வினியோகிப்பதிலும் நம்மில் பலர் வெற்றிகண்டிருக்கிறோம். நாம் மறுபடியும் சென்று மேலுமாக அக்கறையைத் தூண்டுவதற்கு முயற்சி செய்வது முக்கியமானது. அவ்வாறு செய்வதில் நாம் வெற்றிகாண்பது, மறுசந்திப்பு செய்வதற்கு முன்பாக எவ்வளவு நன்றாய் நாம் தயார்செய்கிறோம் என்பதன்பேரில் சார்ந்திருக்கலாம்.
2 இளைஞர் பலர் முதியோருக்கு அக்கறைக்குரியதாயுள்ள அதே காரியங்களைப்பற்றி கவலையுடையோராக இருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். விழித்தெழு! பத்திரிகையின் மே வெளியீடுகள் தற்போதைய பிரச்னைகளை இளைஞரின் நோக்குநிலையிலிருந்து ஆராயும் கட்டுரைகளைக் கொண்டுள்ளன. வாழ்க்கையில் உண்மையிலே முக்கியமாயிருப்பதை மதித்துணருவதற்கு, இளைஞருக்கும் அவர்கள் பெற்றோருக்குங்கூட உதவிசெய்யக்கூடிய உட்பார்வையை இந்தக் கட்டுரைகள் அளிக்கின்றன.
3 மே 8 “விழித்தெழு!” பிரதியை நீங்கள் அளித்திருந்தால், (மாதம் இருமுறை வரும் பதிப்பில்) அதைப் பின்தொடர்ந்து மே 22-ன் வெளியீட்டை அளிக்க திட்டமிடலாம். இவ்வாறு நீங்கள் சொல்லலாம்:
◼ “நான் கடைசியாக உங்களிடம் விட்டுச்சென்ற வெளியீடு, பிள்ளைகளுக்கான நம்பிக்கையைப் பற்றிய பொருளின்பேரிலுள்ள கட்டுரைகளை முக்கியப்பகுதியாகக் கொண்டிருந்தது. எதிர்காலத்துக்கு எந்த நம்பிக்கையும் அளிக்காத ஓர் உலகத்தில் நம்முடைய இளைஞர் வளர வேண்டியதாக உள்ளது. அவர்களில் பலர் தங்கள் மனக்கசப்பைக் கலகத்தனமான நடத்தையால் காட்டுகின்றனர். ஆனால் தங்கள் சமநிலையைக் காத்து, உயர்ந்த குறிக்கோள்களை விடாதிருக்கும் சிலர் இருக்கின்றனர். சமீபத்தில் வெளிவந்த இந்த விழித்தெழு! பத்திரிகையிலுள்ள இந்தக் கட்டுரை, பருவ வயதினனான ஓர் இளைஞனின் நிலைநிற்கையை உயர் நீதிமன்றம் எவ்வாறு ஆதரித்ததென்பதை விவரிக்கிறது. அது சொல்வதற்கிருப்பதை நீங்கள் போற்றுவீர்களென்று நினைக்கிறேன்.”
4 நீங்கள் முதலில் சந்தித்தபோது, வீட்டுக்காரர் பத்திரிகைகளின் தனிப் பிரதிகளை மாத்திரமே ஏற்றிருந்தால், நீங்கள் மறுசந்திப்பு செய்கையில் பின்வரும் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி ஒரு சந்தாவை அளிக்கத் தீர்மானிக்கலாம்:
◼ “இந்தப் பூமியின் எதிர்காலத்தைப்பற்றி சென்றமுறை நாம் சுருக்கமாய்க் கலந்துபேசினதை நான் மகிழ்ச்சியோடு அனுபவித்தேன். அக்கிரமத்துக்கும் துன்பத்துக்கும் கடவுள் ஒரு முடிவைக் கொண்டுவரும்போது வாழ்க்கை இங்கே எவ்வாறு இருக்குமென்பதை நீங்கள் கற்பனை செய்து காணமுடிகிறதா? கடவுளுடைய ராஜ்யம் கொண்டுவரவிருக்கும் ஆசீர்வாதங்களுக்கு காவற்கோபுரம் (அல்லது விழித்தெழு!) தவறாமல் கவனத்தைக் கவர்ந்து விவரிக்கிறதென்று உங்களுக்குத் தெரியுமா? [நீங்கள் விட்டுச்சென்ற அந்தப் பத்திரிகையிலிருந்து அல்லது நீங்கள் வைத்துள்ள ஒன்றிலிருந்து ஒரு குறிப்பைத் தெரிந்தெடுங்கள்.] இந்தப் பத்திரிகைகளில் ஒன்றை (அல்லது இரண்டையும்) தவறாமல் ஒழுங்காக நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கும்படி நான் விரும்புகிறேன்.”
