அறிவிப்புகள்
● மார்ச் மாத பிரசுர அளிப்பு: இது நவம்பர் 1986 நம் ராஜ்ய ஊழியத்தில் அறிவிப்புகளின் கீழ் கொடுக்கப்பட்ட எந்த 192-பக்க புத்தகத்தையும் நன்கொடை ரூ.5-க்கு கொடுக்கலாம். (கிரெடிட் கேட்பது சம்பந்தமான தகவல்களுக்கு பிப்ரவரி நம் ராஜ்ய ஊழியத்தைப் பார்க்கவும்.)(பிப்ரவரி, மார்ச் அளிப்புக்காக பிரஸ்தாபிகளாலும் பயனியர்களாலும் எடுக்கப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குச் சபைகள் கிரெடிட் கேட்கலாம். இந்தப் பிரசுர அளிப்பு சமயத்தில் மட்டும் ஒழுங்கான மற்றும் விசேஷ பயனியர்களுக்கு இந்தப் புத்தகத்தின் விலை ரூ.2.50. சபை பிரஸ்தாபிகளுக்கும் துணைப்பயனியர்களுக்கும் ஒரு பிரதியின் விலை ரூ.4.50.) நல்ல தரமான தாளில் அச்சடிக்கப்பட்டிக்கும் புத்தகங்கள் இந்த விலைக்கு அளிக்கப்படமாட்டாது. பழைய புத்தகங்களைக் கொண்டிராத சபைகள் மற்ற 192-பக்க புத்தகங்களை ரூ.10-க்கு அளிக்கலாம். ஏப்ரல்: உயிர் அது இங்கு எப்படி வந்தது?—பரிணாமத்தின் மூலமா அல்லது சிருஷ்டிப்பின் மூலமா? நன்கொடை ரூ.30-க்கு. (சிறிய அளவு புத்தகம் ரூ.15-க்கு.) இந்திய மொழிகளில் பிரசுர அளிப்பு இந்த வாழ்க்கைதானா? ரூ.5-க்கு. மே, ஜூன்: காவற்கோபுரம் பத்திரிகைக்கு ஆண்டு சந்தா ரூ.40. மாத இதழ்களுக்கு ஆண்டு சந்தா ரூ.20.
● 1988-ல் உபயோகிக்கப்பட்ட அதே ஞாபகார்த்த தின குறிப்புத்தாள் (S-31 10⁄85) 1989-திலும் உபயோகிக்கப்படும்.
● ஞாபகார்த்த தின ஆசரிப்பு மார்ச் 22, 1989, புதன் கிழமை சாயங்காலம் நடைபெறும். பேச்சு முன்கூட்டியே துவங்கினாலும், அப்பமும் திராட்சரசமும், சூரிய அஸ்தமனமாகும்வரை பரிமாரத் துவங்கப்படக்கூடது என்பதை தயவுசெய்து மனதில் வையுங்கள். உங்கள் இடத்தில் சூரிய அஸ்தமனமாகும் நேரத்தை உள்ளூர் தகவல் மூலங்களிலிருந்து தெரிந்துகொள்ளவும். அன்றைய தினம் வேறு எந்தச் சபைக் கூட்டங்களும் நடத்தப்படக்கூடது. உங்கள் சபை வழக்கமாக புதன் கிழமை கூட்டங்களை நடத்தி வந்தால், வாரத்தின் வேறொரு நாளுக்கு அவற்றை மாற்றி வைத்துக்கொள்ளவும். ஊழியக் கூட்டம் பாதிக்கப்பட்டால், அந்த வாரத்துக்கு அட்டவணையிடப்பட்ட, விசேஷமாக உங்கள் சபைக்கு பொருத்தமான பகுதிகளை நீங்கள் வேறொரு ஊழியக்கூட்டத்துடன் சேர்த்து நடத்தலாம்.
