1994-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை
1994-ல் தேவராஜ்ய ஊழியப் பள்ளி நடத்துகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகள் பின்பற்றப்படும்.
பாடப்புத்தகங்கள்: பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு (New World Translation of the Holy Scriptures) [bi12] ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் [uw] (“வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” (1990-ம் வருட பதிப்பு) (“All Scriptures Is Inspired of God and Beneficial”] [si], எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் [gt], மற்றும் கலந்துபேசுவதற்கான பைபிள் பேச்சுப்பொருள்கள் [td] ஆகியவை நியமிக்கப்படும் பேச்சுகளுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும்.
பாட்டு ஜெபம் மற்றும் வரவேற்புக் குறிப்புகளுடன் பள்ளி துவக்கப்பட்டு, பின்வருமாறு தொடரும்.
பேச்சு நியமிப்பு எண் 1: 15 நிமிடங்கள். இந்தப் பேச்சு மூப்பர் அல்லது தகுதிபெற்ற உதவி ஊழியர் ஒருவரால் கையாளப்படவேண்டும், ஒரே உண்மையான கடவுளுடைய வணக்கத்தில் ஒன்றுபடுதல் அல்லது “வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது, பயனுள்ளது” என்ற புத்தகங்களின் சார்ந்ததாயிருக்கும். இந்த பேச்சு நியமிப்பு 10 முதல் 12 நிமிடங்கள் நீடிக்கும் ஒரு போதகப் பேச்சும் அதைத் தொடர்ந்து இந்தப் பிரசுரத்திலுள்ள அச்சிடப்பட்ட கேள்விகளைப் பயன்படுத்தி 3 முதல் 5 நிமிட வாய்முறையான மறுபார்வையும் அடங்கியதாக இருக்க வேண்டும். இதன் குறிக்கோள் வெறுமே விஷயங்களின் நடைமுறைப் பயனின் பேரில் கவனம் செலுத்தி, சபைக்கு அதிகப் பயனுள்ளவை முக்கியமாக எழும்பி நிற்கும்படி செய்ய வேண்டும். காட்டப்பட்டுள்ள பொருளைப் பயன்படுத்த வேண்டும். இந்த விஷயத்திலிருந்து முழுமையாகப் பயன்பெறும்படி எல்லாரும் முழு கவனத்தோடு முன் ஆயத்தம் செய்யும்படி ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருக்கும் சகோதரர்கள் கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் முடிக்க கவனமாயிருக்கு வேண்டும். தேவைப்பட்டால் அல்லது பேச்சு கொடுப்பவர் முன்னதாகக் கேட்டுக்கொண்டால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கலாம்.
பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள்: 6 நிமிடங்கள். இதைப் பள்ளிக் கண்காணி அல்லது உள்ளூர் தேவைகளுக்கு அந்த விஷயத்தைப் பயன்தரத்தக்க முறையில் பொருத்திக்கூறக்கூடிய மற்றொரு மூப்பர் அல்லது உதவி ஊழியர் கையாள வேண்டும். இது, நியமிக்கப்பட்ட வாசிப்புப்பகுதியின் வெறும் ஒரு சுருக்கமாக இருக்கக்கூடாது. நியமிக்கப்பட்ட அதிகாரங்கள் எல்லாவற்றின் உள்ளிட்ட கருத்தைத் தொடக்கத்தில் மறுபார்வையிடுவதை 30 முதல் 60 வினாடிகளுக்கு மட்டுப்படுத்துங்கள். அந்தத் தகவல் ஏன் மற்றும் எவ்வாறு நமக்குப் பயனுள்ளது என்பதைச் சபையார் மதித்துணர உதவிசெய்வதே முதன்மையான நோக்கம் பின்பு பள்ளிக் கண்காணி மாணாக்கரை அவருடைய பள்ளி அறைகளுக்குச் செல்ல அனுமதி கொடுப்பார்.
பேச்சு எண் 2: 5 நிமிடங்கள். இது நியமிக்கப்பட்ட பகுதியை வாசிக்கும் பைபிள் வாசிப்பு, ஒரு சகோதரனால் கொடுக்கப்படவேண்டும். மன்றத்திலுள்ள பள்ளித் தொகுதிக்கும் மற்ற துணை தொகுதிகளுக்கும் இது பொருந்தும். மாணாக்கர் முகவுரையிலும் முடிவுரையிலும் சுருக்கமான தகவல் விளக்கங்கள் கொடுக்கத்தக்கதாக வாசிக்கப்படுவதற்கு நியமிக்கப்படும் பகுதி பொதுவாய்ப் போதியளவு சிறிதாக உள்ளது. சரித்திர சூழமைவு, தீர்க்கதரிசனம் அல்லது கோட்பாடு சம்பந்தமான முக்கியத்துவம், மற்றும் நியமங்களின் பொருத்தம் ஆகியவை சேர்க்கப்படலாம். கொடுக்கப்பட்ட எல்லா வசனங்களும் இடைநிறுத்தம் இன்றி வாசிக்கப்பட வேண்டும். வாசிக்கவேண்டிய வசனங்கள் தொடர்ச்சியாக இல்லாத சந்தர்ப்பத்தில், வாசிப்பு தொடரவிருக்கும் வசனத்தை மாணாக்கர் நிச்சயமாகவே குறிப்பிடலாம்.
