எளிமையான, பலன்தரும் மறுசந்திப்புகள்
1 நீங்கள் ஒழுங்காக மறுசந்திப்பு செய்கிறீர்களா, அல்லது என்ன சொல்வது என்பதை அறியாததன் காரணமாக, பொதுவாக அதைக் கடினமாகக் காண்கிறீர்களா? பயமடைந்தவர்களாய் உணரவேண்டிய அவசியமில்லை. வெற்றியடைய பின்வரும் மூன்று காரியங்கள் உங்களுக்கு உதவிசெய்யும்: (1) நல்ல தயாரிப்பு; (2) எளிய பைபிள் பொருள்கள் சிலவற்றின்பேரில் ஓரிரண்டு குறிப்புகளைக் கலந்தாலோசிக்கும் திறமை; (3) வீட்டுக்காரருடைய கருத்துக்குச் செவிகொடுத்துக் கேட்கும் மனவிருப்பம்.
2 மறுசந்திப்புச் செய்ய தயார்செய்கையில், வீட்டுக்காரரோடு கலந்தாலோசிக்க என்ன பொருள் பொருத்தமானதாய் இருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அவர் ஒரு மாணாக்கரா? அநேக மாணாக்கர்கள் தங்களுடைய பரிட்சைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்த மாதத்தில் தயார்செய்வதற்கான விடுமுறையைக் கொண்டிருப்பார்கள், ஆகவே பள்ளியில் இருப்பதற்குப் பதிலாக, அவர்களை வீட்டில் காணலாம். இப்படியாக, அவர்கள் தங்களுடைய படிப்பிலிருந்து சற்று ஓய்வை அனுபவித்துக்களிக்கையில், நீங்கள் பைபிள் பொருள் ஒன்றை அவர்களோடு கலந்தாலோசிக்கலாம். இராஜ்ய செய்திக்கு சிலர் செவிகொடுத்துக் கேட்பவர்களாய் இருப்பதை நீங்கள் ஒருவேளை காணலாம். உங்களுடைய முந்திய சந்திப்பின் முடிவில் ஒரு கேள்வியை எழுப்பினீர்களா, அல்லது வீட்டுக்காரர் ஒரு குறிப்பிட்ட பொருளில் அக்கறை காண்பித்தாரா? உங்களுடைய குறிப்புகளை மறுபார்வை செய்துபாருங்கள், மேலும் பலன்தரும் மறுசந்திப்புச் செய்யும்படி உங்களுக்குத் தேவையான தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தைப் பயன்படுத்துங்கள். நீங்கள் அந்தச் சந்திப்பைச் செய்கையில், கனிவோடும் சிநேகப்பான்மையோடும் இருங்கள். வீட்டுக்காரரை பெயர்சொல்லி அழையுங்கள்.
3 நீங்கள் வீட்டுக்காரருக்கு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகையை அளித்திருந்தால், ஒரு பத்திரிகையிலிருந்து நீங்கள் தெரிவுசெய்திருக்கிற ஓரிரண்டு எளிய குறிப்புகளின்பேரில் உங்களுடைய மறுசந்திப்பு அஸ்திபாரமிடப்படலாம். ஆரம்ப சந்திப்பில் துண்டுப்பிரதி ஒன்றை நீங்கள் அளித்திருந்தால், துண்டுப்பிரதியிலிருந்தே குறிப்புசொல்லலாம் அல்லது பத்திரிகையிலோ சிற்றேட்டிலோ உள்ள பொருத்தமான குறிப்பு ஒன்றை சொல்வதன்மூலம் அந்த அளிப்பின்பேரில் மேலுமாக தொடர்ந்துபேசலாம்.
4 சம்பாஷித்துக்கொண்டிருக்கும்போது, திருத்தமில்லாத அநேக கருத்துக்களை வீட்டுக்காரர் தெரிவிக்கலாம். அவர் சொல்லுகிற ஒவ்வொன்றையும் விவாதிக்கவேண்டிய அவசியமில்லை. பதிலாக, கலந்தாலோசிக்கப்படுகிற பேச்சுப்பொருளை விடாதுபற்றியிருங்கள். அவருக்கிருக்கிற வேதப்பூர்வமற்ற எந்தக் கருத்துக்களையும் வருகிற நாட்களில் செய்யும் மறுசந்திப்புகளின்போது திருத்தலாம்.
5 இந்த மாதம் முழுவதும் ஆட்களை மீண்டும் சந்திக்கையில், மார்ச் 26-ல் நடக்கவிருக்கிற கிறிஸ்துவுடைய மரண நினைவு ஆசரிப்புக்கு மீண்டும் மீண்டும் அழைப்பதை நினைவிற்கொள்ளுங்கள். மேலும், ஆசரிப்பு நடக்கும் இடத்தையும் நேரத்தையும் அவர்களுக்கு நினைப்பூட்டுங்கள். அந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தையும் ஆஜராவதற்கான கட்டளைக்குக் கீழ்ப்படியவேண்டியதன் அவசியத்தையும் அவர்களோடு மறுபார்வை செய்யுங்கள். மார்ச் மாதத்தில் எளிமையான, பலன்தரும் மறுசந்திப்புகளைச் செய்வதன்மூலம் அக்கறைகாட்டுகிற எவரையும் தொடர்ந்து சந்திக்க கட்டாயமாகத் திட்டமிடுங்கள்.