உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 8/89 பக். 3
  • அறிவிப்புகள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • அறிவிப்புகள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1989
நம் ராஜ்ய ஊழியம்—1989
km 8/89 பக். 3

அறிவிப்புகள்

● ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களுக்கான பிரசுர அளிப்பு: 192-பக்க பழைய புத்தகங்களை இன்னும் கையிருப்பில் கொண்டிருக்கும் சபைகள் இரண்டு ஆங்கில புத்தகங்களை ரூ10-க்கும், இந்திய மொழிகளில் ஒரு புத்தகத்தை ரூ5-க்கும் அளிக்கலாம். (எந்தப் பிரசுரங்களை பயன்படுத்தலாம் என்பதற்கு நம் ராஜ்ய ஊழியம், பிப்ரவரி 88, “அறிவிப்புகள்” பகுதியில் காணலாம். இதற்கு கிரெடிட் எவ்வாறு கேட்கலாம் என்பதை நம் ராஜ்ய ஊழியம் மே 88 மாத இதழில் காணவும்.) இல்லாவிட்டால் பின்வரும் பத்திரிகை அளவு புரோஷூர்கள் ஒன்றை ரூ3-க்கு அளிக்கலாம்: பூமியில் வாழ்க்கையை என்றென்றும் மகிழ்வுடன் அனுபவியுங்கள்!, “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”, என்றென்றும் நிலைத்திருக்கும் தெய்வீக நாமம், பரதீஸைக் கொண்டுவரும் அரசாங்கம். அக்டோபர்: “உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது படைப்பின் மூலமா?” நன்கொடை ரூ30. சிறிய அளவு புத்தகம் ரூ15. நவம்பர்: விழித்தெழு! அல்லது காவற்கோபுரம் பத்திரிகைக்கு அல்லது இரண்டிற்குமே ஓராண்டு சந்தா, ஒன்றுக்கு ரூ40. ஆறு மாத சந்தாக்களுக்கும், மாதாந்தர பத்திரிகைகளுக்கு ஓராண்டு சந்தாவுக்கும் ரூ20. மாதாந்தர இதழ்களுக்கு ஆறு மாத சந்தா கிடையாது. டிசம்பர்: புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளும் அத்துடன் பத்திரிகையளவான புரோஷூரும். பைபிள் எண் 12 (ஒத்துவாக்கிய பைபிள்) பயன்படுத்தப்படுகையில் புரோஷூருடன் சேர்த்து நன்கொடை ரூ43. 1971 அல்லது 1981 பதிப்பு பைபிள் அளிக்கையில், புரோஷூருடன் சேர்த்து அதன் நன்கொடை ரூ38.

● 1975 முதல் 1979 வரையான ஆண்டுகளுக்குரிய மறுபதிப்பு செய்யப்பட்ட ஆங்கில காவற்கோபுர புத்தக தொகுப்புகளுக்கான ஆடர்களைச் சங்கம் இப்பொழுது பெற்றுகொள்ளுகிறது. லிட்ரேச்சர் ஆடர் பாரம் (S-14)-ல் தயவுசெய்து உடனடியாக உங்கள் ஆடர்களை அனுப்பிவிடுங்கள். இவை கட்டுப்பாட்டு உறுப்படிகளாகும். அதைப் பணம் காட்டி பெற்றுக்கொள்ள வேண்டும். (1960—1967 வரையான காவற்கோபுர புத்தக தொகுப்புகள் வந்துவிட்டன. அவை சபைகளுக்கு அனுப்பப்படுகின்றன என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் சந்தோஷப்படுவீர்கள்.)