பேச்சு எண் 3: 5 நிமிடங்கள், இந்தப் பேச்சு சகோதரிகளுக்கு நியமிக்கப்படும். இந்தப் பேச்சுக்குரிய பொருள்கள் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர் என்ற புத்தகத்தைச் சார்ந்ததாயிருக்கும். இந்தப் பேச்சு கொடுக்க நியமிக்கப்பட்டிருப்பவர் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும் மாணாக்கர் உட்கார்ந்து அல்லது நின்று பேச்சைக் கொடுக்கலாம். துணையாக ஒருவரைப் பள்ளி கண்காணி நியமிப்பார். கூடுதலானவர்களை வேண்டுமானால் பயன்படுத்தலாம். வெளி ஊழியம் அல்லது சந்தர்ப்ப சாட்சி கொடுத்தலாக அமையும் பேச்சு சூழல்களைப் பயன்படுத்துவது விரும்பத்தக்கது. பேச்சு கொடுப்பவர், பேச்சு சூழலை ஸ்தாபிப்பதற்கு உரையாடலைத் தானே தொடங்கலாம் அல்லது தனக்குத் துணை செய்பவர்[கள்] அவ்வாறு செய்யும்படி ஏற்பாடு செய்யலாம். பேச்சு சூழலுக்கு அல்ல, பேசப்படும் விஷயத்திற்கே முக்கிய கவனம் செலுத்தப்படவேண்டும். கொடுக்கப்பட்ட பொருளை மாணாக்கர் பயன்படுத்த வேண்டும்.
பேச்சு எண் 4: 5 நிமிடங்கள். இது சகோதரன் அல்லது சகோதரிக்கு நியமிக்கப்படும். கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப்பொருள்கள் என்ற சிறு புத்தகத்தை இது சார்ந்திருக்கும். ஒரு சகோதரனுக்கு நியமிக்கப்படுகையில் இது முழு சபையாருக்கும் கொடுக்கும் ஒரு பேச்சாக இருக்க வேண்டும். இந்தப் பேச்சு உண்மையில் கேட்பவர்களுக்கு அறிவூட்டுவதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும்படி, இந்தச் சகோதரன், ராஜ்ய மன்றத்தில் கூடியிருக்கும் சபையாரை மனதில் கொண்டு தனது பேச்சைத் தயாரிப்பது பொதுவாய் நல்லது. எனினும், விஷயம் வேறொரு வகை சூழமைப்பிலுள்ள சபையாருக்கும் நடைமுறை பயனுள்ளதாகவும் பொருத்தமானதாகவும் இருக்கிறதெனில், அந்தச் சகோதரர் தனது பேச்சை அதற்கு ஏற்றவாறு தயாரிக்கத் தெரிந்துகொள்ளலாம். கொடுக்கப்பட்ட பொருளை மாணாக்கர் பயன்படுத்த வேண்டும்.
இந்தப் பேச்சு ஒரு சகோதரிக்கு நியமிக்கப்படுகையில், 3-வது பேச்சு கொடுக்கப்படும் அதே முறையில் கொடுக்கப்பட வேண்டும்.
ஆலோசனை மற்றும் குறிப்புகள் கொடுத்தல்: மாணாக்கர் பேச்சு ஒவ்வொன்றுக்கும் பின்னர் பள்ளிக் கண்காணி குறிப்பான ஆலோசனைகள் கொடுப்பார். பேச்சு ஆலோசனை தாளில் கொடுக்கப்பட்டுள்ள படிப்படியான ஆலோசனை திட்டத்தைக் கட்டாயம் அதே ஒழுங்கில் பின்பற்ற அவசியமில்லை. மாறாக, மாணாக்கர் முன்னேறவேண்டிய அவசியம் இருக்கும் அந்தப் பகுதிகளுக்கு அவர் கவனம் செலுத்துவார். ஒரு பேச்சு ஆலோசனைக் குறிப்பின் பேரில் மாணாக்கருக்கு “G“ கொடுக்கப்பட்டு வேறு எந்தப் பேச்சுப் பண்பையும் “I” அல்லது “W” என்று குறிப்பிடாவிடில் “G” “I” அல்லது “W” என்று பொதுவாக எழுதப்படும் பெட்டியில் மாணாக்கர் அடுத்தபடியாக உழைக்க வேண்டிய பேச்சுப் பண்பைக் காட்ட ஒரு வட்டமிட வேண்டும். அன்றைய தினம் இதை மாணாக்கருக்குச் சொல்லுவார். அதே சமயத்தில் அடுத்தப் பேச்சு நியமிப்புத்தாளிலும் (Assignment slip) (S-89) இந்தப் பேச்சுப் பண்பைக் குறிப்பிடுவார். பேச்சு கொடுப்பவர்கள் முன் இருக்கைகளில் உட்கார வேண்டும். இது நேரம் வீணாகாதபடி காக்கும், அதே சமயத்தில் பள்ளிக் கண்காணி ஒவ்வொரு மாணாக்கரையும் நோக்கி நேராக ஆலோசனை கூறவும் உதவியாக இருக்கும். தேவையான நேரடி ஆலோசனை கொடுத்த பின்பு நேரம் அனுமதிக்குமளவுக்கு, மாணாக்கரால் சிந்திக்கப்படாத அறிவூட்டும் நடைமுறையில் பயனுள்ள மற்ற குறிப்புகளை அவர் எடுத்துரைக்கலாம், பள்ளிக் கண்காணி ஒவ்வொரு மாணாக்கர் பேச்சுக்குப் பிறகும், ஆலோசனை கூறுவதற்கும் குறிப்புகள் சொல்லுவதற்கும் மொத்தம் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக பயன்படுத்தாதபடி கவனமாயிருக்க வேண்டும். பைபிள் வாசிப்பு பகுதியின் சிறப்புக் குறிப்புகளை எடுத்துரைக்கும் பேச்சில் விரும்பப்படும் குறிப்புகள் விடப்பட்டிருந்தால், தனிப்பட்ட ஆலோசனை கொடுக்கப்படலாம்.
