மறுசந்திப்புகளுக்கு கவனம் செலுத்துதல்
1 சத்தியத்தில் அக்கறையை வளர்ப்பதற்கு நேரம் தேவைப்படுகிறது. ஓர் ஒழுங்கான அடிப்படையில் மறுசந்திப்புகளை செய்வதற்கு போதுமான நேரத்தை நீங்கள் அட்டவணையிடுகிறீர்களா? அநேக பிரஸ்தாபிகள் தங்கள் வெளி ஊழியத்துக்கான நேரத்தில் பாதியையாவது மறுசந்திப்புகள் செய்வதற்கும், பைபிள் படிப்புகள் நடத்துவதற்கும் செலவிடுவதை நன்மையானதாக கண்டிருக்கின்றனர். இப்படியாக, ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட அக்கறையை வளர்க்கின்றனர்.
2 நீங்கள் பயனுள்ள விதத்தில் உங்களையே கேட்டுக் கொள்ளலாம்: ‘யெகோவாவின் அன்பான ஏற்பாடுகளில் அக்கறை காண்பிக்கும் ஆட்களை கண்டுபிடிக்க நான் உண்மையிலேயே விழிப்புள்ளவனாக இருக்கிறேனா அல்லது பிரசுரங்களை ஏற்றுக்கொள்ளும் ஜனங்களிடம் மட்டும் நான் மறுசந்திப்புகளை செய்கிறேனா?’ உண்மையாய் நீதியின் பேரில் அன்பை கொண்டிருப்பவர்கள், உலகத்தில் இருக்கும் கொடுமையான நிலைமைகளின் காரணமாக பெருமூச்சுவிட்டு அழுபவர்கள், சத்தியத்துக்காக தேடிக்கொண்டிருப்பவர்கள் போன்ற இப்பேர்ப்பட்ட ஆட்களை நாம் தேடிக்கொண்டிருக்கிறோம். தனிப்பட்ட அல்லது மத காரணங்களுக்காக ஒரு நபர் பிரசுரங்களை எடுத்துக் கொள்ளாவிட்டால், அது அவருக்கு சத்தியத்தில் அக்கறை இல்லை என்றும் கடவுளுடைய அன்பான ஏற்பாடுகளுக்கு ஓர் அனலான பிரதிபலிப்பு வளர்க்கப்பட முடியாது என்றும் அர்த்தமாகாது. (லூக்கா 19:3–5) ஆனால் நாம் இதை எவ்வாறு செய்யலாம்?
3 நம்முடைய பிராந்தியத்தில் இருக்கும் சில நபர்களை அறிந்து கொள்ள அவர்களை அவ்வப்போது சந்திப்பது அதிக உதவியாயிருக்கும். அப்பொழுது சிநேகப்பான்மையான அடிப்படையில் நாம் அவர்களை அறிய வருவோம். அது அதிக கருத்தார்ந்த மற்றும் ஒழுங்கான விதத்தில் சத்தியத்தைப் பற்றிய கலந்தாலோசிப்புகளுக்கு வழியைத் திறக்கும். தெரியாதவர்களைப் பார்த்து பயப்படுவதற்கு ஜனங்களுக்கு காரணம் இருக்கிறது என்பதை நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டும். ஆகையால் அவர்களுடைய அக்கறையையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கு பொறுமையாயிருப்பது அவசியமாயிருக்கலாம். இது நேரம் மற்றும் தொடர்ந்த முயற்சியை நம்முடைய பங்கில் எடுக்கிறது. வாய்ப்பு இருக்கும் போது உங்களுக்கு இருக்கும் சில நிமிடங்களை பயன்படுத்திக் கொண்டு சத்தியத்தைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். ஒரு வசனத்தையோ அல்லது தற்போதைய பத்திரிகையில் இருக்கும் ஒரு கட்டுரையையோ கலந்தாலோசிக்க தயாராயிருங்கள். அடுத்த சந்திப்புக்குச் செல்வதற்கு அதிக அவசரமாய் இராதேயுங்கள்.
4 அந்தச் சந்திப்பு அவ்வளவு பயனுள்ளதாயில்லை என்றாலும், அந்த நபர் சிந்திப்பதற்கும் வாசிப்பதற்கும் ஆரம்பிக்க அது ஒருவேளை போதுமானதாய் இருந்திருக்கும், எதிர்கால சந்திப்புகளில் இன்னுமதிக முன்னேற்றம் செய்யப்படலாம். நம்மால் செய்ய முடிந்ததையெல்லாம் செய்த பிறகு, அந்த அக்கறையை வளரச் செய்பவர் கடவுள் என்பதை நாம் அறிவோம், இதற்காக நாம் ஜெபிக்கிறோம். (1 கொரி. 3:6, 7) என்றபோதிலும், நடுவதும் பண்படுத்துவதுமாகிய நம்முடைய வேலையில் அக்கறை காண்பிக்காதவர்களை அகற்றுவதும் உட்பட்டிருக்கிறது, மறுசந்திப்புகள் செய்வதற்கு அதிகமான அழுத்தத்தைக் கொடுப்பது நாம் அதை திறம்பட்ட விதமாக செய்வதற்கு, நமக்கு உதவி செய்யும்.