உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 7/93 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 7/93 பக். 3

அறிவிப்புகள்

◼ பிரசுர அளிப்புகள்: ஜூலை: நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்? சிற்றேடு 4.00 ரூபாய் நன்கொடைக்கு. இது கிடைக்கவில்லையென்றால் பின்வரும் எந்தச் சிற்றேடுகளையும் அதே நன்கொடைக்கு அளிக்கலாம்: கடவுள் உண்மையில் நம்மைப்பற்றி அக்கறையுள்ளவராக இருக்கிறாரா?, பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்,” நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?, என்றைக்கும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம் (The Divine Name That Will Endure Forever), அல்லது பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். ஆகஸ்ட், செப்டம்பர்: நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம். பெரியது 40.00 ரூபாய்க்கும் சிறிய அளவு 20.00 ரூபாய் நன்கொடைக்கும். அக்டோபர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் சந்தாக்கள். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஒரு-வருட சந்தா 60.00 ரூபாய். மாதம் இருமுறை வரும் பதிப்புகளுக்கு ஆறு-மாத சந்தாக்களும் மாதாந்தர பதிப்புகளுக்கு ஒரு வருட சந்தாக்களும் 30.00 ரூபாய். மாதாந்தர பதிப்புகளுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. சந்தா மறுக்கப்படுகிற இடங்களில், தனிப்பட்ட பத்திரிகைப் பிரதிகளை 3.00 ரூபாய்க்கு அளிக்கலாம். பொருத்தமாக இருக்கும்போது கடவுளுக்காக மனிதவர்க்கத்தின் தேடுதல் (Mankind’s Search for God) புத்தகத்தை 30.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கலாம். குறிப்பு: மேலே குறிப்பிடப்பட்டுள்ள அளிப்புத் திட்டத்திற்கான பிரசுரங்கள் எதையாவது இன்னும் ஆர்டர் செய்யாத சபைகள் தங்களுடைய அடுத்த புத்தக ஆர்டர் நமூனா (S-14)-ல் ஆர்டர் செய்யவேண்டும்.

◼ தபாலில் கிடைக்கக்கூடிய மாதாந்தர விழித்தெழு! பத்திரிகை வெளியீடுகளின் பட்டியலோடு குஜராத்தி மொழி சேர்க்கப்பட்டிருக்கிறது. அதனால் இப்பொழுது குஜராத்தியில் விழித்தெழு! பத்திரிகைக்கு ஒரு வருட சந்தாக்களை 30.00 ரூபாய் நன்கொடைக்குப் பெற்றுக்கொள்ளலாம்.

◼ பரதீஸுக்குப்போகும் வழியை எவ்வாறு கண்டுபிடிப்பது? என்ற பத்திரிகை அளவான 4-பக்கத் துண்டுப்பிரதி வெகு மட்டுப்படுத்தப்பட்ட கையிருப்பில் ஆங்கிலத்தில் மட்டுமே இப்பொழுது கிடைக்கக்கூடியதாயிருக்கிறது. இந்தத் துண்டுப்பிரதி விசேஷமாக முஸ்லிம் நம்பிக்கையுள்ள ஆட்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. சபைகள் இந்தத் துண்டுப்பிரதிகளின் சிறிய எண்ணிக்கையை ஆர்டர் செய்யலாம், வீடுகளுக்கு கொண்டுசென்று பொருத்தமாயிருக்கும்போது காட்டுவதற்காக ஒருவேளை ஒவ்வொரு பிரஸ்தாபிக்கும் சுமார் ஒரு துண்டுப்பிரதி ஆர்டர் செய்யலாம். ஆனால் தற்சமயம் பொதுமக்களுக்கு விநியோகிக்க எங்களிடம் கையிருப்பில் போதுமானது இல்லை.

◼ கிடைக்கக்கூடிய புதிய பிரசுரங்கள்:

பெங்காலி: விழித்தெழு! சிற்றேடு 13-1; மராத்தி: விழித்தெழு! சிற்றேடு 13-1.

◼ திரும்பவும் கிடைக்கக்கூடிய பிரசுரங்கள்:

தமிழ்: விடுதலைக்கு வழிநடத்தும் தெய்வீக சத்திய பாதை; அக்கறையுள்ள ஒரு கடவுள் இருக்கிறாரா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்