பேச்சுகளைத் தயாரித்தல்: நியமிக்கப்பட்ட பேச்சைத் தயாரிப்பதற்கு முன்பாக, மாணாக்கர் தான் உழைக்கவேண்டிய பேச்சு பண்பைப் பற்றி விரித்துரைக்கும் பள்ளி துணைலூல் பிரசுரத்திலுள்ள பகுதியைக் கவனமாக வாசிக்கவேண்டும். இரண்டாம் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள மாணாக்கர்கள் வாசிக்க வேண்டிய பைபிள் பகுதிக்குப் பொருத்தமான பொருள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மற்ற பேச்சுகள் அச்சடிக்கப்பட்ட அட்டவணையில் காட்டியுள்ள பொருளுக்கு ஏற்ப அமைத்து உருவாக்கப்படும்.
நேரம்: எந்தப் பேச்சும் கொடுக்கப்படும் நேரத்தை மீறக் கூடாது. ஆலோசனை கூறுபவரின் ஆலோசனையும் குறிப்புகளுங்கூட நேரத்தை மீறக்கூடாது. பேச்சு எண்கள் 2 முதல் 4 நேரத்தை மீறுகையில் சாதுரியமாக நிறுத்தப்பட வேண்டும். நிறுத்தம் அறிகுறி கொடுக்க நியமிக்கப்பட்டவர் தாமதியாமல் அசை உடனடியாகச் செய்ய வேண்டும். பேச்சு நியமிப்பு எண் 1-ஐயும் பைபிள் சிறப்புக்குறிப்புகளையும் கையாளும் சகோதரர்கள் நேரத்தை மீறுகையில் அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் ஆலோசனை கொடுக்க வேண்டும். எல்லாரும் நேரத்தைக் கவனமாகக் கடைப்பிடிக்க வேண்டும். முழு நிகழ்ச்சி நிரல்: பாட்டு, ஜெபம் சேர்க்காமல் 45 நிமிடங்கள்.
எழுத்துமுறை மறுபார்வை: அவ்வப்போது ஓர் எழுத்துமுறை மறுபார்வை கொடுக்கப்படும். அதற்கு ஆயத்தமாக, கொடுக்கப்பட்ட பகுதிகளைத் திரும்பவும் மறுபார்வை செய்து, பைபிள் படிப்பு பகுதியை வாசித்து முடியுங்கள். 25 நிமிடம் நீடிக்கும் இந்த மறுபார்வையின்போது பைபிள் மட்டுமே பயன்படுத்தப்படலாம். மீந்திருக்கும் நேரம் கேள்விகளையும் பதில்களையும் கலந்தாலோசிப்பதற்குச் செலவிடப்படும். ஒவ்வொரு மாணாக்கரும் அவரவருடைய தாள்களைத் திருத்துவர். பள்ளிக் கண்காணி இந்த மறுபார்வை கேள்விகளுக்குப் பதில்களைச் சபையாரோடு கலந்தாலோசித்து, கடினமான கேள்விகளின்பேரில் கூடுதலான கவனம் செலுத்தி எல்லாரும் பதில்களை தெளிவாக விளங்கிக்கொள்ள உதவிசெய்வார். ஏதோ காரணத்தினிமித்தம், சபையின் சூழ்நிலைகள் அவசியப்படுத்தினால், எழுத்துமுறை மறுபார்வை, அட்டவணையில் காட்டப்பட்ட வாரத்திற்கு ஒரு வாரம் பிந்தியதாகக் கொடுக்கப்படலாம்.
பெரிய சபைகள்: 50 அல்லது அதற்கு மேற்பட்ட மாணாக்கர்கள் பள்ளியில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டதாயுள்ள சபைகள், கூடுதலான தொகுதிகளை ஏற்பாடு செய்து, அட்டவணையிலுள்ள பேச்சுகளை மற்ற ஆலோசகர்களுக்கு முன்பாகக் கொடுக்கும்படி ஏற்பாடுசெய்ய விரும்பலாம். கிறிஸ்தவ நியமத்துக்கு ஒத்தவாறு தங்கள் வாழ்க்கையை நடத்தும் முழுக்காட்டப்படாத ஆட்களும் நிச்சயமாகவே, பள்ளியில் தங்கள் பெயர்களைப் பதிவுசெய்து பேச்சுநியமிப்புகளைப் பெறலாம்.
வரத்தவறுவோர்: சபையிலுள்ள எல்லாரும், வாராந்தர கூட்டம் ஒவ்வொன்றுக்கும் ஆஜராயிருக்கும்படி முயற்சி செய்வதாலும், தங்கள் பேச்சு நியமிப்புகளை நன்றாய்த் தயாரிப்பதாலும், கேள்வி நிகழ்ச்சிகளில் பங்குகொள்வதாலும் இந்தப் பள்ளிக்குப் போற்றுதலைக் காட்டலாம். எல்லா மாணாக்கரும் தங்கள் பேச்சு நியமிப்புகளைப் மனசாட்சியுடன் கருதுவார்களென்று நம்பப்படுகிறது. அட்டவணையில் பேச்சு நியமிக்கப்பட்டுள்ள ஒரு மாணாக்கர், வரவில்லையெனில், அந்தப் பேச்சு கொடுக்க முன்வரும் மற்றொருவர் அந்த நியமிப்பை ஏற்று, அத்தகைய குறுகிய நேர அறிவிப்பில் தன்னால் தயாரித்துச் சொல்லக்கூடிய பொருத்தமான குறிப்புகளை எடுத்துரைக்கலாம். அல்லது பள்ளிக் கண்காணி பொருத்தமாகச் சபையார் பங்கெடுத்தலோடு அந்த விஷயத்தைச் சிந்திக்கலாம்.
