உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 12/92 பக். 8
  • அக்கறையை வளர்ப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அக்கறையை வளர்ப்பது எப்படி?
  • நம் ராஜ்ய ஊழியம்—1992
  • இதே தகவல்
  • பைபிள் படிப்புகளுக்கு மறுசந்திப்புகள் பாலமாக அமைகின்றன
    நம் ராஜ்ய ஊழியம்—2003
  • தைரியத்தை ஒன்றுதிரட்டி மறுசந்திப்புகள் செய்யுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1997
  • பைபிளில் அக்கறையைத் தூண்டதிரும்பச்செல்லுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
  • எளிமையான, பலன்தரும் மறுசந்திப்புகள்
    நம் ராஜ்ய ஊழியம்—1994
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1992
km 12/92 பக். 8

அக்கறையை வளர்ப்பது எப்படி?

1 “வளர்த்தல்” என்றால் தயாரித்தல் அல்லது பேணி வளர்த்தல் என்று ஓர் அகராதியிலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். ஆனால் இந்த வார்த்தை உழைப்பு, கவனிப்பு அல்லது படிப்பு ஆகியவற்றில் முன்னேற்றத்தையும் குறிக்கலாம். சீஷராக்குதல் நம்முடைய ஊழியத்தின் ஒரு முக்கியமான நோக்கமாகும். (மத். 28:19, 20) ஆகவே, வெளி ஊழியத்தில் நாம் காணும் அக்கறையை வளர்ப்பதற்கு முயற்சி எடுக்கவேண்டிய அவசியம் இருக்கிறது.

2 பொதுவாக, நேர்மைஇருதயமுள்ள ஆட்களின் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பேணி காப்பதற்கு மறுபடியும் மறுபடியுமாக சந்தித்தல் அவசியமாக இருக்கிறது. பயனளிக்கும் மறுசந்திப்புகள் ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பிற்கு வழிநடத்தவேண்டும்.

3 அதிக அக்கறையைக் காண்பிப்பவர்களை மட்டுமே நீங்கள் மறுபடியும் சந்திக்கிறீர்களா? திரும்ப செல்வதற்குப் பிரசுரங்களை நீங்கள் அளித்திருக்கவேண்டுமென அவசியமில்லை. பெரும்பாலும், முதல் சந்திப்பில் கூடுதலான பிரசுரங்களை விட்டுச்செல்லாத ஒரு பயனியர் சிநேகபான்மையாக இருக்கும் ஒவ்வொருவரையும் திரும்ப சந்திக்கிறார். ஒரு வேதபூர்வமான எண்ணத்தைப் பகிர்ந்துகொள்வதன் மூலமாக செய்யப்படும் ஒரு நல்ல கலந்தாலோசிப்பு, ஒரு மறுசந்திப்புக்கு நல்ல அடிப்படையாக இருக்கிறது.

4 மறுசந்திப்புகளில் பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்: நம்முடைய துண்டுப்பிரதிகளிலுள்ள வெவ்வேறு பொருட்கள் நம் காலத்திற்குப் பொருத்தமாக இருக்கின்றன. பைபிள் அறிவை எடுப்பதற்கும் அதைப் பொருத்திப் பிரயோகிப்பதற்குமான தேவையை அவை அழுத்திக்காண்பிக்கின்றன.

நீங்கள் சொல்லலாம்:

◼ “சென்ற முறை பைபிளில் நம்பிக்கை வைப்பதற்கான சில காரணங்களைப்பற்றி பேசினோம். பைபிள் என்னவிதமான எதிர்காலத்தைப்பற்றி பேசுகிறது?” சமாதானமான புதிய உலகத்தில் வாழ்க்கை என்ற துண்டுப்பிரதியின் 3-வது பக்கத்தில் இரண்டாம் பாராவிலிருந்து வாசிக்கத் தொடங்குங்கள். அந்த வேதவசனங்களை எடுத்துப் பாருங்கள். நீங்கள் வாசிப்பதற்கு உங்கள் வீட்டுக்காரரின் பிரதிபலிப்பைக் கவனியுங்கள். “உங்களுக்கு இது எப்படிக் கூடியதாயிருக்கும்” என்ற உபதலைப்பின்கீழ் பக்கம் 5-லிருக்கும் விஷயங்களைச் சிந்தித்து முடியுங்கள்.

