உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராகுங்கள்
1 கடந்தக் காலத்தில் இருந்தது போலவே, கடவுளுடைய ஊழியர்களுக்கு இன்று பரிசுத்தம் ஒரு தெய்வீகத் தேவையாயிருக்கிறது. பரிசுத்தம் என்றால் என்ன என்பதைப் பற்றி மட்டுமல்லாமல், அது எவ்வாறு மற்றும் ஏன் யெகோவாவுக்கான நம் வணக்கத்தின் தனிச் சிறப்புள்ள பண்பாக வேண்டும் என்பதை, நாம் ஒவ்வொருவரும் புரிந்து கொள்வதற்கான ஒரு வற்புறுத்தும் தேவை இருக்கிறது. இதன் காரணமாக, 1991 ஊழிய வருடத்துக்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சிநிரலில், “உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலும் பரிசுத்தராகுங்கள்” என்ற பொருள் கலந்தாலோசிக்கப்படுகிறது.—1 பேதுரு 1:15, தி.மொ.
2 யெகோவாவின் நீதியான நியமங்களும், சட்டங்களும் பரிசுத்த கடவுளாகிய அவரிலிருந்து தோன்றுவதால், நாம் அனுபவிக்கும் நீதியான நிலைநிற்கை அவரோடு உள்ள நம் நெருங்கிய, தனிப்பட்ட உறவின் நேரடியான விளைவாகும். அதன் காரணமாக, கடவுளுடன் நம் உறவை நாம் எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைக் காண்பிக்க நிகழ்ச்சிநிரல் அநேக வழிகளை விவரிக்கும். சிறிய காரியங்கள் என்று கருதப்படுபவைகளிலும்கூட, அவருடைய பரிசுத்த தராதரங்களுக்கு கீழ்ப்படிவதை இவைகள் உட்படுத்தும். (லூக். 16:10) யெகோவாவின் பரிசுத்த தேவைகளுக்கான ஓர் ஆழ்ந்த போற்றுதலையும் வளர்க்க நாம் உதவப்படுவோம். இவைகள் ஏன் நம் எல்லாச் சிந்தனைகள், மனநிலைகள் மற்றும் வழிகளின் பேரில் செல்வாக்கு செலுத்த வேண்டும் என்பதைப் பற்றி நினைப்பூட்டப்படுவோம்.
3 கொடுக்கப்படப்போகும் இரண்டு முக்கிய பேச்சுகள், “படிப்படியாய்ச் சுத்திகரிக்கப்பட இடங்கொடுத்தல்” மற்றும் “யெகோவாவின் பரிசுத்த ஜனத்தின் செயல்களை விரிவாக்குதல்” கிளர்ச்சியூட்டும் உலக நிகழ்ச்சிகள் நம் காலங்களின் அவசரத்தன்மையை நம் மனங்களில் தினமும் பதிய வைக்கையில், புதிய ஊழிய வருடத்துக்கான விசேஷ மாநாட்டு தின நிகழ்ச்சி நிரல், வழிநடத்துதலுக்காக நாம் தொடர்ந்து யெகோவாவை நோக்கியிருக்கும்படியும், பரிசுத்தத்தில் நாம் நடந்து கொள்வதன் மூலம் அவரை நன்கு பிரியப்படுத்த நாடும்படியும் உந்துவிக்கும்.—1 பேதுரு 1:14, 16.