பொருளடக்கம்
ஜூன் 27, 2016–ஜூலை 3, 2016
3 பிரச்சினைகளை அன்பினால் சரிசெய்யுங்கள்
நாம் தவறு செய்யும் இயல்புள்ளவர்களாக இருப்பதால் சகோதர சகோதரிகளோடு நமக்கு ஏதாவது பிரச்சினைகள் வரலாம். பிரச்சினைகளை சரி செய்யவும் சமாதானமாக இருக்கவும் உதவுகிற பைபிள் நியமங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஜூலை 4-10, 2016
8 ‘புறப்படுங்கள், எல்லாத் தேசத்தாரையும் சீடராக்குங்கள்’
மத்தேயு 24:14-ல் இயேசு சொன்ன வேலையை இன்று யெகோவாவின் சாட்சிகள் மட்டும்தான் செய்கிறார்கள் என்று எப்படி சொல்லலாம்? ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக்குவேன்’ என்று இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? (மத். 4:19) இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் தெரிந்துகொள்வோம்.
ஜூலை 11-17, 2016
13 யெகோவாவுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா?
நீங்கள் எப்படி தீர்மானம் எடுக்கிறீர்கள்? உங்களுக்கு பிடித்த மாதிரி தீர்மானம் எடுக்கிறீர்களா? அல்லது உங்களுக்காக மற்றவர்களை தீர்மானம் எடுக்கும்படி கேட்கிறீர்களா? யெகோவா யோசிக்கும் விதத்தைப் பற்றி தெரிந்துகொள்வது சரியான தீர்மானத்தை எடுக்க எப்படி உதவும் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
ஜூலை 18-24, 2016
18 நீங்கள் இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா?
ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு உங்கள் வாழ்க்கையில் பெரிய பெரிய மாற்றங்களை செய்திருப்பீர்கள். ஆனால், இப்போது சின்ன சின்ன விஷயங்களில் மாற்றம் செய்வது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா? அதை செய்வது உங்களுக்கு ஏன் கஷ்டமாக இருக்கிறது என்பதையும் பைபிள் உங்களுக்கு எப்படி உதவும் என்பதையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஜூலை 25-31, 2016
23 நீங்கள் எல்லா பிரசுரங்களையும் படிக்கிறீர்களா?
சில பிரசுரங்களை படிக்காமல் விட்டுவிடுவதற்கு எது காரணமாக இருக்கலாம்? யெகோவா கொடுக்கும் எல்லா பிரசுரங்களிலிருந்து நன்மையடைய என்ன செய்ய வேண்டும்? இந்த கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் பார்க்கலாம்.