● செப்டம்பர் 1, 1989 முதல் ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிக்க யாராகிலும் திட்டமிட்டால் அவர்கள் உடனடியாக விண்ணப்ப நமூனாவை பூர்த்திசெய்து ஆய்வுக்காக மூப்பர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சபையின் ஊழிய கமிட்டி அதை ஏற்று, கையொப்பமிட்ட பிறகு, அது கூடிய மட்டும் சீக்கிரமாக சங்கத்துக்கு அனுப்பப்பட வேண்டும். அங்கீகரிப்பு செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தைச் சீக்கிரமாக அனுப்பிவிடுவதன் மூலம் ஏற்கெனவே கடந்துவிட்ட தேதியில் நியமிப்பு செய்யும்படி கேட்பதைத் தவிர்க்கலாம்.—அக்டோபர் 1986 நம் ராஜ்ய ஊழியம் சேர்க்கை, பாராக்கள் 21-26-ஐ பார்க்கவும்.

● மதுரை மாவட்ட மாநாட்டு தேதி மாற்றத்தை தயவுசெய்து கவனியுங்கள்: அக்டோபர் 27-29, 1989 என்று திருத்தப்பட்டிருக்கிறது.

● நடத்தும் கண்காணி அல்லது அவரால் நியமிக்கப்பட்ட ஒருவர் கணக்குகளை செப்டம்பர் 1-ல் அல்லது கூடிய அளவு சீக்கிரமாக தணிக்கை செய்யவேண்டும்.

● மூன்று லிட்ரேச்சர் இன்வென்ட்டரி பாரங்கள் ஒவ்வொரு சபைக்கும் அனுப்பப்படும். கையிருப்பிலிருக்கும் எல்லாப் பிரசுரங்களையும் எண்ணிப் பார்க்க வேண்டும். தயவுசெய்து பாரத்தை முழுமையாகப் பூர்த்திசெய்து, மூலப் பிரதியை எங்களுக்கு செப்டம்பர் 6, 1989-க்குள் அனுப்பி வைக்கவும். ஒரு நகலை உங்களுடைய கோப்புக்கு வைத்துக்கொள்ளவும். கணக்கு போடுவதற்கு மூன்றாவது பிரதியை உபயோகிக்கவும்.

● ஆகஸ்ட் மாத சபை அறிக்கையைத் தயாரித்த உடனே சபையின் நடவடிக்கைகளைக் குறித்து சங்கத்திற்குத் தெரிவிக்கும் அறிக்கை பாரத்தைப் (S-10) பூர்த்தி செய்து, பிழையில்லாதபடி இருக்க இருமுறை கவனமாக சரிபார்த்து உடனடியாக சங்கத்துக்கு அனுப்பவும். பயனியர்களிடமிருந்து ஆகஸ்ட் மாத அறிக்கைகளைப் பெற்ற உடனே S-10 பாரத்தின் பின்பக்கத்திலுள்ள ஒழுங்கான பயனியர்களுக்குரிய தகவல் அறிக்கையை காரியதரிசி பூர்த்தி செய்யவேண்டும். கூடுமானால் இந்த மேற்சொன்ன தகவலை செப்டம்பர் 6-ம் தேதிக்குள் அனுப்பிவிடவும்.

● சபை புத்தகப்படிப்புகள் “படைப்பு” (Creation) புத்தகத்தின் படிப்பை அக்டோபர் இரண்டாவது வாரத்துடன் முடிப்பார்கள். அதன் பின்பு “வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்திருக்கிறது!” புத்தகம் படிப்புக்காக திட்டமிடப்பட்டிருக்கிறது. (இந்திய மொழிகளில்: “உச்சக்கட்டம்” புத்தகத்தைப் பயன்படுத்துவதற்குப் போதுமான அளவு ஆங்கிலம் தெரிந்த எவரும் இல்லாத இடங்களில் “என்றும் வாழலாம்” புத்தகத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவார்கள்.)

● கேரளாவில் நடைபெறும் கடைசி பயனியர் பள்ளியின் தேதிகளில் மாற்றம் இருக்கிறது. இது உப்புத்தராவில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 2, 1989 வரை நடைபெறும்.

● இந்த ஆண்டுக்குரிய மாவட்ட மாநாடுகள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுவதால் மாநாட்டு வாரத்தின்போது வழக்கம்போல் சபை புத்தகப்படிப்பு நடத்தப்படும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்