உங்கள் ராஜ்ய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளபுரொஷூர்களை முக்கிய அளிப்பாகக் கொடுங்கள்
1 பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தை நாம் கண்கூடாகக் காண்கையில், நம்முடைய ராஜ்ய நம்பிக்கையில் நாம் களிகூருகிறோம், செவிகொடுத்துக் கேட்க மனமுள்ளோர் எவரிடமும் அதைப்பற்றிப் பேசவும் தூண்டப்படுகிறோம். (லூக். 6:45; ரோ. 12:12) ஆகஸ்ட்டில் வெளி ஊழியத்தில் நாம் புரொஷூர்களை முக்கியமாய் அளிப்பது, இயேசு கட்டளையிட்டபடி நாம் மற்றவர்களுடன் ராஜ்ய நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு வழியாகும்.—மத். 24:14.
2 நாம் தெரிந்துகொள்வதற்குப் பகட்டான நிறங்களிலுள்ள மற்றும் நல்ல தகவல்களடங்கிய பல புரொஷூர்கள் நமக்கு இருப்பதால், அவற்றில் எவை நம்முடைய பிராந்தியத்திலுள்ளோரின் தேவைகளை மிகச் சிறந்த முறையில் நிறைவுசெய்து அவர்களுடைய அக்கறையைத் தூண்டக்கூடும்? நம்முடைய புரொஷூர்களை நம்மால் கூடிய மிக நல்ல முறையில் பயன்படுத்துவதற்கு, அவற்றில் அடங்கியிருப்பவற்றை நாம் தெரிந்திருக்க வேண்டும். பின்வரும் சுருக்கமான விமரிசனம் இந்தக் காரியத்தில் நமக்கு உதவிசெய்யும்.
3 நம்முடைய பிரச்னைகள்—அவற்றைத் தீர்க்க யார் நமக்கு உதவி செய்வார்?: ஆகஸ்ட்டில், கூடியபோதெல்லாம் இந்தப் புரொஷூரைப் பயன்படுத்துவதன்பேரில் நாம் கவனத்தை ஊன்றவைப்போம். இது இந்து வளர்ப்பனுபவமுள்ள ஆட்களுக்காக முக்கியமாய்த் தயாரிக்கப்பட்டுள்ளது, நம்முடைய பிராந்தியத்துக்கு உகந்தது. பைபிள் செய்தியோடு பழக்கப்பட்டிராத ஆட்களுக்குக் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையான போதகங்கள் சிலவற்றை எளிய முறையில் அறிமுகப்படுத்தி, அதிசயமான இந்த ராஜ்ய நம்பிக்கையை அடைவதற்கு மேலுமாகப் படிக்கும்படி அவர்களை ஊக்குவிக்கிறது.
4 பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம்: இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய ராஜ்யமே அவருடைய பிரசங்கத்தின் பொருளாக இருந்தது. இந்த ராஜ்யம் உண்மையான அரசாங்கம் எனவும், இன்று வாழ்க்கையை அவ்வளவு கடினமாக்கும் பிரச்னைகளை இது எவ்வாறு தீர்க்குமென்பதையும் இந்தப் புரொஷூர் காட்டுகிறது.
5 பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!: கடவுள் ஏன் மனிதனை உண்டாக்கினார் மற்றும் நாம் எவ்வாறு பூமியில் வாழ்க்கையை என்றென்றும் அனுபவித்து மகிழ முடியும் என்பதை விளக்கிக் காட்டுகிறது. இந்தப் புரொஷூரிலுள்ள விளக்கவிவரமான படங்களும் சுருக்கமான குறிப்புரைகளும் இளைஞர்களுக்கும் மட்டுப்பட்ட வாசிப்பு திறமையுடையோருக்கும் கவர்ச்சிகரமாயுள்ளன. செவிகேளாதவர்களுக்கும் அடிப்படையான பைபிள் போதகங்களை அறிவிப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
6 என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீகப் பெயர் (ஆங்கிலத்திலுள்ளது): இந்தப் புரொஷூர், வேதப்பூர்வ மற்றும் சரித்திரப்பூர்வ நோக்குநிலையிலிருந்து கடவுளுடைய பெயரைச் சிந்தித்தாராய்ந்து, கிறிஸ்தவர்கள் அந்தப் பெயரை அறிவதும் அதைத் தங்கள் வணக்கத்தில் பயன்படுத்துவதும் ஏன் இன்றியமையாததெனக் காட்டுகிறது.
7 “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”: இந்தப் புரொஷூர் பரதீஸை வருணித்துக் காட்டி பைபிளுக்கும் நம்முடைய சிருஷ்டிகருக்கும் நன்றிமதித்துணர்வைக் கட்டியெழுப்புகிறது. கடவுள் பொல்லாங்கை ஏன் அனுமதிக்கிறாரென்பதைப் பற்றிச் சிந்தித்தப்பின்பு, பைபிளின் பின்வரும் மூன்று அடிப்படையான போதகங்களை ஆராய்கிறது: மீட்கும்பொருள், உயிர்த்தெழுதல், மற்றும் ராஜ்யம். மேலும் பக்கங்களின் அடியில் கேள்விகளைக் கொண்டுள்ளது, இது நாம் அதைக்கொண்டு பைபிள் படிப்பு நடத்துவதை நமக்கு எளிதாக்குகிறது.
8 நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா?: ஆட்கள் தாங்கள் திரித்துவத்தை நம்புவதாகக் கூறலாம், எனினும் அதைத் தாங்கள் புரிந்துகொள்வதில் வேறுபடுகின்றனர். பின்வருபவற்றைப்போன்ற கேள்விகளுக்கு இந்தப் புரொஷூர் பதிலளிக்கிறது: திரித்துவம் என்றாலென்ன? பைபிள் அதைக் கற்பிக்கிறதா? இயேசு கிறிஸ்து சர்வவல்லமையுள்ள கடவுளும் திரித்துவத்தின் பாகமுமானவரா? பரிசுத்த ஆவி என்பதென்ன?
9 நாம் பயன்படுத்த விரும்பும் புரொஷூர்களை நாம் தெரிந்தெடுத்தவுடன், நம் ராஜ்ய ஊழியத்தின் இந்த வெளியீட்டின் கடைசி பக்கத்திலுள்ள கட்டுரைகளுக்கு நாம் திரும்பக் கவனம் செலுத்த வேண்டும். அங்கே நம் புத்தகத்தை அளிப்பதற்கும், அக்கறையை வளர்த்து பைபிள் படிப்பைத் தொடங்கும் நோக்கத்தோடு மறுசந்திப்புகள் செய்வதற்குமுரிய ஆலோசனைகளைக் காண்போம்.
10 பல சந்தர்ப்பங்களில், ஒரு நல்ல சாட்சி கொடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட புரொஷூரே தேவைப்படுகிறது. எனினும், நாம் ஆயத்தமாயிருந்து, போதிய அளவான புரொஷூர்களை வைத்திருக்க வேண்டும், அவற்றில் அடங்கியிருப்பதைத் தெரிந்திருக்க வேண்டும், மேலும் பகுத்தறிவோராயும் இருக்க வேண்டும். நம்முடைய ஆர்வமுள்ள ஊழியத்தின்மீதுள்ள யெகோவாவின் ஆசீர்வாதம், இன்னும் பலர் இந்த ராஜ்ய நம்பிக்கையில் நம்முடன் களிகூரும்படி பலன் தருவதாக!—அப். 13:47, 48.