அழைப்பிதழ் . . .
பூமி இன்னமும் கடவுளுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறதா?
இயற்கைப் பேரழிவுகள், உயிர்க்கொல்லி நோய்கள், அதிகாரிகளின் ஊழல்கள், தீவிரவாத தாக்குதல்கள், போர்கள், குற்றச்செயல்கள். இவற்றைப் பற்றி நாம் கேள்விப்படாத நாளே இல்லை. இவற்றால் தனிப்பட்ட விதமாக பாதிக்கப்பட்டாலும் சரி, பாதிக்கப்படாவிட்டாலும் சரி, இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது, இதற்கெல்லாம் என்றாவது ஒரு முடிவு வருமா போன்ற கேள்விகள் அநேகரது மனதைக் குடைந்துகொண்டே இருக்கின்றன.
இக்கேள்விகளுக்கு, பூமி இன்னமும் கடவுளுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறதா? என்ற காலத்திற்கேற்ற சொற்பொழிவு பதிலளிக்கும்; உலகமுழுவதும் 200-க்கும் மேற்பட்ட தேசங்களில் உள்ள யெகோவாவின் சாட்சிகள் இதை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பின்வரும் கேள்விகளுக்கு கடவுள் தமது நம்பகமான வார்த்தையாகிய பைபிளில் என்ன சொல்லியிருக்கிறார், என்ன வாக்குறுதி கொடுத்திருக்கிறார் என்பதெல்லாம் அப்பேச்சில் விளக்கப்படும்.
உலக விவகாரங்களில் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
மனிதகுலத்தைக் குறித்து அவர் எப்படி உணருகிறார்?
உங்களுடைய நலனில் அவருக்கு அக்கறை இருக்கிறதா?
பெரும்பாலான இடங்களில், ஏப்ரல் 30, 2006 ஞாயிற்றுக்கிழமை யெகோவாவின் சாட்சிகளுடைய ராஜ்ய மன்றங்களில் இப்பேச்சு கொடுக்கப்படும். அதற்கான நேரத்தையும் விலாசத்தையும் உங்கள் பகுதியில் வசிக்கும் யெகோவாவின் சாட்சிகள் தெரிவிப்பார்கள்.
“பூமி இன்னமும் கடவுளுடைய அதிகாரத்தின்கீழ் இருக்கிறதா?” என்ற உற்சாகமூட்டும் சொற்பொழிவைக் கேட்க வரும்படி உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.