உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w07 8/15 பக். 32
  • பைபிள் ஓர் உன்னத இலக்கியம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பைபிள் ஓர் உன்னத இலக்கியம்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
w07 8/15 பக். 32

பைபிள் ஓர் உன்னத இலக்கியம்

ப ண்டைய கிரேக்கர்களின் புகழ்பெற்ற இரு காவியங்களான இலியட் அல்லது ஒடிஸி-யை எப்போதாவது வாசித்திருக்கிறீர்களா? இவை பொ.ச.மு. ஒன்பதாம் அல்லது எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகக் கருதப்படுகின்றன. இவற்றைவிட பல நூற்றாண்டுகளுக்கு முன்பே பைபிள் எழுத ஆரம்பிக்கப்பட்டது. பைபிளையும் இவற்றையும் ஒப்பிடும்போது என்ன புலப்படுகிறது? யூத பைபிளும் கிறிஸ்தவ பைபிளும் என்ற ஆங்கில தொகுப்பு இவ்வாறு குறிப்பிடுகிறது: “இலக்கியங்கள் மற்றும் எழுதப்பட்ட ஆவணங்களிலிருந்து குறைந்தபட்சம் 429 மேற்கோள்கள் பைபிளில் காணப்படுகின்றன. இலக்கியங்களிலிருந்து ஒரேயொரு மேற்கோள் மட்டுமே இலியட்-டில் காணப்படுகிறது என்பதையும் ஒடிஸி-யில் அதுவும்கூட காணப்படுவதில்லை என்பதையும் எண்ணிப் பார்க்கையில் இதன் [பைபிளின்] சிறப்பம்சம் புலப்படுகிறது.”

“பண்டைய இஸ்ரவேலரின் இறை வழிபாட்டில் எழுதுவது முக்கியப் பங்கு வகித்ததாகத் தெரிகிறது” என்று தி ஆக்ஸ்ஃபோர்ட் என்ஸைக்ளோப்பீடியா ஆஃப் ஆர்க்கியாலஜி இன் த நியர் ஈஸ்ட் தெரிவிக்கிறது. உதாரணமாக, நியாயப்பிரமாண சட்டம் எழுத்தில் வடிக்கப்பட்டது; பின்னர், ஆண்களும் பெண்களும் பிள்ளைகளும் குழுமியிருந்த பொது இடத்தில் அது வாசிக்கப்பட்டது. மக்கள் கூட்டாகவும் தனித்தனியாகவும் அதை வாசித்தார்கள், ஆராய்ந்து படித்தார்கள். நியாயப்பிரமாண சட்டத்தின் அம்சங்கள் சிலவற்றை ஆராய்ந்தபின் லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பேராசிரியரான ஆலன் மிலர்ட் இவ்வாறு தெரிவிக்கிறார்: இஸ்ரவேலிலுள்ள “எல்லாத் தரப்பு மக்களும் எழுதப் படிக்கத் தெரிந்திருப்பார்கள் என்பதாக [பைபிள் எழுத்தாளர்கள்] எண்ணினார்கள்.”—உபாகமம் 31:9-13; யோசுவா 1:8; நெகேமியா 8:13-15; சங்கீதம் 1:2.

கிறிஸ்தவர்கள் இந்தப் பரிசுத்த எழுத்துக்களை எப்படிக் கருத வேண்டுமென்பதை அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு விளக்குகிறார்: “தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.” பைபிளைத் தவறாமல் வாசிப்பதன்மூலம் அதை உயர்வாய் மதிக்கிறீர்கள் என்பதைத் நீங்கள் தனிப்பட்ட விதமாகக் காட்டுகிறீர்களா?—ரோமர் 15:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்