5 இதே விதமாக, மரித்த அன்பானவர்களுக்கு என்ன நம்பிக்கை? என்ற துண்டுப்பிரதியையும் பயன்படுத்தலாம்.

நீங்கள் சொல்லக்கூடும்:

◼ “நாம் சுருக்கமாக முன்னர் கவனித்தபடி, அநேக மக்கள் கடவுளில் நம்பிக்கை குறைவானவர்களாய் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, அவர்கள் கேட்கிறார்கள், ‘கடவுள் அவ்வளவு வல்லமையுள்ளவராய் இருந்தால், அவர் ஏன் மக்கள் சாகிறதை அனுமதிக்கிறார்?’ இந்தத் துண்டுப்பிரதி அந்தக் கேள்விக்குப் பதிலளிக்க உதவும்.” 2-வது பக்கத்தின் நான்காவது பாராவில் தொடங்கும் பகுதிக்குக் கவனத்தைத் திருப்புங்கள். ஒவ்வொரு பாராவிற்குப் பின்னும் ஒரு பொருத்தமான கேள்வியைக் கேட்டு, அங்குக் குறிப்பிடப்பட்ட மேற்கோள் காட்டப்படாத வேதவசனங்களைச் சிந்தியுங்கள். உங்களுடைய சபையில் பிரச்னைகள் அல்லது இதோ! புரொஷூர்கள் கையிருப்பில் இருந்தால், அவற்றையும் இதேவிதமாக பயன்படுத்தலாம்.

6 படிப்பைத் தொடர்தல்: இங்கு ஆலோசிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றி, நீங்கள் ஒரு வீட்டு வேதபடிப்பைத் தொடங்குகிறீர்கள். ஓர் ஒழுங்கான முறையில் அந்தக் கலந்தாலோசிப்புத் தொடருவதற்கு, உங்கள் சந்திப்பின் முடிவில், வீட்டுக்காரரிடம் கேளுங்கள்: “வெகு சில நிமிடங்களிலே முக்கிய கேள்விகளுக்குப் பதிலளித்தோம் என்பதைக் கவனித்தீர்களா? அடுத்த வாரம் இன்னும் சிறிது நேரம் உயிர்தெழுதல் நம்பிக்கையைப்பற்றி அல்லது உங்களுக்கு ஆர்வமான வேறொரு பொருளைப்பற்றி பேசலாம்.” ஒவ்வொரு சந்திப்பின்போதும் இந்தக் கட்டுரைகளில் குறிப்பிடப்பட்ட கேள்விகளில் ஒரு கேள்வியை மட்டும் பயன்படுத்தலாம். தகுந்த நேரத்தில், ஒரு புரொஷூருக்கு மாற்றலாம் அல்லது என்றும் வாழலாம் புத்தகத்தில் ஒரு படிப்பைத் தொடங்கலாம்.

7 உண்மையாகச் சத்தியத்தைத் தேடும் ஒருவருக்கு ஒரு பைபிள் படிப்பை நடத்துவது என்னே ஒரு திருப்திகரமான காரியம்! நாம் கண்டடையும் அக்கறையை எவ்வாறு வளர்க்கலாம் என்பதற்குக் கொடுக்கப்பட்ட ஆலோசனைகளைப் பொருத்தி பிரயோகிப்பதன்மூலம் ஒரு பலனளிக்கும் ஊழியத்தால் நாம் ஆசீர்வதிக்கப்படுவோமாக.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்