அறிவிப்புகள்
● ஏப்ரல் மாத பிரசுர அளிப்பு: உயிர்—அது இங்கு எப்படி வந்தது? பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? நன்கொடை ரூ.30-க்கு. (சிறிய அளவு புத்தகம் ரூ.15-க்கு.) இந்திய மொழிகளில் பிரசுர அளிப்பு: இருப்பதெல்லாம் இந்த வாழ்க்கைதானா? ரூ.5-க்கு. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஆண்டு சந்தா ரூ.40. விழித்தெழு! சந்தாவும் அதே முறையில் அளிக்கப்படலாம். ஆறு மாத சந்தாக்கள் மற்றும் மாத இதழ்களுக்கு ஆண்டு சந்தா ரூ.20. ஜூலை: தப்பிப்பிழைத்தல் என்ற ஆங்கில புத்தகம் ரூ.10-க்கு. (இந்திய மொழிகளில் இரண்டு பழைய புத்தகங்கள் ரூ.10-க்கு.)
● 1970-1974 ஆண்டுகளுக்குரிய மறுபதிப்பு செய்யப்பட்ட ஆங்கில காவற்கோபுரம் புத்தகத் தொகுப்புகளுக்கான ஆர்டர்களை சங்கம் இப்பொழுது ஏற்றுக்கொள்ளுகிறது. தங்களுடைய நூல்நிலையத்துக்காக இந்தப் புத்தகத் தொகுப்புகள் தேவைப்படக்கூடிய சபைகளும் தனி நபர்களும் ஒவ்வொரு ஆண்டிற்கும் தங்களுக்கு தேவையான மொத்த எண்ணிக்கையை தீர்மானித்து சபையின் மூலமாக தங்கள் தேவைகளை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். மொத்த எண்ணிக்கையானது புத்தக ஆர்டர் பாரத்தில் (S-14) பூர்த்திச் செய்து, ஏப்ரல் 1989-ன் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும். நம் ராஜ்ய ஊழியத்தில் பின்னால் அறிவிப்பு செய்யப்படும் வரை 1970-1974-ற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கான ஆர்டர்களை சமர்ப்பிக்க வேண்டாம். சங்கமானது இந்த மறுபதிப்பு செய்யப்பட்ட புத்தகத் தொகுப்புகளை கையிருப்பில் வைத்திராது. காரியத்தை தீர ஆராய்ந்து 1970 முதல் 1974 வரையான தேவைப்பட்ட புத்தகத் தொகுப்புகளுக்கு ஆர்டர் கொடுக்கும்படி நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துகிறோம். பிற்பட்ட ஆர்டர்கள் பிரதிகள் இருக்கும்வரையில் பூர்த்தி செய்யப்படும். இந்த மறுபதிப்பு தொகுப்புகள் கட்டுப்பாடு கையிருப்பு உருப்படிகளாகும். எனவே பணம் பெற்ற பின்பே கொடுக்கப்படும். இதற்கான விலை ஒன்றுக்கு ரூ.60.00.