தேவராஜ்ய செய்திகள்
◆ ஐக்கிய மாகாணங்கள் கிளைக்காரியாலய பிராந்தியத்தில் நடைபெற்ற 133 “தேவ பக்தி” மாவட்ட மாநாடுகளில் உச்சநிலை ஆஜர் எண்ணிக்கை 13,66,700, மேலும் 18,011 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ அமெரிக்கன் சமோவா ஜூன் மாதத்தில் 155 பிரஸ்தாபிகளின் புதிய உச்சநிலையைக் கொண்டிருந்தது. 35 சதவிகித அதிகரிப்பு.
◆ ஆண்டிக்குவா ஜூன் மாதத்தில் புதிய உச்சநிலையான 238 பிரஸ்தாபிகளைக் கொண்டிருந்தது.
◆ பஹாமாவில் மூன்று மாவட்ட மாநாடுகளுக்கு 2,448 பேர் ஆஜராகியிருந்தனர். 48 பேர் முழுக்காட்டப்பட்டனர்.
◆ சைப்ரஸ் ஜூன் மாதத்தில் 1,213 பிரஸ்தாபிகளின் அறிக்கையோடு தங்களுடைய தொடர்ச்சியான ஆறாவது உச்சநிலையை அறிக்கை செய்தது.
◆ டாம்னிக்கன் ரிப்பப்ளிக் ஜூன் மாதத்தில் 11,605 பிரஸ்தாபிகளுடன் புதிய உச்சநிலையை எட்டியது, 10 சதவிகித அதிகரிப்பு. அவர்கள் 22,096 வேதப்படிப்புகளின் புதிய உச்சநிலையை அடைந்தார்கள்.
◆ ஃபிஜி ஜூன் மாதத்தில் 1,454 பிரஸ்தாபிகளின் அறிக்கையோடு தங்கள் தொடர்ச்சியான 54-வது உச்சநிலையை அடைந்தார்கள். அவர்களுடைய வேதப்படிப்புகள் 2,403-க்கு உயர்ந்தது. 25-வது தொடர்ந்த உச்சநிலை.
◆ தஹித்தி ஜூன் மாதத்தில் 18 சதவிகித அதிகரிப்பை கொண்டிருந்தது. 1,005 பிரஸ்தாபிகளை எட்டியது. 20-வது தொடர்ச்சியான உச்சநிலை.
◆ வானுயாட்டு ஜூன் மாதத்தில் 113 பிரஸ்தாபிகளின் உச்சநிலையைக் கொண்டிருந்தது. 35 சதவிகித அதிகரிப்பு.
◆ வெஸ்டர்ன் சமோவா ஜூன் மாதத்தில் 198 பிரஸ்தாபிகளை கொண்ட புதிய உச்சநிலையை கொண்டிருந்தது. 24 சதவிகித அதிகரிப்பு.