தேவராஜ்ய செய்திகள்
◆ ஏப்ரல் மாதம் கானடா பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 1,00,000 குறியைத் தாண்டி 1,00,368 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையை எட்டியது.
◆ கேப் வெர்டி தீவுகள், ஏப்ரல் மாதம் 410 பிரஸ்தாபிகளுடன் கடந்த ஆண்டு சராசரியைவிட 19 சதவிகித அதிகரிப்பை அடைந்தது. சபை பிரஸ்தாபிகள் சராசரியாக 14.5 மணிநேரம் எட்டினார்கள், உச்சநிலை எண்ணிக்கையாக 856 வேதப்படிப்புகள் அறிக்கை செய்யப்பட்டன.
◆ ஹான்டூராஸில் ஏப்ரல் ஒரு குறிப்பிடத்தக்க மாதமாக இருந்தது. பிரஸ்தாபிகள், பயனியர்கள், மணிநேரம், பத்திரிகைகள், மறுசந்திப்புகள் மற்றும் வேதப்படிப்புகள் ஆகியவற்றில் புதிய உச்சநிலைகளை அவர்கள் எட்டினார்கள். மூன்று புதிய சபைகளும் அமைக்கப்பட்டன. 5,706 பிரஸ்தாபிகள் 9,614 வீட்டு வேதப்படிப்புகளை நடத்தினார்கள்.
◆ தென் ஆப்பிரிக்கா, ஏப்ரல் மாதம் பிரஸ்தாபிகளில் 48,590 என்ற புதிய உச்சநிலையை எட்டியது. 49,967 வேதப்படிப்புகள் என்ற ஒரு குறிப்பிடத்தக்க உச்சநிலையையும் அவர்கள் அடைந்தார்கள்.