மே மாதத்துக்கான உங்கள் திட்டங்கள் யாவை?
1 நம்மில் அநேகருக்கு மே மாதம் கூடுதலான வெளி ஊழிய வேலைசெய்யும் காலப்பகுதியின் ஆரம்பமாக இருக்கிறது. ஊழியத்தில் அதிகரிக்கப்பட்ட வேலைக்காக தனிப்பட்ட இலக்குகளை வைப்பதற்கு வெகு பொருத்தமான ஒரு மாதமாக மே மாதம் பொதுவாக நிரூபித்திருக்கிறது.
2 மே மாதத்துக்கு உங்கள் சபை என்ன வெளிஊழிய ஏற்பாடுகள் செய்திருக்கிறது? சாயங்கால ஊழியம் உட்பட கூடுதலான வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் இருக்குமா? இந்த ஏற்பாடுகளை பயன்படுத்திக்கொண்டு மற்றவர்களோடு வெளி ஊழியத்தில் வேலை செய்ய நீங்கள் உங்கள் அட்டவணையை தக்கவாறு அமைத்துக் கொள்ள முடியுமா? குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த வேலைகளை தற்காலிகமாக ஒதுக்கி வைக்க முடியுமா?
3 ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்களை சந்திப்பதோடுகூட நீங்கள் சென்றபோது வீட்டில் இல்லாதவர்கள் அல்லது உங்களுடைய கடைசி விஜயத்தின்போது உங்களோடு பேசமுடியாதபடி அதிக வேலையாயிருந்த அக்கறையுள்ள ஆட்களை கண்டுபிடிக்க மறுமுயற்சி செய்வதற்கும் மே மாதம் ஒரு நல்ல நேரமாயிருக்கிறது. மேலுமான ஒரு சாட்சி கொடுப்பதற்கு நீங்கள் ஏற்கெனவே ஒருவேளை அநேக முயற்சிகள் செய்திருந்தாலும் உங்கள் பதிவுகளை பார்த்து இந்தத் தனிப்பட்ட நபர்களை மறுபடியும் சந்தித்து நற்செய்தியில் அவர்களுடைய அக்கறையை புதுபிக்க ஏன் முயற்சி செய்யக்கூடாது? ஒருவேளை சாயங்கால சந்திப்புகள் பலனளிப்பதாய் இருக்கமுடியும்.
4 இந்த மே மாதத்தில் அநேக சகோதரர்களும் சகோதரிகளும் துணைப்பயனியர் ஊழியம் செய்ய ஏற்பாடுகள் செய்திருக்கின்றனர். குடும்ப உத்தரவாதங்கள் உள்ள சிலரும் மேலும் முழுநேர உலகப்பிரகாரமான வேலை செய்யும் சிலரும்கூட இதில் உட்பட்டிருக்கின்றனர். மாதத்துக்கு 60 மணிநேர தேவை, சராசரியாக ஒருநாளுக்கு 2 மணிநேரம் மட்டுமே என்று அர்த்தப்படுத்துகிறது.
5 மே மாதத்தின்போது துணைப்பயனியர் ஊழியம் செய்ய சூழ்நிலைகள் உங்களை அனுமதிக்காவிடில் பயனியர்களோடு அல்லது அந்த மாதத்துக்கு தங்கள் ஊழியத்தை அதிகரிக்க முயற்சி செய்யும் மற்றவர்களோடு சில நேரம் வெளி ஊழியத்தில் செலவிடுவதன் மூலம் உங்கள் வெளி ஊழிய வேலையை அதிகரிக்க ஒருவேளை உங்களால் கூடும். யெகோவா உங்களுடைய முயற்சிகளை ஆசீர்வதிப்பார் என்று நீங்கள் உறுதியாய் இருக்கலாம். உங்கள் இலக்கை அடைய தம்முடைய ஆவியின் மூலம் அவர் உங்களுக்கு பலம் கொடுப்பார்.—நீதி. 20:18; 21:5எ.