அட்டவணை
பிப். 28 பைபிள் வாசிப்பு: நெகேமியா 9 முதல் 11
பாட்டு எண் 2(79)
எண்1: உண்மையானக் கிறிஸ்தவ ஒற்றுமை எவ்வாறு அடையப்பெறுகிறது (uw பக். 5-7 பாரா. 1-7)
எண்2: நெகேமியா 9:4, 26-33, 36-38
எண்3: கடவுளிடம் உண்மையில் மதிப்பு பெறும் காரியங்களைச் செய்தல் (gt அதி. 83)
எண்4: td17A பூமியைக்குறித்ததில் கடவுளின் நோக்கம்
மார்ச் 7 பைபிள் வாசிப்பு: நெகேமியா 12 மற்றும் 13
பாட்டு எண்: 129(66)
நெகேமியா—ஏன் பயனுள்ளது? (si பக். 90-1 பாரா. 16-19)
எண்2: 13:15-18, 23-31
எண்3: சீஷராயிருப்பதன் உத்தரவாதம் (gt அதி. 84)
எண்4: td17c பூமி எப்போது குடியிருக்கப்பட்டிருக்கும்
மார்ச் 14 பைபிள் வாசிப்பு எஸ்தர் 1 முதல் 5
பாட்டு எண்: 132(70)
எண்1: எஸ்தருக்கு முன்னுரை (si பக். 91-2 பாரா. 1-6)
எண்2: எஸ்தர் 4:6-17
எண்3: சுயநீதியைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள், மனத்தாழ்மையை மதித்துணருங்கள் (gt அதி. 85)
எண்4: td 19A கள்ளத் தீர்க்கதரிசிகளை அடையாளங்காண்பது எவ்வாறு
மார்ச் 21 பைபிள் வாசிப்பு: எஸ்தர் 6 முதல் 10
பாட்டு எண் 133(68)
எண்1: எஸ்தர்—ஏன் பயனுள்ளது (si பக். 94 பாரா. 16-18)
எண்2: எஸ்தர் 6:1-13
எண்3: காணாமற்போன மகனும் அவனுடைய அன்புள்ள தகப்பனும் (gt அதி. 86 பாரா 1-9)
எண்4: td22A ஆவிக்குரிய சுகப்படுத்துதல் ஏன் இன்றியமையாதது
மார்ச் 28 பைபிள் வாசிப்பு யோபு 1 முதல் 3
பாட்டு எண் 62(34)
எண்1: யோபுவுக்கு முன்னுரை
எண்2: யோபு 2:1-13
எண்3: காணாமற்போன மகனின் திரும்பிவருகை மற்றவர்களைப் பாதிக்கிறது (gt அதி. 86 பாரா 10-20)
எண்4: கடவுளுடைய ராஜ்யம் நிரந்தர உடல்சம்பந்தமான சுகத்தைக் கொண்டுவரும்
ஏப்ரல் 4 பைபிள் வாசிப்பு 4 முதல் 6
பாட்டு எண் 158(85)
எண்1: கிறிஸ்தவ ஒற்றுமைக்கு உதவிசெய்யும் காரியங்கள் (uw பக். 8 பாரா. 8 முதல் 8 [3])
எண்2: யோபு 6:1-11, 29, 30
எண3: நடைமுறையான ஞானத்தோடு எதிர்காலத்துக்காக ஏற்பாடு செய்யுங்கள் (gt அதி. 87)
எண்4: td22C தற்கால விசுவாச சுகப்படுத்துதலுக்குத் தெய்வீக அங்கீகாரத்தின் சான்று இல்லை.
ஏப்ரல் 11 பைபிள் வாசிப்பு: யோபு 7 முதல் 9
பாட்டு எண்: 213(67)
எண்1: கிறிஸ்தவ ஒற்றுமைக்கு உதவி செய்யும் காரியங்கள் (uw பக். 9 பாரா. 8[4] முதல் 9)
எண்2:யோபு 9:1-15
எண்3: ஐசுவரியவானும் லாசருவும் (gt அதி. 88 பாரா 1-10)
எண்4: td22D அந்நிய மொழிகளில் பேசுவது ஒரு தற்காலிக ஏற்பாடே
ஏப்ரல் 18 பைபிள் வாசிப்பு: யோபு 10 முதல் 12
பாட்டு எண் 191(9)
எண்1: பிரிவினையுண்டாக்கும் செல்வாக்குகளை உண்மையானக் கிறிஸ்தவர்கள் தவிர்க்கின்றனர் (uw பக். 10-11 பாரா. 10-12)
எண்2: யோபு 12:1-16
எண்3: ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றிய உவமை குறிப்பதென்ன gt அதி. 88 பாரா 11-21)
எண்4: td 23B 1,44,000 பேர் மாத்திரமே பரலோகத்துக்குச் செல்வர்
ஏப்ரல் 25 பைபிள் வாசிப்பு: யோபு 13 முதல் 15
பாட்டு எண் 97(50)
எண்1: யெகோவாவை அறிந்து மதித்துணருங்கள் (uw பக். 12-13 பாரா. 1-4)
எண்2: யோபு 13:1-13
எண்3: இரக்கங்காட்ட யூதேயாவுக்குள் பயணம் (gt அதி. 89)
எண்4: td24B நரகத்தில் சொற்பொருளான அக்கினி இல்லை
மே பைபிள் வாசிப்பு: யோபு 16 முதல் 18
பாட்டு எண் 185 (98)
எண்1: யெகோவாவின் அன்பின் மாதிரியைப் பின்பற்றுங்கள் (uw பக். 14-15 பாரா. 5-7)
எண்2. யோபு 16:1-11, 22
எண்3: உயிர்த்தெழுதலின் நம்பிக்கையைப் பற்றி இயேசு பேசுகிறார் (gt அதி. 90)
எண்4: td24C அக்கினி நிர்மூலமாக்குவதற்கு ஒரு சின்னம்
மே 9 பைபிள் வாசிப்பு: யோபு 19 மற்றும் 20
பாட்டு எண் 85(44)
எண்1: கடவுளைப்பற்றி சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஆட்களுக்கு உதவிசெய்யுங்கள் (uw பக். 15-17 பாரா. 8 முதல் 11 [2])
எண்2: யோபு 19:14-29
எண்3: இயேசு லாசருவை உயிர்த்தெழுப்புகிறார் (gt அதி. 91)
எண்4: td24E ஐசுவரியவானையும் லாசருவையும் பற்றிய விவரம்—நித்திய வேதனைக்கு விளக்கச் சான்று அல்ல
மே 16 பைபிள் வாசிப்பு: யோபு 21 மற்றும் 22