5 நீங்கள் திரும்பி செல்கையில், அந்த வீட்டுக்காரர் தன் சொந்த மதப் புத்தகங்களைப் பெற்று வருகிறாரெனவும் அது போதுமென்று உணருகிறாரென்றும் ஒருவேளை உங்களுக்குத் தெரியவரலாம். பின்வருமாறு நீங்கள் சொல்லலாம்:
◼ “நம்முடைய மதம் எதுவாயினும், நாமெல்லாரும்—பெரும் குற்றம், வினைமையான நோய், சுற்றுப்புற கேடுகள் போன்ற—ஒரே வகையான பல கவலைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் அல்லவா? [பதிலுக்கு நேரம் அனுமதியுங்கள்.] இந்தப் பிரச்னைகளுக்கு உண்மையான பரிகாரம் ஏதாவது உண்டென்று நீங்கள் நினைக்கிறீர்களா? [2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.] எங்கள் புத்தகத்தின் நோக்கம் காவற்கோபுர பத்திரிகையின் 2-ம் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது. [தெரிந்தெடுத்த ஒன்று அல்லது இரண்டு வாக்கியங்களை வாசியுங்கள்.] யெகோவாவின் சாட்சிகளாக இராத ஆட்கள் பலர் எங்கள் பிரசுரங்களில் அடங்கியுள்ள, பைபிளில் ஆதாரம் கொண்ட நம்பிக்கையுள்ள செய்தியின் காரணமாக அவற்றை வாசிப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர்.” வீட்டுக்காரரின் பிரதிபலிப்பு சாதகமாக இருந்தால் நம்முடைய பைபிள் படிப்பு திட்டத்தை விளக்கிக் கூறுங்கள்.
6 நீங்கள் இந்த அணுகுமுறையைப் பயன்படுத்தலாம்:
◼ “சென்றமுறை நான் இங்கிருந்தபோது, நம்முடைய உலகத்துக்கான எதிர்கால நம்பிக்கைகளைப்பற்றி நாம் பேசினோம். இந்தச் செய்தி அறிவிப்பைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? [அக்கறைக்குரிய சமீப செய்தி விவரம் ஏதாவதைக் குறிப்பிடுங்கள்.] இதைப்போன்ற காரியங்களை ஜனங்கள் கேள்விப்படுகையில், இந்த உலகத்துக்கு என்ன நேரிட்டுக்கொண்டிருக்கிறதென வியப்புடன் சிந்திக்கின்றனர், இல்லையா? இத்தகைய காரியங்கள், பைபிளில் 2 தீமோத்தேயு 3:1-5-ல் முன்னறிவித்துள்ள ‘கடைசிநாட்களில்’ நாம் வாழ்கிறோமென்று குறிப்பிட்டுக் காட்டுகின்றனவென நாங்கள் நம்புகிறோம்.” சிறப்புப் பகுதிகளை வாசித்தப் பின்பு, அந்த விவரிப்புக்குப் பொருந்தும் ஆட்களை அவர் கண்டிருக்கிறாராவென நீங்கள் கேட்கலாம். நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் பக்கங்கள் 234-8-ல் உள்ள உபதலைப்புகள் ஒன்றின்பேரில் கலந்தாராய்தலைத் தொடருங்கள்.
7 நாம் நன்றாய்த் தயாரித்து உதவிசெய்வதற்கு உண்மையான ஆவலைக் காட்டினால், நேர்மையான இருதயமுள்ளோர் செவிகொடுப்பரென நாம் நம்பிக்கையுடனிருக்கலாம்.—யோவா. 10:27, 28.