● ஞாபகார்த்தத்திற்கான பைபிள் வாசிப்பு அட்டவணை: ஞாபகார்த்தத்திற்கு முன்பான ஆறு நாட்களின்போது பின்வரும் பைபிள் பகுதிகளை யாவரும் வாசிக்கும்படி உற்சாகப்படுத்துகிறோம்:
வெள்ளி, மார்ச் 17: நிசான் 9, லூக்கா 19:28-44
சனி, மார்ச் 18: நிசான் 10, லூக்கா 19:45-48; மத். 21:12, 13, 18, 19
ஞாயிறு, மார்ச் 19:
நிசான் 11, லூக்கா 20:1-26
திங்கள், மார்ச் 20: நிசான் 12, லூக்கா 22:1-6
செவ்வாய், மார்ச் 21:
நிசான் 13, லூக்கா 22:7-13; மாற்கு 14:12-16
புதன், மார்ச் 22: நிசான் 14, லூக்கா 22:14-38
●சபைகள் ராஜ்ய சேவையின் முன்னேற்றத்திற்காக அல்லது வேறு குறிப்பிட்ட நோக்கத்திற்காக சங்கத்துக்கு அனுப்பும் விசேஷ நன்கொடைகள் சபையின் மாத கணக்கு அறிக்கையில் சங்கம் பெற்றுக்கொண்டதாக காட்டப்படுகின்றன. அதோடுகூட சுருக்கமாக நன்றி தெரிவிப்பும் அதில் சேர்க்கப்பட்டிருக்கிறது. நடத்தும் கண்காணி இத்தகைய தெரிவிப்புகளை கவனித்து, ஒவ்வொரு மாதமும் கணக்கு அறிக்கை செய்யப்படுகையில், இவற்றை சபையின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும். சபைகள் அனுப்பும் நன்கொடைகளை சங்கம் பெற்றுக்கொண்டது என்றும் அவற்றிற்கு அவர்கள் நன்றி கூறுகிறார்கள் என்பதையும் சகோதரர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
●கையிருப்பிலுள்ள பிரசுரங்கள்:
Insight On the Scriptures; Revelation—Its Grand Climax At Hand; Bible No. 12 (References); Deluxe Bible No. 12 (References); Life—How Did It Get Here? By Evolution or By Creation?; Paradise Restored to Mankind by Theocracy; Theocratic Ministry School Guidebook; From Kurukshetra to Armageddon and Your Survival; In Search of A Father; Path of Divine Truth —ஆங்கிலம்
வாழ்க்கைக்கு இன்னும் அதிகம் உண்டு —மராத்தி
பாதுகாப்பான எதிர்காலம்—நீங்கள் அதை எப்படி கண்டடையலாம் —ஹிந்தி
“ராஜ்யத்தைப் பற்றிய இந்த நற்செய்தி” —பெங்காலி
என்னுடைய பைபிள் கதை புத்தகம் —மலையாளம், லூஷாய்
●ஞாபகார்த்த காலத்தின்போது கொடுக்கப்படும் விசேஷ பொதுப்பேச்சு ஏப்ரல் 2, ஞாயிறு அன்று கொடுக்கப்படும். அதன் பொருள்: “சத்தியத்திற்காக தாகமுள்ளோரே, வாருங்கள்.” இதற்கான குறிப்புத்தாள் விரைவில் அனுப்பப்படும். உங்கள் சபைக்கு அந்த வாரம் வட்டார கண்காணியின் சந்திப்பு அல்லது வட்டார மாநாடு திட்டமிடப்பட்டிருந்தால், விசேஷ பேச்சை அதற்கு அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்படும். ஞாயிற்றுகிழமை அல்லாமல் வேறு நாட்களில் கூட்டங்களை நடத்தும் சபைகள், ஏப்ரல் 3-8 தேதிக்குள் ஒரு தினத்தில் இந்த விசேஷ பேச்சை கொடுக்க ஏற்பாடு செய்யலாம்.