பாட்டு எண் 95(52)
எண்:1 ஒரே யெகோவா இருக்கிறார் (uw பக். 17-18 பாரா. 11 [3]) முதல் 12
எண்:2 யோபு 21:19-34
எண்3: கடவுளுடைய நற்குணத்திற்காக நன்றியறிதலைக் காட்டுங்கள் (gt அதி. 92)
எண்4: td 25B பூர்வக் கிறிஸ்தவர்கள் பிறந்த நாட்களையோ கிஸ்துமஸையோ கொண்டாடவில்லை
மே 23 பைபிள் வாசிப்பு: யோபு 24 முதல் 26
பாட்டு எண் 138(71)
எண்1: கடவுளின் பெயரில் நடப்பதென்பது குறிப்பதென்ன (uw பக். 18-19 பாரா. 13-15)
எண்2: யோபு 24:1, 2, 14-25
எண்3: மனுஷகுமாரன் வெளிப்படும்போது (gt அதி. 93)
எண்4: td26A வழிபாட்டில் சிலைகளைப் பயன்படுத்துவது கடவுளை அவமதிப்பதாயிருக்கிறது
மே 30 பைபிள் வாசிப்பு யோபு 27 முதல் 29
பாட்டு எண் 180(100)
எண்1: பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்கும்படி மற்றவர்களுக்கு உதவிசெய்யுங்கள் (uw பக். 20-22 பாரா. 1-6)
எண்2: யோபு 29:2-18
எண்3: ஜெபத்துக்கான மற்றும் மனத்தாழ்மைக்கானத் தேவை (gt அதி. 94)
எண்4: 26B விக்கிரகாராதனை இஸ்ரவேல் ஜனத்துக்கு அழிவைக் கொண்டுவந்தது
ஜூன் 6 பைபிள் வாசிப்பு: யோபு 30 மற்றும் 31
பாட்டு எண் 46(20)
எண்1: தினந்தோறும் பைபிளை வாசியுங்கள் (uw பக். 23-25 பாரா. 7-11)
எண்2: யோபு 31:23-37
எண்3: விவாகரத்தைக் குறித்தும் பிள்ளைகளின்பேரில் அன்பைக் குறித்தும் பாடங்கள் (gt அதி. 95)
எண்4: td 26C “சம்பந்தப்பட்ட” வழிபாடு கடவுளால் அங்கீகரிக்கப்பட்டதல்ல
ஜூன் 13 பைபிள் வாசிப்பு: 32 மற்றும் 33
பாட்டு எண் 59(31)
எண்1: யெகோவாவைப்பற்றிக் கற்றுக்கொள்வதற்காகப் படியுங்கள் (uw பக். 25-6 பாரா. 12 முதல் 12 [1])
எண்2: யோபு 13:1-6, 23-33
எண்3: இயேசுவும் ஒரு பணக்கார இளவரசனும் (gt அதி. 96)
எண்4: td27A உண்மையான ஒற்றுமை அகிலமத ஐக்கியத்தின் மூலம் வருகிறதில்லை
ஜூன் 20 எழுத்துமுறை மறுபார்வை. நெகேமியா 9-லிருந்து யோபு 33 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 42(4)
ஜூன் 27 பைபிள் வாசிப்பு: யோபு 34 முதல் 36
பாட்டு எண் 47(21)
எண்1: பைபிளின் பொருளையும் வசனங்களின் சூழமைவையும் கவனியுங்கள் (uw பக். 26 பாரா 12 [2]மற்றும் 12 [3])
எண்2: யோபு 34:1-15
எண்3: திராட்சத் தோட்டத்தைப்பற்றி இயேசு சொன்ன உவமை (gt அதி. 97)
எண்4: td27B “எல்லா மதங்களிலும் நல்லது உண்டு” என்பது உண்மையல்ல
ஜூலை 4 பைபிள் வாசிப்பு: யோபு 37 மற்றும் 38
பாட்டு எண் 162(89)
எண்1: நீங்கள் படிப்பதை உங்களுக்குத்தானே பொருத்திப் பயன்படுத்தி மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் (uw பக். 26-8 பாரா. 12[4]முதல் 13)
எண்2: யோபு 37: 5-14, 23, 24
எண்3: முன்னால் வரவிருப்பவற்றிற்காக இயேசு தாம் சீஷர்களை ஆயத்தம் செய்கிறார் (gt அதி. 98)
எண்4: td29A கிறிஸ்தவர்கள் கடவுளுடைய சொந்த பெயரைப் பயன்படுத்தவேண்டும்
ஜூலை 11 பைபிள் வாசிப்பு: யோபு 39 மற்றும் 40
பாட்டு எண் 105(46)
எண்1: இயேசுவைப்பற்றி தீர்க்கதரிசிகள் சொல்வது (uw பக். 29-31 பாரா. 1-6)
எண்2: யோபு 40:1-14
எண்3: ஆபிரகாமின் இழந்த ஒரு குமாரனை இயேசு திரும்ப நிலைநிறுத்துகிறார் (gt அதி. 99)
எண்4: td29C கடவுள் இருப்பதைப்பற்றிய சத்தியங்கள்
ஜூலை 18 பைபிள் வாசிப்பு: யோபு 41 மற்றும் 42
பாட்டு எண் 106(55)
எண்1: யோபு—ஏன் பயனுள்ளது (si பக். 100 பாரா. 39-43)
எண்2: யோபு 42:1-10, 12-17
எண்3: ராத்தல்களைப்பற்றிய உவமை (gt அதி. 100)
எண்4: td29D கடவுளுடைய குணங்களை கண்டுணர்தல்
ஜூலை 25 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 1 முதல் 6
பாட்டு எண் 168(84)
எண்1: சங்கீதங்களுக்கு முன்னுரை—பகுதி 1 (si பக். 101 பாரா. 1-5)
எண்2: சங்கீதம் 2:1-12
எண்3: மரியாளின் நல்ல செயலுக்காக இயேசு அவள் சார்பாக ஆதரித்துப் பேசுகிறார் (gt அதி. 101)
எண்4: td29F எல்லாரும் ஒரே கடவுளைச் சேவித்துக் கொண்டில்லை
ஆகஸ்ட் 1 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 1 முதல் 6
பாட்டு எண் 138(71)
எண்1: சங்கீதங்களுக்கு முன்னுரை—பகுதி2 (si பக். 102 பாரா. 6-11)
எண்2: சங்கீதம் 8:1-9:5
எண்3: எகருசலேமுக்குள் கிறிஸ்துவின் வெற்றிப்பவனி (gt அதி. 102)
எண்4: td30A யெகோவாவின் சாட்சிகளின் ஆரம்பம்
ஆகஸ்ட் 8 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 11 முதல் 17
பாட்டு எண் 64(35)
எண்1: தீர்க்கதரிசன மாதிரிகளுக்கு கவனம் செலுத்துங்கள் (uw பக். 32-33 பாரா. 7 முதல் 8[2])
எண்2: சங்கீதம் 14:1-15:5
எண்3: கடவுளுடைய ஆலயத்தை அசுத்தப்படுத்துவோரை இயேசு கண்டனம் செய்கிறார் (gt அதி 103)
எண்4: td31B இயேசு கடவுளுடைய குமாரனும் நியமிக்கப்பட்ட அரசரும்
ஆகஸ்ட் 15 சங்கீதங்கள் 18 முதல் 20
பாட்டு எண் 79(104)
எண்1: நம்முடைய பிரதான ஆசாரியர் நிழலாக முன்குறித்துக் காட்டப்பட்டார் (uw பக். 33 பாரா. 8[3] மற்றும் 8[4])
எண்2: சங்கீதம் 19:1-14
எண்3: கடவுளுடைய குரல் மூன்றாவது முறையாகக் கேட்கப்படுகிறது (gt அதி. 104)
எண்4: td31D இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது இரட்சிப்புக்கு இன்றியமையாதது
ஆகஸ்ட் 22 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 21 முதல் 24
பாட்டு எண் 144(78)
எண்1: மனந்திரும்புதல் விசுவாசமும் ஏன் இன்றியமையாதவை (uw பக். 33-7 பாரா. 9-14)
எண்2: சங்கீதம் 23:1-24:10
எண்3; சபிக்கப்பட்ட அக்கிரமம் எதற்கு அறிகுறியாயுள்ளது (gt அதி.105)
எண்4: td31E இயேசுவில் விசுவாசம் வைப்பதற்கும் அதிகமானது தேவைப்படுகிறது
ஆகஸ்ட் 29 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 25 முதல் 29
பாட்டு எண் 160(88)
எண்1: கடவுளுக்குக் கீழ்ப்படிவது உண்மையான சுயாதீனத்தைக் கொண்டுவருகிறது (uw பக். 38-40 பாரா. 1-5)
எண்2: சங்கீதம் 26:1-12
எண்3: மதத் தலைவர்கள் எவ்வாறு வெளியரங்கமாக்கப்பட்டனர் (gt அதி 106)
எண்4: td33B கடவுளுடைய ராஜ்யம் மனிதவர்க்கத்துக்குச் செய்யவிருப்பவை
செப். 5 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 30 முதல் 33
பாட்டு எண்: 130(58)
எண்1: இன்று சுயாதீனத்தை எங்கே கண்டடையலாம் (uw பக். 40-2 பாரா. 6-9)
எண்2: சங்கீதம் 32:1-11
எண்3: கலியாண விருந்தைப்பற்றிய உவமை எதற்கு அறிகுறியாயுள்ளது (gt அதி. 107)
எண்4: td33C கிறிஸ்துவின் எதிரிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கையிலேயே ராஜ்ய ஆட்சி தொடங்குகிறது
செப். 12 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 34 முதல் 36
பாட்டு எண் 167(106)
எண்1: உலகப்பிரகாரமான சுயாதீனம் உண்மையில் அடிமைத்தனமே (uw பக். 42-3 பாரா. 10-12)
எண்2: சங்கீதம் 36:1-12
எண்3: அவர்கள் இயேசுவைச் சிக்கவைக்க முடியவில்லை (gt அதி. 108)
எண்4: td33E கடவுளுடைய ராஜ்யம் மனித முயற்சிகளின் பலனாக வருகிறதில்லை
செப். 19 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 37 முதல் 39
பாட்டு எண் 109(75)
எண்1: கெட்ட சகவாசங்களை அடையாளம் கண்டுகொள்வது எவ்வாறு (uw பக். 44-5 பாரா. 13,14)
எண்2: சங்கீதம் 37:23-38
எண்3: இயேசு தம் எதிரிகளை வெளிப்படையாகக் கண்டனம் செய்கிறார் (gt அதி.109)
எண்4: td34A உலகத்தின் முடிவு குறிப்பது என்ன
செப். 26 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 40 முதல் 44
பாட்டு எண் 207(112)
எண்1: எல்லாரும் எதிர்படவேண்டிய அந்தப் பெரிய விவாதம் (uw பக். 44-5 பாரா. 13,14)
எண்2: சங்கீதம் 41:1-13
எண்3: ஆலயத்தில் இயேசுவின் ஊழியம் முடிவடைகிறது (gt அதி. 110)
எண்4: td34B கடைசி நாட்களின் அடையாளத்துக்கு விழிப்புள்ளோராக இருங்கள்
அக்டோ. 3 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 45 முதல் 49
பாட்டு எண் 190(107)
எண்1: உண்மைத்தவறாது நிலைத்திருந்தோரின் விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் (uw பக். 47-52 பாரா. 4-11)
எண்2: சங்கீதம் 45:1-7, 10-17
எண்3: கடைசிநாட்களின் அடையாளத்தை இயேசு கொடுக்கிறார் gt அதி. 111 பாரா 1-11)
எண்4: td36B கீழ்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்குக் கடவுள் நித்திய ஜீவன் வாக்களிக்கிறார்
அக்டோப. 10 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 50 முதல் 52
பாட்டு எண் 170(95)
எண்1: உண்மையான நடத்தை யெகோவாவைக் கனப்படுத்துகிறது (uw பக். 52-4 பாரா. 12,15)
எண்2: சங்கீதம் 51:1-17
எண்3: இயேசு கடைசிநாட்களைப்பற்றி மேலும் அதிகம் சொல்லுகிறார் (gt அதி. 111 பாரா. 12-19)
எண்4: td36D கிறிஸ்துவின் சரீரத்தில் அடங்கியோர் மாத்திரமே பரலோகத்துக்குச் செல்கின்றனர்
அக்டோப. 17 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 53 முதல் 57
பாட்டு எண் 103(87)
எண்1: தீமையைக் கடவுள் அனுமதித்திருப்பது நமக்கு என்ன கற்பிக்கிறது (uw பக். 55-7 பாரா. 1-7
எண்2: சங்கீதம் 55:1,2 12-23
எண்3: புத்தியுள்ள மற்றும் புத்தியில்லாதக் கன்னிகைகள் (gt அதி. 111 பாரா 20-28)
எண்4: td36E வரம்பற்ற எண்ணிக்கையான ‘மற்ற செம்மறியாடுகளுக்கு’ நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டுள்ளது
அக்டோப. எழுத்துமுறை மறுபார்வை. யோபு 34 முதல் சங்கீதம் 57 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 34(8)
அக்டோப. 24 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 58 முதல் 62
பாட்டு எண் 50(23)
எண்1: கடவுளிடம் அநீதி ஒருபோதும் இல்லை (uw பக். 58-61 பாரா. 8-16)
எண்2: சங்கீதம் 62:1-12
எண்3: தாலந்துகளைப் பற்றிய உவமை (gt அதி. 111 பாரா. 29-37)
எண்4: td38B திருமண இணைப்பு கனம்பொருந்தினதாக இருக்கவேண்டும்
நவம். 7 பைபிள் வாசிப்பு; சங்கீதங்கள் 63 முதல் 67
பாட்டு எண் 45(28)
எண்1: யெகோவாவில் சார்ந்திருங்கள்—பொல்லாத ஆவி சேனைகளுக்கு எதிர்த்துநில்லுங்கள் (uw பக். 62-4 பாரா. 1-5)
எண்2: சங்கீதம் 65:1-13
எண்3: இராஜ்ய வல்லமையில் கிறிஸ்து வந்துசேரும்போது (gt அதி. 111 பாரா. 38-46)
எண்4: td38C தலைமைவகிப்புக்குரிய நியமத்தைக் கிறிஸ்தவர்கள் மதிக்கவேண்டும்
நவம். 14 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 68 மற்றும் 69
பாட்டு எண் 82(105)
பாட்டு எண்2: பிசாசின் மறைமுக சூழ்ச்சிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள் (uw பக். 64-7 பாரா. 6-12)
எண்2: சங்கீதம் 68:1-11, 32-35
எண்3: இயேசுவின் கடைசி பஸ்கா நெருங்கி விட்டது (gt அதி. 112)
எண்4: td38D பிள்ளைகளிடமாகக் கிறிஸ்தவ பெற்றோரின் கடமை
நவம். 21 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 70 முதல் 73
பாட்டு எண் 73(6)
எண்1: கடவுளிடமிருந்துவரும் சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் (uw பக். 67-9 பாரா. 13-15)
எண்2: சங்கீதம் 72:1-20
எண்3: இயேசு மனத்தாழ்மையின்பேரில் பாடம் அளிக்கிறார் (gt அதி. 113)
எண்4: td38E கிஸ்தவர்கள் கறிஸ்தவர்களை மட்டுமே மணம் செய்யவேண்டும்
நவம்ப. 28 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 74 முதல் 77
பாட்டு எண் 113(62)
எண்1: அறிவு, விசுவாசம், மற்றும் உயிர்த்தெழுப்பப்படுதல் (uw பக். 70-3 பாரா. 1-7)
எண்2: சங்கீதம் 76:1-12
எண்3: நினைவுகூருதலை இயேசு தொடங்கிவைக்கிறார் (gt அதி. 114)
எண்4: td38F உண்மையான கிறிஸ்தவர்கள் பன்மனை மணமுறையைக் கடைப்பிடிப்போர் அல்லர்
டிசம். 5 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 78 மற்றும் 79
பாட்டு எண் 18(118)
எண்1: இயேசு, மரணத்தின் மற்றும் ஹேடீஸின் திறவுகோள்களை உடையவராக இருக்கிறார் (uw பக். 73-7 பாரா. 8-15)
எண்2: சங்கீதம் 79:1-13
எண்3: இயேசு பொறுமையுடன் தம்முடைய சீஷர்களுக்கு அன்பையும் மனத்தாழ்மையையும் கற்பிக்கிறார் (gt அதி. 115)
எண்4: td39A மரியாள் கிறிஸ்துவின் தாய், “தேவமாதா” அல்ல
டிசம். 12 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 80 முதல் 85
பாட்டு எண் 93(48)
எண்1: கடவுளுடைய நிலைத்ததிருக்கும் ராஜ்யத்தை உயர்வாக மதியுங்கள் (uw பக். 78-81 பாரா. 1-9)
எண்2: சங்கீதம் 83: 1-18
எண்3: இயேசு தம்முடைய பிரிவுக்காக அப்போஸ்தலரை ஆயத்தம் செய்கிறார் (gt அதி. 116 பாரா 1-14)
எண்4: td39C மரியாள் “என்றும் கன்னி” அல்லவென பைபிள் காட்டுகிறது
டிசம். 19 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 86 முதல் 89
பாட்டு எண் 57(29)
எண்1: இந்த ராஜ்யம் கடவுளுடைய தொடக்க நோக்கத்தை நிறைவேற்றும் (uw பக். 81-2 பாரா. 10,12)
எண்2: சங்கீதம் 86:1-17
எண்3: இயேசுவின் உண்மையான நண்பர்கள் யாவர் (gt அதி. 116 பாரா 15-25)
எண்4: td40A நினைவுகூறுதலைப்பற்றி பற்றி வேத வசனங்கள் என்ன சொல்கின்றன
டிசம். 26 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 90 முதல் 94
பாட்டு எண் 190(107)
எண்1: இராஜ்யம் ஏற்கெனவே நிறைவேற்றியிருப்பவை (uw பக். 83-6 பாரா. 13-15)
எண்2: சங்கீதம் 90:1-17
எண்3: இயேசு முன்னெச்சரிக்கையளித்து தம்முடைய சீஷர்களை ஊக்குவிக்கிறார் (gt அதி. 116 பாரா 26-37)
எண்4: td40B பூசை ஆசரிப்பது வேதப்பூர்வமற்றது
ஜன. 2 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 95 முதல் 101
பாட்டு எண் 172(92)
எண்1: நாம் ராஜ்யத்தை முதலாவது தேடுவது எவ்வாறு (uw பக். 87-9 பாரா. 1-6)
எண்2: சங்கீதம் 100:1-101:8
எண்3: மேலறையில் இயேசுவின் முடிவு ஜெபம்
எண்4: td41A கடவுளுடைய ராஜ்ய ஏற்பாடு எல்லா மனிதருக்குமானது
ஜன. 9 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 102 முதல் 104
பாட்டு எண் 1(77)
எண்1: பூர்வீக சீஷர்களின் மாதிரியைப் பின்பற்றுங்கள் (uw பக். 90-1 பாரா. 7-9)
எண்2: சங்கீதம் 103: 1-14, 21, 22
எண்3: தோட்டத்தில் கடுந்துயரம் (gt அதி. 117)
எண்4: td41B கிறிஸ்தவர்களல்லாதவர்களுக்கும் இரட்சிக்கப்படுவதற்கு சம வாய்ப்பு உண்டு
ஜன. 16 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 105 மற்றும் 106
பாட்டு எண் 201(101)
எண்1: தனிப்பட்டோராய் ராஜ்யத்தை முதலாவது வைப்போமாக (uw பக். 91-4 பாரா. 10-15)
எண்2: சங்கீதம் 106:1-12, 47, 48
எண்3: இயேசு காட்டிக்கொடுக்கப்படுவதும் கைது செய்யப்படுவதும் (gt அதி. 118)
எண்4: td42A உண்மை கிறிஸ்தவர்கள் பகைக்கப்படுவதன் காரணம்
ஜன. 23 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 107 முதல் 108
பாட்டு எண் 202(82)
எண்1: யோவானின் முழுக்காட்டுதலைப்பற்றி வேதவசனங்கள் என்ன சொல்லுகின்றனர் (uw பக். 95-6 பாரா. 1-5)
எண்2: சங்கீதம் 108:1-13
எண்3: இயேசு இழிவாக நடத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் விசாரணை செய்யப்படுகிறார் (gt அதி. 119)
எண்4: td41C கணவன் கடவுளிடமிருந்து தன்னைப் பிரிக்கும்படி மனைவி அனுமதிக்கக்கூடாது
ஜன. 30 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 110 முதல் 115
பாட்டு எண் 17(12)
எண்1: மரணத்துக்குள் முழுக்காட்டப்படுதல் (uw பக். 97-8 பாரா. 6-8)
எண்2: சங்கீதம் 110:1-7;114:1-8
எண்3: மனிதனுக்குப் பயப்படும் பயம் கிறிஸ்துவை மறுதலிக்கும்படி பேதுருவைச் செய்விக்கிறது (gt அதி. 120)
எண்4: td 42D தான் கடவுளைச் சேவிப்பதை மனைவி தடைசெய்ய கணவன் அனுமதிக்கக்கூடாது
பிப். 6 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 116 முதல் 119:32
பாட்டு எண் 195(105)
எண்1: “பிதாவின் குமாரனின் பரிசுத்த ஆவியின் பெயரில்” முழுக்காட்டுதல் (uw பக். 98 பாரா. 9)
எண்2: சங்கீதம் 116:1-19
எண்3: நியாயசங்கத்தின் முன்பும் பிலாத்துவின் முன்பும் இயேசு சத்தியத்தைக் குறித்து தைரியமாய்ப் பேசுகிறார் (gt அதி 121)
எண்4: td43A கடவுள் செவிகொடுக்கும் ஜெபங்கள்
பிப். 13 பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 119:33-112
பாட்டு எண் 59(31)
எண்1: முழுக்காட்டுதலும் கிறிஸ்தவ பொறுப்புகளும் (uw பக். 99-102 பாரா. 10-14)
எண்2: சங்கீதம் 119: 97-112
எண்3: பிலாத்துவாயினும் ஏரோதாயினும் இயேசுவில் குற்றம் கண்டுபிடிக்க முடிகிறதில்லை (gt அதி. 122)
எண்4: td43C சில ஜெபங்கள் ஏன் செல்லத்தக்கவையாக இருப்பதில்லை
பிப். 20 எழுத்துமுறை மறுபார்வை. சங்கீதங்கள் 58 முதல் 119-112 வரை வாசித்து முடிக்கவும்
பாட்டு எண் 155(29)